அமெரிக்காவில் வேலைகளை இழந்தோர் தொகை 38.6 மில்லியன்

USFlag

கரோனா காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர் தமது வேலைகளை இழக்கும் வேகம் குறைந்து வந்தாலும், கடந்த 7 நாட்களிலில் மேலும் 2.4 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் மார்ச் மாதம் முதல் மொத்தம் 38.6 மில்லியன் பேர் தமது தொழிலை இழந்து உள்ளனர்.
.
முடக்கம் காரணமாக கடந்த பெப்ருவரி மாதம் தொழில் புரிந்தோரில் 1/4 பங்கினர் தமது தொழிலை இழந்து உள்ளனர். அதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை 14.7% ஆக உயர்ந்து உள்ளது.
.
தமது வேலைகளை இழந்த 38.6 மில்லியன் மக்களுக்கு சட்டப்படியான காப்புறுதி பணம் வழங்க மாநில அரசுகள் பெருமளவு பணத்தை கடன் பெறவுள்ளன.
.
அத்துடன் தமது தொழிலை இழக்காதோருள் பலர் குறைந்த மணித்தியாலங்களுக்கு மட்டுமே வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் Census Bureau வின் தவுகளின்படி 47% குடும்பங்கள் முடக்கத்தினால் தமது குடும்ப வருமானம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாக கூறி உள்ளன.
.
அமெரிக்காவின் பல மாநிலங்கள் குறைந்த அளவில் மீண்டும் வர்த்தகங்களை ஆரம்பித்து உள்ளதால், வரும் காலங்களில் பாரிய வேலை இழப்புக்கள் தொடராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
சில மாநிலங்கள் குறைந்த அளவில் தொழில்களை இழக்க, சில மாநிலங்கள் பெருமளவு தொழில்களை இழந்து உள்ளன. Michigan மாநிலத்தில் வேலைவாய்ப்பு இன்மை 22.7% ஆக உள்ளது. California மாநிலத்தில் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இன்மை 25% ஆகவும், Washington 15.4% ஆகவும், Rhode Island மாநிலத்தில் 17.0% ஆகவும், New Jersey மாநிலத்தில் 15.3% ஆகவும் உள்ளன.
.