பிரித்தானியாவில் புதிய இரட்டை குடியுரிமை கடவுச்சீட்டு விதிகள்

பிரித்தானியாவில் புதிய இரட்டை குடியுரிமை கடவுச்சீட்டு விதிகள்

பெப்ரவரி மாதம் 25ம் திகதி முதல் பிரித்தானியாவின் குடியுரிமையையும் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையையும் கொண்டவர்களுக்கு (dual-citizen) புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இவர்களின் இரண்டாம் குடியுரிமை இலங்கை போன்ற பிரித்தானியாவுக்கான விசா தேவையான நாடுகளின் குடியுரிமையாக இருப்பின் இவர்கள் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது பிரித்தானியாவின் certification of entitlement என்ற புதிய ஆவணத்தை கொண்டிருந்தால் மட்டுமே இவர்கள் பிரித்தானியா திரும்ப முடியும். பிரித்தானியாவில் கடவுச்சீட்டு ஒன்றுக்கான கட்டணம் 100 பவுண்ட்ஸ் ஆக இருக்கையில், புதிய certification of […]

ஈரான் அருகில் ரம்ப் ஆயுத குவிப்பு; மிரட்டலா, யுத்தமா?

ஈரான் அருகில் ரம்ப் ஆயுத குவிப்பு; மிரட்டலா, யுத்தமா?

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஈரான் அருகே பெருமளவு ஆயுதங்களை குவித்து வருகிறார். இந்த குவிப்பு வெறும் மிரட்டலா, அல்லது ஈரான் மீதான தாக்குதலுக்கான தயார்படுத்தலா என்பது சில கிழமைகளுக்குள் தெரிந்துவிடும். USS Abraham Lincoln, USS Gerald R. Ford ஆகிய அமெரிக்காவின் 2 விமானம் தாங்கி கப்பல்கள் வளைகுடாவுக்கு சென்றுள்ளன. அவற்றுடன் பெருமளவு தாக்குதல் கப்பல்களும் வளைகுடா சென்றுள்ளன. பிரித்தானியாவில் நிலைகொண்டுள்ள யுத்த விமானங்களுக்கு வானத்தில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்காவின் விமானங்களும் (refueling tankers) வளைகுடாவை அண்டிய பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. ஜோர்டான், பஹ்ரைன், […]

இஸ்ரேலில் 65% யூத கொலைகள் துலக்கம், பலஸ்தீனரில் 15%

இஸ்ரேலில் 65% யூத கொலைகள் துலக்கம், பலஸ்தீனரில் 15%

காசாவில் வாழும் பலஸ்தீனருக்கும், West Bank பலஸ்தீனருக்கும் அப்பால் இஸ்ரேலுள்ளும் பெரும்தொகை பலஸ்தீனர் வாழ்கிறார்கள். இஸ்ரேல் குடியுரிமை கொண்ட இவர்கள் மொத்த இஸ்ரேல் சனத்தொகையின் 20%. காசா மற்றும் West Bank பலஸ்தீனரை மட்டுமன்றி இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட பலஸ்தீனரையும் கடுமையாக வஞ்சிக்கிறது இஸ்ரேல். கடந்த ஆண்டு இஸ்ரேல் யூதர்கள் மத்தியில் இடம்பெற்ற கொலைகளில் 65% கொலைகளை இஸ்ரேல் போலீசார் முழு மனதுடன் விசாரணை செய்து கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ளனர் என்றும் ஆனால் இஸ்ரேல் பலஸ்தீனர் மத்தியில் இடம்பெற்ற கொலைகளில் 15% […]

கனேடியர், பிரித்தானியர் விசா இன்றி சீனா பயணிக்கலாம் 

கனேடியர், பிரித்தானியர் விசா இன்றி சீனா பயணிக்கலாம் 

கனடிய மற்றும் பிரித்தானிய பிரதமர்கள் அண்மையில் சீனா சென்று சீனாவுடனான உறவை புதுப்பித்ததன் காரணமாக சீனா மேற்படி இரண்டு நாட்டவரும் விசா இன்றி 30 தினங்களுக்கு சீனா பயணிக்க வசதி செய்கிறது. இந்த மாதம் 17ம் திகதி முதல் கனடிய மற்றும் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்போர் சீனாவுக்கு 30 தினங்கள் விசா இன்றி பயணிக்க முடியும். இந்த வசதி குறைந்தது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, […]

பழைய அரசியலில் முடிந்த பங்களாதேச மாணவர் புரட்சி

பழைய அரசியலில் முடிந்த பங்களாதேச மாணவர் புரட்சி

இலங்கையில் இடம்பெற்ற அரகளைய புரட்சி இலங்கையோ, உலகமோ எதிர்பார்க்காத வகையில் JVP வழிவந்த அனுர தலைமையிலான ஒரு புதிய ஆட்சியை இலங்கைக்கு வழங்கி இருந்தது. ஆனால் பங்களாதேசத்தில் இலங்கை புரட்சிக்கு பின் இடம்பெற்ற மாணவர் புரட்சி ஒரு பழைய கட்சியை விரட்டி மற்றைய பழைய கட்சியை இன்று ஆட்சியில் அமர்த்துகிறது. 1949ம் ஆண்டு முதல் ஒரு பிரதான கட்சியாக இருந்த Awami League கட்சியை அண்மையில் புரட்சி மூலம் விரட்டிய பங்களாதேஷ் தற்போது 1978ம் ஆண்டு முதல் மற்றொரு பிரதான […]

