இலங்கையில் வங்கி சேவையை கைவிடும் HSBC, NTB கையேற்பு 

இலங்கையில் வங்கி சேவையை கைவிடும் HSBC, NTB கையேற்பு 

சர்வதேச வங்கியான Hongkong and Shanghai Banking Corporation (HSBC) இலங்கையில் தனது சில்லறை வங்கி சேவையை கைவிடுகிறது. HSBC யின் இலங்கை பிரிவை இலங்கை National Trust Bank (NTB) இலங்கை ரூபாய் 18 பில்லினுக்கு கொள்வனவு செய்கிறது. மேற்படி இணக்கப்படி தற்போதைய சுமார் 200,000 இலங்கை HSBC வாடிக்கையாளர், HSBC credit card கொண்டோர், HSBC கடன் பெற்றோர் NTB வங்கிக்கு மாற்றப்படுவார். HSBC ஊழியர்களும் NTB வங்கியில் இணைவர். இந்த இணக்கம் நேற்று […]

இன்று $250 மில்லியன் X-Press Pearl தண்டம் செலுத்தப்படவில்லை 

இன்று $250 மில்லியன் X-Press Pearl தண்டம் செலுத்தப்படவில்லை 

இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கை நீதிமன்றம் விடுத்த கட்டளையின்படி 2021ம் மே மாதம் கொழும்பு கடலில் தீக்கு இரையாகி அமிழ்ந்த X-Press Pearl கப்பலின் உரிமை நிறுவனமான X-Press Feeders இன்று 23ம் திகதிக்குள் இலங்கை அரசுக்கு $250 மில்லியன் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அப்பணம் செலுத்தப்படவில்லை. ஊழல் நிறைந்த முனைய அரசு X-Press Pearl உரிமையாளருக்கு மிக குறைந்த தண்டம் விதித்து, அதையும் அப்போது பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருந்த இலங்கை நாணயத்தில் பெற்று இருந்தது. […]

ரம்பின் தாக்குதல்களால் இந்தியாவில் பெரும் வரி விலக்குகள்

ரம்பின் தாக்குதல்களால் இந்தியாவில் பெரும் வரி விலக்குகள்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது தொடுத்த பலமுனை வர்த்தக, பொருளாதார  தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்று கணித்த மோதி அரசு பெரும் வரி குறைப்புகளை இன்று திங்கள் அறிவித்துள்ளது. இந்திய பொருட்கள் மீது ரம்ப் திணித்த 50% இறக்குமதி வரி, தற்போது அறிவிக்கப்படுள்ள H-1B விசாவுக்கான $100,000 கட்டணம் எல்லாமே இந்தியாவை பெரிதும் பாதிக்கும். இன்று இந்தியாவில் பால், பாண், மருந்து வகைகள் ஆகியனவற்றுக்கு வரி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.  சிறிய கார், தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் […]

பலஸ்தீனத்தை ஏற்ற பிரித்தானியா, கனடா, அஸ்ரேலியா 

பலஸ்தீனத்தை ஏற்ற பிரித்தானியா, கனடா, அஸ்ரேலியா 

ஐ.நா. அமர்வையொட்டி பிரித்தானியா, கனடா, அஸ்ரேலியா ஆகிய 3 நாடுகளும் இன்று ஞாயிறு பலஸ்தீன நாட்டை (Palestinian state) ஏற்றுக்கொண்டுள்ளன.  பிரான்ஸ் பலஸ்தீனத்தை ஏற்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. பெல்ஜியம், போர்த்துக்கல், Malta ஆகிய நாடுகளும் பலஸ்தீனத்தை ஏற்க உள்ளதாக கூறியுள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்பார்த்தபடி மேற்படி மேற்கு நாடுகள் பலஸ்தீனத்தை ஏற்பதை வன்மையாக கண்டித்து உள்ளன. சுமார் 80 நாடுகள் 1988ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட பலஸ்தீனத்தையே நியாயத்தின் காவலர் என்று தம்மை பறைசாற்றும் மேற்படி மேற்கு […]

அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன சனாதிபதி சீயும் முன்னர் அறிவித்தபடி வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் சுமார் 2 மணிநேரம் உரையாடி இருந்தனர். ஆனாலும் ரம்ப் எதிர்பார்த்தபடி அவர்கள் இடையே இணக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை. சீயுடனான வெள்ளிக்கிழமை பேச்சு அமெரிக்காவில் சீனாவின் TikTok சேவை உரிமையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இணக்கம் ஏற்படும் என்று ரம்ப் பல தடவைகள் கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு இணக்கம் ஏற்படவில்லை. சீ TikTok சேவையின் அமெரிக்க பிரிவை ரம்ப் விரும்புவதுபோல் அமெரிக்க நிறுவனம் […]

