இன்று பல நாடுகளிடம் அணுக்குண்டு ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும் தலையில் இந்த அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகள் பழைய முறை எரிபொருளை பயன்படுத்தியே ஏவப்படும், பயணிக்கும் (அல்லது ஹிரோஷிமாவில் போடப்பட்டதுபோல் விமானத்தில் இருந்து போடப்படும்). ஆனால் ரஷ்ய சனாதிபதி தாம் அணு சக்தியில் பயணிக்கும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக கூறியுள்ளார். அக்டோபர் 21ம் திகதி இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக ரஷ்ய ஜெனரல் Gerasimov கூறியுள்ளார். Burevestnik என்ற இந்த ஏவுகணை முதலில் திண்ம எரிபொருளை (solid […]
தனது வரி (tariff) கொள்கைகளை அவமதிக்கும் நோக்கில், முன்னாள் அமெரிக்க சனாதிபதி Ronald Reagan னின் பேச்சு ஒன்றின் துண்டங்களை பயன்படுத்தி, Ontario மாநில அரசு அமெரிக்க தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒன்றை செய்ததால் விசனம் கொண்ட ரம்ப் கனடா மீதான இறக்குமதி வரியை சனிக்கிழமை 10% ஆல் அதிகரித்து உள்ளார். 1987ம் ஆண்டு இறக்குமதி வரிகள் தொடர்பாக Reagan செய்த இந்த தொலைக்காட்சி உரை உண்மையானது என்றாலும் ரம்ப் இதை fake செய்தி என்றுள்ளார். இதே காரணத்துக்காக கனடாவுடனான […]
லத்தீன் அமெரிக்கா நோக்கி அமெரிக்காவின் USS Gerald Ford என்ற விமானம் தாங்கி கப்பலை அனுப்புகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். இந்த நகர்வை ரம்ப் வெள்ளி தெரிவித்துள்ளார். அண்மை காலங்களில் ரம்ப் வெனிசுஏலா, கொலம்பியா போன்ற சில லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் முரண்பட்டு வருகிறார். அதன் ஒரு அங்கமே இந்த விமானம் தங்கியின் பயணம். ஏற்கனவே அமெரிக்க படைகள் லத்தீன் அமெரிக்க பகுதியில் நிலை கொண்டு உள்ளன. இவர்களுடன் 8 யுத்த கப்பல்கள், 1 அணு சக்தி […]
இலங்கையின் வடக்கே மீண்டும் சீனாவின் சூரிய சக்தி மற்றும் காற்று மூலமான மின் உற்பத்தி நடவடிக்கைகள்ஆரம்பமாகலாம். முனைய சில திட்டங்கள் முறிந்து போனதாலேயே மீண்டும் சீனா வடக்கே முதலீடும் வாய்க்கு தோன்றியுள்ளது. 2021ம் ஆண்டு நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய 3 தீவுகளிலும் சூரிய சக்தி மூலமான மின்னை உற்பத்தி செய்யும் உரிமை சீனாவின் Sinosar-Etechwin நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் மேற்படி திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் என்று இந்தியா அடம்பிடித்தால் இரத்து செய்யப்பட்டிருந்தது. உடனே […]
யூக்கிறேன் யுத்த நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய சனாதிபதி பூட்டினை ஹங்கேரி என்ற நாட்டில் இரண்டாம் தடவையும் நேரடியாக சந்தித்து உரையாடும் முயற்சியை அமெரிக்க சனாதிபதி ரம்ப் கைவிட்டு உள்ளார். அண்மையில் அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் இடம்பெற்ற முதலாவது நேரடி சந்திப்பும் பயன் எதையும் வழங்கி இருக்கவில்லை. இரண்டாம் சந்திப்பும் அவ்வாறே அமையும் என்ற கணிப்பு ரம்பை சூழ்ந்திருக்கலாம். அத்துடன் ரம்ப் ரஷ்யாவின் Rosneft, Lukoil ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதித்துள்ளார். ஆனாலும் […]
2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் சனாதிபதியாக பதவி வகித்த சர்கோஸி (Nicolas Sarkozy) தனது 5 ஆண்டு சிறை தண்டனையை தொடர பாரிஸில் உள்ள La Sante சிறைச்சாலைக்கு செவ்வாய் சென்றுள்ளார். தற்போது 70 வயதான சரோஸ்கி முன்னாள் லிபிய (Libya) தலைவர் கடாபியிடம் இருந்து பல மில்லியன் டாலர்கள் இலஞ்சம் பெற்று தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. சரோஸ்கிக்கு 9 முதல் 12 சதுர மீட்டர் பரப்பளவு […]
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தவுள்ளது என்று இந்திய பிரதமர் மோதி தனக்கு கூறியதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு மோதி கூறவில்லை என்று இந்தியா ரம்பின் கூற்றை மறுத்து இருந்தது. பின் வியாழன் இந்தியா தனது ரஷ்ய எரிபொருள் கொள்வனவை 1/2 பங்கால் குறைத்து உள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியது. அதையும் இந்தியா மறுத்தது. ஞாயிறு மீண்டும் ரம்ப் ” I spoke with Prime […]
பிரேசில் (Brazil) என்ற தென் அமெரிக்க நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான Embraer இந்திய தலைநகர் டில்லியில் தனது கிளை அலுவலகத்தை ஆரம்பித்து உள்ளது. அமெரிக்காவின் Boeing மற்றும் ஐரோப்பாவின் Airbus ஆகிய பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்து உலகின் 3வது பெரிய நிறுவனம் Embraer. ஆனாலும் இந்தியாவில் Embraer விமானங்கள் தொகை மிக குறைவு. 2005ம் ஆண்டில் முதல் Embraer விமானம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும் இன்று வரை சுமார் 30 விமானங்களே இந்தியாவில் விற்பனை […]
அமெரிக்க படைகளின் தென் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான Southern Command பிரிவின் கட்டளை அதிகாரி அட்மிரல் Alvin Holsey திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக சட்டங்களுக்கு எதிராக ரம்ப் அரசு அட்மிரலின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச கடலில் போதை கடத்தும் வள்ளங்கள் என்று கூறி பல வள்ளங்களை தாக்கி அழித்தமை அட்மிரலின் பதவி விலகலுக்கு காரணமாக அமையலாம். 1988ம் ஆண்டு அமெரிக்க படைகளில் இணைந்த அட்மிரல் Holsey அமெரிக்க படைகளில் 37 ஆண்டுகள் சேவையாற்றி இறுதியில் […]
2016ம் ஆண்டு முதல் முறை சனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காலத்தில் ரம்ப் ‘I am your voice” என்று மட்டுமே கூறியிருந்தார். ஆனால் 2023ம் ஆண்டு இரண்டாம் தடவை சனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காலத்தில் ரம்ப் எனக்கு குற்றம் செய்தவர்களுக்கு நான் பழிவாங்குபவர் (retribution) என்று மிரட்டி இருந்தார். அவ்வகையில் பல அமெரிக்க உயர் அதிகாரிகள் தற்போது பழிவாங்கப்பட்டு வருகின்றனர். நேற்று 16ம் திகதி ரம்ப் அரசு John Bolton மீது அரச இரகசியங்களை முறைப்படி கையாளவில்லை […]