கனடா மீதான ரம்பின் வரிகளை முறியடித்த 6 ரம்ப் கட்சியினர்

கனடா மீதான ரம்பின் வரிகளை முறியடித்த 6 ரம்ப் கட்சியினர்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் கனடிய பொருட்கள் மீது திணித்த புதிய இறக்குமதி வரிகளை (tariffs) இரத்து செய்ய Democratic கட்சியினர் காங்கிரசில் வாக்கெடுப்புக்கு எடுத்த தீர்மானத்தை 6 Republican கட்சி உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தால் சில வரிகள் இரத்து செய்யப்படுகின்றன. தனது கட்சியினர் தனது வரிக்கு எதிராக வாக்களித்தால் விசனம் கொண்டுள்ளார் ரம்ப்.  Thomas Massie (Kentucky மாநிலம்), Don Bacon (Nebraska மாநிலம்), Kevin Kiley (California மாநிலம்), Jeff Hurd (Colorado மாநிலம்), Brian Fitzpatrick (Pennsylvania […]

சிறிய கனேடிய பாடசாலை வன்முறைக்கு 10 பேர் பலி 

சிறிய கனேடிய பாடசாலை வன்முறைக்கு 10 பேர் பலி 

கனடாவின் British Columbia மாநிலத்தில் உள்ள Tumbler Ridge என்ற சிறு நகரின் Tumbler Ridge Secondary பாடசாலையில் செவ்வாய் இடம்பெற்ற  வன்முறைக்கு 7 பேரும், சந்தேக நபரும், அப்பகுதி வீடு ஒன்றில் மேலும் இருவரும் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 27 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர். சந்தேகநபர் தன்னை தானே காயப்படுத்தி மரணமானதாகவும் கூறப்படுகிறது. பலியானோர் விபரங்கள், சந்தேக நபரின் விபரங்கள், தாக்குதலுக்கான நோக்கங்கள் என்பன இதுவரை போலீசாரால் வெளியிடப்படவில்லை. ஆனாலும் சம்பவ நேரத்தில் […]

புதிய கனடா-அமெரிக்கா பாலத்தை தடுப்பேன் என்கிறார் ரம்ப் 

புதிய கனடா-அமெரிக்கா பாலத்தை தடுப்பேன் என்கிறார் ரம்ப் 

கனடாவின் Ontario மாநிலத்து Windsor நகரத்தையும் அமெரிக்காவின் Michigan மாநிலத்து Detroit நகரத்தையும் இணைக்க $4 பில்லியனுக்கும் மேலான செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட Gordie Howe International Bridge என்ற பால திறப்பு விழாவை தடுப்பேன் என்கிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். ரம்ப் தனது பதிவில் “I will not allow this bridge to open until the United States is fully compensated for everything we have given them, and […]

கனடாவுக்கு FIFA World Cup 2026 Visa என்று விசா இல்லை 

கனடாவுக்கு FIFA World Cup 2026 Visa என்று விசா இல்லை 

கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 2026ம் ஆண்டுக்கான FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகளை பார்வையிட செல்வோருக்கு விசேடமாக விசா இல்லை என்றும், வழமையான visitor விசாவே FIFA போட்டிகளை பார்வையிட வருவோருக்கு உரியது என்றும் கனடா கூறியுள்ளது. திருட்டு நோக்கம் கொண்ட குடிவரவு முகவர்கள் பொய்யான FIFA விசா ஆசை காட்டி பணம் பறிக்க முயல்கின்றனர் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. கனடா செல்வதற்கு விசா தேவையற்ற நாட்டவர் eTA என்ற electronic travel authorization […]

15 மாதங்களாக சீனா தங்கத்தை கொள்வனவு செய்திருந்தது 

15 மாதங்களாக சீனா தங்கத்தை கொள்வனவு செய்திருந்தது 

சீன மத்திய வங்கியான People’s Bank of China (PBOC) கடந்த 15 மாதங்களாக தங்கத்தை கொள்வனவு செய்துள்ளது என்பது அதன் தங்க கையிருப்பு மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 2025ம் ஆண்டு PBOC 74.15 மில்லியன் troy அவுன்ஸ் தங்கத்தை சேமிப்பாக கையிருப்பில் கொண்டிருந்தது. அடுத்த மாதம், 2026ம் ஆண்டு ஜனவரியில் அத்தொகை 74.19 ஆக அதிகரித்து உள்ளது. இக்காலத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $5,500 ஐ தாண்டி இருந்தது. அதாவது டிசம்பர் மாதத்தில் $319.45 பில்லியன் பெறுமதியான […]

1 2 3 382