Boris Johnson மீண்டும் பிரித்தானிய பிரதமர்?

Boris Johnson மீண்டும் பிரித்தானிய பிரதமர்?

லிஸ் டிரஸ் பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பணியில் பிரித்தானிய ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இம்முறை கட்சி மேசைக்கு கீழால் கதைத்து திங்கள் தமது பிரதமர் தெரிவை அறிவிக்க முனைகிறது. அதற்கு ஏற்ப குறைந்தது 100 ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

Rishi Sunak என்பவர் இதுவரை 114 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் Johnson னும் 100 கும் அதிக ஆதரவு வாக்குகளை பெற்றுள்ளதாக கூறியுள்ளார். Penny Mordaunt என்பவர் 22 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே இதுவரை கொண்டுள்ளார்.

விடுமுறையை கொண்டாட Dominican Republic என்ற Caribbean நாடு சென்ற Johnson லண்டன் நகருக்கு திரும்பியுள்ளார். Johnson தனது chief of staff ஆக கொண்டிருந்த Steve Barclay இம்முறை Sunak கை ஆதரிக்கிறார். Johnson காலத்தில் Home Secretary ஆக இருந்த Priti Patel தொடர்ந்தும் Johnson னுக்கே தனது ஆதரவை வழங்குகிறார்.

மொத்தம் 357 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆளும் Tory கட்சின் பலர் இதுவரை தமது தெரிவை அறிவிக்கவில்லை.

இம்முறை போட்டியாளர் ஒருவரை வாக்கெடுப்பு மூலம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்து அந்த நபருக்கு கட்சி உறுப்பினர்கள் இணையம் மூலம் வாக்களிக்க அனுமதிப்பார். அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களே அடுத்த பிரதமரை தெரிவு செய்வர். கட்சி உறுப்பினர்களின் வாக்களிப்பு வெறும் நாடகம் மட்டுமே.