இந்திய அரசின் கையில் இருந்த Air India விமான சேவையை Tata நிறுவனமும், Singapore Airlines விமான சேவையும் கூட்டாக கொள்வனவு செய்து இயக்கினாலும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் அதன் வர்த்தக ஆண்டில் மொத்தம் $1.6 பில்லியன் நட்டம் அடையவுள்ளது.
Air India வரலாற்றில் $1.6 பில்லியன் இழப்பே மிகப்பெரிய இழப்பாகும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக Air India விமானங்கள் பாகிஸ்தான் மேலால் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பறக்க முடியாது. சீனாவுக்கு மேலால் பறக்கும் உரிமையும் இதுவரை கிடைக்கவில்லை.
அதனால் Air India நீண்ட சுற்று பாதை வழியே பறக்க தள்ளப்பட்டு உள்ளது. அது செலவை அதிகரிக்க செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு மேலால் பறக்க உரிமை கொண்ட விமான சேவைகள் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க சேவைகளை குறைந்த கட்டணத்திலும், குறைந்த நேரத்திலும் வழங்குகின்றன.
அத்துடன் அண்மையில் லண்டன் நகரை நோக்கி சென்ற Air India ஒன்று மேலேறி சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்க ஒருவரை தவிர ஏனையோர் பலியாகி இருந்தனர். அந்த விபத்தும் செலவை அதிகரித்து உள்ளது.
