ரம்ப் காட்டில் மழை, அது அமெரிக்காவுக்கு நயமா, அழிவா?

ரம்ப் காட்டில் மழை, அது அமெரிக்காவுக்கு நயமா, அழிவா?

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தொட்டதெல்லாம் பொன் ஆகவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்தும் விரும்பிய எல்லாவற்றையும் தொட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்நிலை அமெரிக்காவுக்கு நயமாகுமா அல்லது அழிவை ஏற்படுத்துமா என்பதை 10 அல்லது 20 ஆண்டுகள் சென்ற பின்னரே அறிய முடியும். அண்மையில் ரம்ப் ஈரானின் அணு உலைகள் மீது குண்டு வீச அமெரிக்க சட்டப்படி காங்கிரஸிடம் உரிமை பெறப்படவில்லை. இந்த குண்டு வீச்சு தற்போது ஓரளவு தோல்வியிலேயே முடிந்துள்ளது. அத்துடன் சீனா போன்ற எதிரிகளும் இந்த குண்டின் […]

கனடாவுடன் தொடரும் ரம்பின் இறக்குமதி வரி முரண்பாடு

கனடாவுடன் தொடரும் ரம்பின் இறக்குமதி வரி முரண்பாடு

அமெரிக்க சனாதிபதி ரம்ப் கனடாவுடனான வர்த்தக பேச்சுக்களை இடைநிறுத்தி கொள்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இம்முறை கனடா நடைமுறை செய்யவுள்ள Digital Service Tax (DST) அமெரிக்காவால் காரணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ரம்ப்  மேலும் சில இறக்குமதி வரி தண்டனைகளை கனடாவுக்கு நடைமுறை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். முற்காலங்களில் பொருட்கள் மட்டுமே எல்லைகளை தாண்டி விற்பனை செய்யப்பட்டன. அதனால் இதுவரை பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி வரிகள் அறவிடப்பட்டன. தற்காலங்களில் இணையம் மூலம் பெருமளவு சேவைகள் எல்லைகள் தாண்டி செய்யப்படுகின்றன. […]

ரம்ப் ஆட்சியில் அமெரிக்க பொருளாதாரம் 0.5% ஆல் வீழ்ச்சி

ரம்ப் ஆட்சியில் அமெரிக்க பொருளாதாரம் 0.5% ஆல் வீழ்ச்சி

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியின் ஜனவரி முதல் மார்ச் 2025 வரையான முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் (GDP) 0.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று இன்று வியாழன் அறிவிக்கப்படுள்ளது. முன்னர் 0.2% வீழ்ச்சி மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளின் பின் இவ்வாறு அமெரிக்க GDP வீழ்ச்சி அடைந்துள்ளது. 2024ம் ஆண்டின் இறுதி காலாண்டில், பைடென் ஆட்சியில், அமெரிக்காவின் GDP 2.4% ஆல் வளர்ந்து இருந்தது. ரம்பின் புதிய இறக்குமதி வரிகள் பல வழிகளில் […]

நியூ யோர்க் நகரின் அடுத்த மாநகர முதல்வர் ஒரு இஸ்லாமியர்?

நியூ யோர்க் நகரின் அடுத்த மாநகர முதல்வர் ஒரு இஸ்லாமியர்?

அமெரிக்காவின் மிகப்பெரிய நகர்களில் ஒன்றான நியூ யார்க் (New York) நகரின் அடுத்த முதல்வராக (Mayor) Zohran Mamdani என்ற இஸ்லாமியர் ஒருவர் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. Democratic கட்சி சார்பில் முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள நபரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் 33 வயதான Mamdani 43% வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.இவருக்கு எதிராக போட்டியிட்ட முன்னாள் New York மாநில ஆளுநர் Andrew Cuomo 36% வாக்குகளை மட்டும் பெற்று இரண்டாம் உள்ளார். தெற்காசிய இஸ்லாமிய வம்சம் […]

ஈரானின் அணு உலைகள்அழியவில்லை, அதனால் ரம்ப் மூர்க்கம்?

ஈரானின் அணு உலைகள்அழியவில்லை, அதனால் ரம்ப் மூர்க்கம்?

பொதுவாக இராணுவங்கள் தமது மிகப்பெரும் ஆயுதங்களை அவசரப்பட்டு பயன்படுத்துவது இல்லை. அவற்றை பயன்படுத்தி அவை கூறியபடி வெற்றியை தராவிட்டால் பாதிப்பு அதிகம். பதிலுக்கு பயன்படுத்தக்கூடும் என்று மிரட்டுவது தோல்வியை தராது எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தும். தற்போது வெளிவந்துள்ள ஆரம்ப கணிப்புகள் அமெரிக்கா வீசிய GBU-57 வகை குண்டுகள் மலைகளுக்கு அடியில் உள்ள ஈரானின் அணு உலைகளை அழிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குண்டுகள் சிறிது மேற்பரப்பு அழிவுகளையே ஏற்படுத்தி உள்ளன. பாதகமான இந்த ஆரம்ப கணிப்புகளை கசிய விட்டவர் […]

