Billionaire George Soros மீதும் பா.ஜ. பாச்சல்

Billionaire George Soros மீதும் பா.ஜ. பாச்சல்

உலக செல்வந்தர்களின் ஒருவரான ஜோர்ஜ் சரோஸ் (George Soros) மீதும் இந்திய பிரதமர் மோதியின் பாரதீய ஜனதா கட்சி பாய்கிறது. அதானி விசயம் தொடர்பாக சரோஸ் கருத்து கூறியமையே பா. ஜ. பாச்சலுக்கு காரணம்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சரோசை “வயதான, செல்வந்த, கருத்துக்களை கொண்ட, ஆபத்தான” (old, rich, opinionated, dangerous) நபர் என்று சாடியுள்ளார்.

வியாழக்கிழமை சரோஸ் தனது உரை ஒன்றில் “இந்தியா ஒரு சனநாயக நாடு, ஆனால் மோதி ஒரு சனநாயவாதி அல்ல” என்று கூறியிருந்தார்.

இந்த கூற்றுக்கு முன் சரோஸ் தனது உரை ஒன்றில் அதானியும், மோதியும் நெருக்கிய நண்பர்கள். அதானியின் வீழ்ச்சி மோதியை பாதிக்கும் என்றும் கூறியிருந்தார். இக்கூற்றில் இருந்தே மோதல் ஆரம்பமாகி இருந்தது.

அமெரிக்காவின் Hindenburg Research வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக அதானியின் 7 நிறுவனங்கள் கடந்த சில தினங்களில் சுமார் $120 பில்லியன் வெகுமதியை இழந்து உள்ளன. இந்த அழிவு இந்திய வரலாற்றில் மிக பெரியது என்றாலும் இந்திய பிரதமர் மோதி அதானி வீழ்ச்சி தொடர்பாக இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஹங்கேரியில் பிறந்து பின் அமெரிக்கரான சரோஸ், வயது 92, ஒரு யூதர் என்றாலும் இஸ்ரேல் பலஸ்தீனர் மீது கொண்டுள்ள ஆக்கிரமிப்பை வெறுப்பவர். இவரிடம் தற்போது சுமார் $8.6 பில்லியன் சொத்துக்கள் மட்டுமே இருந்தாலும், அண்மையில் இவர் $32 பில்லியன் சொத்தை Open Society Foundations என்ற தனது சொந்த பொது சேவை அமைப்புக்கு வழங்கி இருந்தார்.