AAP முதலமைச்சர் Kejriwal நிரபராதி, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

AAP முதலமைச்சர் Kejriwal நிரபராதி, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், 2024ம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் மோதி தலைமையிலான அரசு Aam Admi Party (AAP) கட்சியின் முன்னாள் டெல்லி முதலமைச்சர் Arvind Kejriwal ஐயும் மேலும் 23 அக்கட்சி உறுப்பினர்களையும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த இந்திய உயர் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் Kejriwal குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு கூறியுள்ளது. அத்துடன் இந்த அரைகுறை குற்றச்சாட்டை முன்வைத்து Kejriwal ஐ கைது செய்த Central Bureau of Investigation (CBI) அதிகாரிகளை விசாரணை செய்யவும் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2024ம் ஆண்டு இந்திய தேர்தலுக்கு முன் தம்மை மோதி அரசு கைது செய்தமை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று AAP கட்சி பா.ஜ. கட்சியை சாடியுள்ளது.

டெல்லி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் Kejriwal லின் அரசு நடைமுறை மதுபான சட்டம் தனியாருக்கு சாதகமாக அமைந்து என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இந்த சட்டம் டெல்லி ஆளுநரின் எதிர்ப்பு காரணமாக பின்னர் கைவிடப்பட்டு இருந்தது.