யுத்த நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல் மீது ரம்ப் பாய்ச்சல்

யுத்த நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல் மீது ரம்ப் பாய்ச்சல்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க சற்று முன் ஈரான் இஸ்ரேல் மீது ஏவிய ஏவுகணைகள் Beer Sheva என்ற இஸ்ரேலிய நகரில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது. அங்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், பலர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலால் விசனம் கொண்ட இஸ்ரேல் ஈரான் மீது ரம்ப் யுத்த நிறுத்தத்தை அறிவித்த பின் தாக்குதல் செய்தது. அதனால் மூர்க்கம் கொண்ட ரம்ப் இஸ்ரேலை கடுமையாக வசை பாடினார். “I’m not happy with […]

இணக்கம் இன்றி இஸ்ரேல்-ஈரான் யுத்த நிறுத்தம்?

இணக்கம் இன்றி இஸ்ரேல்-ஈரான் யுத்த நிறுத்தம்?

இஸ்ரேலும், ஈரானும் இணங்கி கொண்ட ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன என்று கூறப்படுகிறது. Qatar மூலமே இந்த இணக்கம் செய்யப்பட்டது. சனிக்கிழமை ஈரான் கட்டாரில் (Qatar) உள்ள அமெரிக்க Al Udeid படை தளம் மீது சிறிய அளவிலான ஏவுகணை தாக்குதல் ஒன்றை செய்திருந்தது. ஆனால்  ஈரான் அமெரிக்காவுக்கு முன்னறிவிப்பு செய்திருந்ததால் பாதிப்புகள் மிக குறைவு. முதலில் ரம்ப் இஸ்ரேலும், ஈரானும் யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன என்று கூறியிருந்தார். இஸ்ரேல் தாக்காவிடின் […]

ஈரான் மீதான தாக்குதலில் 125 விமானங்கள் பங்கெடுப்பு

ஈரான் மீதான தாக்குதலில் 125 விமானங்கள் பங்கெடுப்பு

ஈரானின் அணு உலைகள் மீது நேற்று அமெரிக்கா செய்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா 125 க்கும் அதிகமான விமானங்களை பயன்படுத்தி உள்ளது. இவற்றில் B-2 Spirit வகை குண்டு வீச்சு விமானங்கள், வானில் எரிபொருள் நிரப்பும் பாரிய விமானங்கள், வேவு பார்க்கும் விமானங்கள், யுத்த விமானங்கள் ஆகியனவும் அடங்கும். முதலில் சில B-2 விமானங்கள் அமெரிக்க Missouri மாநிலத்தில் இருந்து மேற்கே பசுபிக் கடலை நோக்கி பறந்தன. இவை Guam தீவில் உள்ள அமெரிக்க தளத்தை அடைந்தன. ஆனால் […]

ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் 

ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் 

அமெரிக்கா ஈரானின் Fordow, Natanz, Esfahan ஆகிய 3 அணு உலைகள் மீது சனிக்கிழமை தாக்கியதாக அறிவித்துள்ளது. அத்துடன் தாக்கிய அமெரிக்காவின் விமானங்கள் ஈரானின் வான் பரப்புக்கு அப்பால் சென்றுள்ளன என்றும் ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா தனது B-2 வகை குண்டுவீச்சு விமானங்களை Guam என்ற தீவுக்கு அண்மையில் அனுப்பி இருந்தது. இங்கே அமெரிக்காவின் மிகப்பெரிய தளம் உண்டு. B-2 குண்டு வீச்சு விமானம் 30,000 இறாத்தல் எடை கொண்ட GBU-57 (Guided Bomb Unit) வகை குண்டுகளை வீசக்கூடியது. B-2 […]

ரம்புக்கு Nobel Peace பரிசு, பரிந்துரைப்பது பாகிஸ்தான் 

ரம்புக்கு Nobel Peace பரிசு, பரிந்துரைப்பது பாகிஸ்தான் 

அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு Nobel Peace Prize வழங்குமாறு தாம் பரிந்துரைக்க உள்ளதாக பாகிஸ்தான் இன்று சனிக்கிழமை கூறியுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் மூண்ட யுத்தத்தை ரம்ப் விரைந்து தடுத்தமையே காரணம் என்கிறது பாகிஸ்தான். மேற்படி சமாதானத்தின் பின் ரம்ப் தான்  ஒரு அணுவாயுத யுத்தத்தை தவிர்த்து, பல மில்லியன் உயிர்களை காப்பாற்றியதாகவும், ஆனால் அதற்கான credit தனக்கு வழங்கப்படவில்லை என்றும் பல தடவைகள் குறை கூறியிருந்தார். அதேவேளை இந்தியா தான் பாகிஸ்தானுடன் செய்த சமாதானத்தில் […]

1 11 12 13 14 15 371