அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது முதலாம் ஆட்சியில், 2020ம் ஆண்டில், UAE, பஹ்ரைன் ஆகிய 2 நாடுகளையும் Abraham Accords என்ற இணக்கம் மூலம் இஸ்ரேலுடன் கூட்டு சேர வைத்திருந்தார்.
தற்போது அமெரிக்கா ஈரானுடன் செய்யவுள்ள இணக்கத்துக்கு நிபந்தனையாக மேற்படி Abraham Accords இல் சவுதி, கட்டார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளும் இணையவேண்டும் என்று ரம்ப் திங்கள் கூறியுள்ளார்.
மேற்படி Abraham Accords பலஸ்தீனர் உரிமையை உறுதிப்படுத்தாது, லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள இடங்களை விட்டு வெளியேற கூறாது இஸ்ரேல் நலனுக்காக வரையப்பட்டது.
பலஸ்தீனர் நாடு அமையாதவரை Abraham Accords இல் இணையப்போவது இல்லை என்று சவுதி முன்னரே அறிவித்துள்ளது.
