இந்தியாவின் 158 ஆண்டுகள் பழமைவாய்ந்த நிறுவனமான TATA நிறுவனத்துள் மீண்டும் பெரும் அதிகார போட்டி ஆரம்பித்துள்ளது. 2027ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் Tata Sons நிறுவனத்தின் Chairman பதவியை கைவிட இருந்த நடராஜன் சந்திரசேகரன் Tata Sons சபையின் விருப்பத்துக்கு இணங்க அந்த முடிவை கைவிட்டு மூன்றாம் தடவையாக மேலும் 5 ஆண்டுகள் Tata Sons நிறுவனத்தின் Chairman ஆக பதவி வகிக்க இணங்கி இருந்தார். ஆனால் Tata Sons நிறுவனத்தின் 66% உரிமை கொண்ட தாய் நிறுவனமான […]
அமெரிக்கா தயாரித்த, சவுதி வான்படைக்கு சொந்தமான F-15 வகை யுத்த விமானம் ஒன்றை யெமென் நாட்டின் கூத்தி (Houthis) குழு சுட்டு வீழ்த்தியுள்ளது. கூத்தி விழுந்த விமானத்தின் வீடியோ ஒன்றை காட்டி இருந்தாலும் சவுதி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. இந்த விமானத்தின் அடையாள இலக்கம் (tail number) 5539 என்றும் வீடியோவில் தெரிகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் தற்போது சவுதிக்கும், கூத்திக்கும் இடையேயும் பரவி உள்ளது. கூத்தி ஈரானின் ஆதரவை பெறும் […]
உலகின் பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் சனத்தொகை வீழ்ச்சி அடைந்தாலும் இவற்றுள் பல நாடுகள், குறிப்பாக மேற்கு நாடுகள், குடிவரவு மூலம் தமது சனத்தொகையை அதிகரிக்க வைக்கின்றன. ஆனால் ஜப்பானின் சனத்தொகை நம் கண் முன்னே ஆவியாகி வருகிறது. ஜப்பானில் தற்போது 100 வயதை தாண்டியோர் தொகை 107,677 ஆக உள்ளது. அதில் 80% முதியோர் பெண்கள். 1963ம் ஆண்டில் அங்கு 100 வயதை தாண்டியோர் தொகை 153 ஆகவும், 1981ம் ஆண்டில் இத்தொகை 1,000 ஆகவும், 1998ம் […]
ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அழிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) திங்கள் வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை இதுவரை கசிந்து வந்த அழிவு உண்மைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. குவைத், பஹ்ரைன், கட்டார், UAE, சவுதி, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் இருந்த பலநூறு அமெரிக்க படைகளின் தளங்களை ஈரான் தாக்கி அழித்தமையை இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்க படைகளின் ஆயுத மற்றும் ஏவுகணை கையிருப்பு பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதையும் அறிக்கை […]
இந்தியாவின் தலைநகர் நியூ டெல்லியில் 12ம், 13ம் திகதிகளில் இடம்பெறும் 18ம் BRICS அமர்வில் இதன் அனைத்து உறுப்பு நாடுகளின் இணக்கப்பாட்டுடன் கூட்டு அறிக்கை (joint statement) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது யுத்தத்தில் ஈடுபட்டுள்ள BRICS அங்கத்துவம் கொண்ட நாடுகளான ஈரான், UAE ஆகிய இரண்டும் கூடவே இணங்கி உள்ளன. அத்துடன் BRICS அமர்வுக்கு வந்திருந்த ஈரானின் சனாதிபதியும், UAEயின் முடிக்குரிய இளவரசரும் நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளனர். இந்திய பிரதமர் மோதி BRICS வயதுக்கு வந்துவிட்டதாக (had come of […]
ஈரான் சார்பு ஆயுத குழு ஒன்று ஈராக்கில் இருந்து ஏவிய ஏவுகணை அல்லது drone தாக்குதலால் சவுதியின் கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய் (East-West Pipeline) சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு பலர் காயப்பட்டு உள்ளதாகவும், pumping station உட்பட குழாய் கட்டுமானங்கள் அழிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹோர்முஸ் கப்பல் பாதையை ஈரான் மூடிய பின் சவுதி கிழக்கு பகுதியில் கிடைக்கும் மசகு எண்ணெய்யை கிழக்கு-மேற்கு குழாய் மூலம் மேற்கே அனுப்பி அங்கிருந்து செங்கடல் வழியாக ஏனைய நாடுகளுக்கு […]
ஹோர்முஸ் கப்பல் பாதை முடங்கியது போல் செங்கடல் கப்பல் பாதையும் முடங்கலாம் என்ற நிலை தோன்றியதால் மசகு எண்ணெய்யின் விலை பரல் ஒன்றுக்கு $105 ஆக உயர்ந்துள்ளது. ஈரானின் ஆதரவு கொண்ட யெமென் நாட்டு ஆயுத குழுவான கூதி (Houthi) செங்கடல் கரையோர யெமென் நகரான Mocha வை வியாழன் கைப்பற்றி உள்ளது. இங்கிருந்து கூதி இலகுவில் செங்கடலையும் Aden குடாவையும் இணைக்கும் Bab al-Mandeb நீரிணையை கட்டுப்படுத்தி முடக்கலாம். சூயஸ் கால்வாய் ஊடு செல்லும் கப்பல்கள் […]
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள midterm தேர்தலில் தனது கட்சியான Republican கட்சி காங்கிரசின் Senate, House ஆகிய இரண்டு சபைகளையும் பெரும்பான்மை ஆசனங்களுடன் வென்றால் வாக்களிக்கும் வயதுடைய ஒவ்வொருவருக்கும் $5,000 வழங்க உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதன்கிழமை கூறியுள்ளார். இந்த தொகையை ரம்ப் “Trump dividend” என்றும் அழைத்துள்ளார். முதலாவது குறிப்பு, ரம்புக்கு நிறுவனம் ஒன்று தனது பங்காளருக்கு இலாபத்தின் ஒரு பகுதியை dividend ஆக வழங்குவதற்கும், சட்டத்துக்கு முரணாக, சனநாயகத்துக்கு முரணாக வாக்கு வாங்குவதற்கும் இடையேயான வித்தியாசம் […]
இதுவரை கனடிய பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை மட்டும் நடைமுறை செய்த ரம்ப் தற்போது கனடிய பால் உணவுகள், மதுபானம், வாகனம் போன்றவற்றுக்கு செவ்வாய்க்கிழமை முற்றாக இறக்குமதி தடை அறிவித்துள்ளார். இந்த தடை செப்டம்பர் 29ம் நடைமுறைக்கு வரும். கடந்த மாதம் ரம்ப் $20 பில்லியன் பெறுமதியான கனடிய பொருட்களுக்கு 50% மேலதிக வரியை அறிவிக்க, கனடா பதிலுக்கு அதே அளவு பெறுமதியான சில அமெரிக்க பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரியை அறிவித்தது. அதனால் மூர்க்கம் கொண்ட ரம்ப் […]
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனர் நிலமாகிய West Bank பகுதியில் இஸ்ரேலிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பிரித்தானியா தடை விதிக்கவுள்ளது. இந்த அறிவிப்பை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Ed Miliband இன்று செவ்வாய் பிற்பகல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என்று தெரியவருகிறது. பிரித்தானியாவின் புதிய பிரதமர் Andy Burnham இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் (two-state solution) அருகருகே இருப்பதன் அவசியத்தை வற்புறுத்தி உள்ளார். அண்மையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள West Bank பகுதியில் E1 குடியிருப்பு என்ற […]