BRICS இணக்கப்பாட்டுடன் வெளியிட்ட கூட்டு அறிக்கை 

BRICS இணக்கப்பாட்டுடன் வெளியிட்ட கூட்டு அறிக்கை 

இந்தியாவின் தலைநகர் நியூ டெல்லியில் 12ம், 13ம் திகதிகளில் இடம்பெறும் 18ம் BRICS அமர்வில் இதன் அனைத்து உறுப்பு நாடுகளின் இணக்கப்பாட்டுடன் கூட்டு அறிக்கை (joint statement) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது யுத்தத்தில் ஈடுபட்டுள்ள BRICS அங்கத்துவம் கொண்ட நாடுகளான ஈரான், UAE ஆகிய இரண்டும் கூடவே இணங்கி உள்ளன. அத்துடன் BRICS அமர்வுக்கு வந்திருந்த ஈரானின் சனாதிபதியும், UAEயின் முடிக்குரிய இளவரசரும் நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளனர்.

இந்திய பிரதமர் மோதி BRICS வயதுக்கு வந்துவிட்டதாக (had come of age) கூறினார்.

இந்த கூட்டு அறிக்கை மேற்கின் ஆளுமையுடன் இயங்கும் UN, IMF, WTO ஆகியவற்றின் பக்க சார்பு அற்ற, நியாயமான சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளது. பலஸ்தீனர் நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

BRICS நாடுகள் சுமார் 50% உலக சனத்தொகையையும், 40% உலக GDP யையும், 26% உலக வர்த்தகத்தையும் தம்முள்ளே கொண்டுள்ளன.