அமெரிக்க H-1B விசாவுக்கு ரம்ப் $100,000 கட்டணம்

அமெரிக்க H-1B விசாவுக்கு ரம்ப் $100,000 கட்டணம்

அமெரிக்க H-1B வேலைவாய்ப்பு விசாவுக்கு சனாதிபதி ரம்ப் வெள்ளிக்கிழமை புதிதாக $100,000 கட்டணத்தை அறிவித்துள்ளார். ஆனால் வழமைபோல் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த புதிய கட்டணம் இந்தியாவையே அதிகம் பாதிக்கும். 2024ம் ஆண்டு 71% H-1B விசா இந்தியரால் பெறப்பட்டுஉள்ளது. சீனரால் 11.7% H-1B விசா பெறப்பட்டுஉள்ளது. அமெரிக்க H-1B வேலைவாய்ப்பு விசா அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டாலும், இது பெரும்பாலும் தொழிநுட்ப துறை ஊழியர்களுக்கு பயன்படுகிறது. இது முதலில் 3 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும். பின்னர் இது […]

Intel லில் $5 பில்லியன் முதலிடும் nVIDIA 

Intel லில் $5 பில்லியன் முதலிடும் nVIDIA 

கணனிகள் தோன்றிய காலம் முதல் chip உலகில் முடிசூடா மன்னனாக இருந்த அமெரிக்க Intel நிறுவனம் அண்மையில் AI வல்லமையுடன் கூடிய nVIDIA வருகையால் பின் தள்ளப்பட்டது.  ஆனாலும் nVIDIA நிறுவனம் வியாழக்கிழமை Intel நிறுவனத்தில் $5 பில்லியன் முதலிடுகிறது. Intel நிறுவனம் chip வடிவமைப்பு (design), உற்பத்தி (manufacturing) இரண்டிலும் வல்லமை கொண்டது. ஆனால் வடிவமைப்பில் வல்லமை கொண்ட nVIDIA விடம் உற்பத்தி வல்லமை இல்லை. அதனாலேயே nVIDIA தான் வடிவமைக்கும் chip உற்பத்திக்கு Intel […]

2029ம் ஆண்டில் இலங்கை digital தொலைக்காட்சி சேவை பெறும்?

2029ம் ஆண்டில் இலங்கை digital தொலைக்காட்சி சேவை பெறும்?

கடந்த பல சந்ததிகளாக உலகம் முன் வந்த analog signal மூலம் வான் வழியே கிடைக்கும் தொலைக்காட்சி சேவையையே அனுபவித்து வந்தது. ஆனால் பின் வந்த தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தொலைக்காட்சி சேவை தற்போது digital signal மூலம் வான் வழியே கிடைக்கிறது. இந்த சேவை high definition (HD) தரத்தை கொண்டது. உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது digital தொலைக்காட்சி சேவைக்கு முற்றாக மாறிவிட்டன. இந்தியா போன்ற நாடுகள் தற்போது படிப்படியாக digital சேவைக்கு மாறி வருகின்றன. இலங்கை, […]

Ben & Jerry’s Ice Cream நிறுவனத்தை நீங்கும் Jerry 

Ben & Jerry’s Ice Cream நிறுவனத்தை நீங்கும் Jerry 

1978ம் ஆண்டு அமெரிக்க Vermont மாநிலத்தில் Ben Cohen என்பவரும் Jerry Greenfield என்பவரும் இணைந்து Ben & Jerry’s Ice Cream நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தனர். இவர்களின் ice cream நிறுவனம் சமூக நலன்களில் முன் நிற்பதை பிரதான கொள்கையாக கொண்டது. 2000ம் ஆண்டு பிரித்தானியாவின் Unilever நிறுவனம் Ben & Jerry’s Ice Cream நிறுவனத்தை கொள்வனவு செய்தது. ஆனாலும் Ben, Jerry ஆகிய இருவரும் தொடர்ந்தும் Brand Ambassadors ஆக இயங்கினர். Unilever […]

இஸ்ரேல் genocide செய்ததாம், ஐ.நா. ஊளையிடுகிறது 

இஸ்ரேல் genocide செய்ததாம், ஐ.நா. ஊளையிடுகிறது 

இஸ்ரேல் காசாவில் genocide செய்துள்ளது என்று ஐ.நா.வின் விசாரணை ஆணைக்குழு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று ஐ.நா. கூறவில்லை. The Independent International Commission of Inquiry on the Occupied Palestinian Territory என்ற ஆணைக்குழு 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை மொத்தம் 5 வகை genocide களில் இஸ்ரேல் 4 வகை genocide களை செய்துள்ளது என்கிறது. அவையாவன 1) ஒரு […]