BRICS அமைப்பில் இணைகின்றன சவுதி, ஈரான், UAE…

BRICS அமைப்பில் இணைகின்றன சவுதி, ஈரான், UAE…

தற்போது Brazil, Russia, India, China, South Africa ஆகிய 5 நாடுகளை மட்டும் அங்கத்துவ நாடுகளாக கொண்ட BRICS அமைப்பில் சவுதி அரேபியா, ஈரான், எதியோப்பியா, எகிப்து, அர்ஜென்டீனா, UAE ஆகிய நாடுகள் இணைகின்றன. இந்த புதிய அணியின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய 6 நாடுகளும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் அங்கத்துவத்தை கொண்டிருக்கும்.

தற்போது சீனாவின் ஆளுமையில் 5 நாடுகளை கொண்டிருந்த BRICS 11 நாடுகளை கொண்டிருக்கப்போவது அமெரிக்கா தலைமையிலான G7 போன்ற மேற்கின் அமைப்புகளுக்கு பெரும் போட்டியாக அமையும்.

சுமார் 40 நாடுகள் வரை BRICS அமைப்பில் இணைய விருப்பம் கொண்டிருந்தாலும், 22 நாடுகள் ஏற்கனவே முறைப்படி விண்ணப்பித்து உள்ளன. அதில் 6 நாடுகள் மட்டுமே தற்போது இணைய அனுமதிக்கப்படுகின்றன.

சீன சனாதிபதி சீக்கு இது ஒரு பெரு வெற்றியாகும். சவுதியையும், ஈரானையும் ஒன்றாக இழுப்பது மட்டுமன்றி அமெரிக்காவின் கைப்பிடியில் இருந்து மத்திய கிழக்கை சீ உடைத்துள்ளார். West க்கு போட்டியாக ஒரு Global South அணியை உருவாக்குகிறார் சீ.

அமெரிக்கா இதுவரை சுனி இஸ்லாமியர்களான சவுதியையும், சியா இஸ்லாமியர்களாக ஈரானையும் பிரித்து மத்திய கிழக்கை ஆண்டு வந்தது. ஆனால் சீனாவின் முயற்சியால் தற்போது சவுதியும், ஈரானும் தமது தூதரகங்களை மீண்டும் ஆரம்பிக்கின்றன. அதுவும் இன்றைய BRICS அறிவிப்பிற்கு முன்னோடிகளே.