BBC மீது ரம்ப் $5 பில்லியன் மானநட்ட வழக்கு

BBC மீது ரம்ப் $5 பில்லியன் மானநட்ட வழக்கு

திங்கள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் பிரித்தானியாவின் BBC ஒளிபரப்பு சேவை மீது $5 பில்லியன் மானநட்ட வழக்குகள் இரண்டை (two counts) தாக்கல் செய்துள்ளார். 

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி தான் செய்த பேச்சு ஒன்றை தவறாக edit செய்து ஒளிபரப்பியதாக ரம்ப் BBC மீது குற்றம் சாட்டுகிறார். அந்த பேச்சில் ரம்ப் தனது ஆதரவாளரை Capital மண்டபம் நோக்கி சென்று “we fight, we fight like hell” என்று கேட்டிருந்தார். பின் அவர் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யுமாறும் கேட்டதை BBC தவிர்த்து விட்டது என்பதே ரம்பின் வழக்குக்கு காரணம்.

BBC மேற்படி விசயத்துக்கு மன்னிப்பு கேட்டு இருந்தாலும், சட்டப்படி தாம் தவறு எதையும் செய்யவில்லை என்கிறது BBC.

BBC வரிப்பணத்தில் இயங்கும் அரச அமைப்பு ஆனபடியால் ரம்புக்கு நட்டஈடு கட்டினாலும் அதை வரிப்பணத்தில் இருந்தே செலுத்தப்படும்.

2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி ரம்பின் பேச்சின் பின் ஆதரவாளர் Capital மண்டபத்தின் உள்ளே சென்று வன்முறையில் ஈடுபட்டு இருந்தனர். 

2020ம் ஆண்டு ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்க மறுத்து பல வழிகளில் தேர்தல் முடிவை மாற்றி அமைக்க முனைந்திருந்தார்.