கடந்த சில தினங்களாக Cargolux விமான சேவையின் பொருட்களை காவும் விமானங்கள் ஈரான் மீது சென்று மறைந்தது போல காணப்பட்டமைக்கு தமது தவறான estimated கணிப்புகளே காரணம் என்கிறது FlightRadar24.
சீனாவில் இருந்து Luxembourg வரை பறந்த CLX9735, CLX9736, CLX9737 போன்ற விமானங்கள் Turkmenistan என்ற நாட்டின் தலைநகர் Ashgabat இல் இறங்கி, எரிபொருள் நிரப்பி, 4 மணித்தியாலங்களின் பின்தமது பயணத்தை தொடர்ந்தனவாம்.
ஆனால் இந்த விமான பயணங்களின் இரண்டாம் துண்டங்கள் தரவு குளறுபடிகள் காரணமாக காண்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேற்படி விமானங்கள் உண்மையில் Luxembourg சென்றுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.