உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனா மாதிரி உலகை ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னையே ஆழ முடியாது தவிக்கிறது. அந்த நாடு மட்டுமல்ல அங்குள்ள ஒரு கட்சியே தன்னை ஆழ முடியாத நிலை உருவாக இறுதியில் இந்திய வம்சம் வந்த Rishi Sunak பிரதமர் ஆகியுள்ளார் – பொது தேர்தல் மூலம் அல்ல, பதிலாக மேசைக்கு கீழான உட்கட்சி நாடகம் மூலம். Sunak பிரித்தானியாவில் இரண்டாம் சந்ததி. இவரின் பெற்றோர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சென்ற இந்திய வம்சத்தினர். […]
வேற்று மொழி சொல் ஒன்றுக்கு தமிழில் ஏற்கனவே மாற்று சொல் ஒன்று இல்லை என்றால் அதற்கு புதியதொரு தமிழ் சொல்லை கொள்ள விரும்புவது நலம், அவசியம். ஆனால் அவ்வாறு தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி தமிழை, தமிழின் மகிமையை அழிக்கும் என்றால் தமிழுக்கான மாற்று சொல்லை அமையாது நேரடியாக வேற்று மொழி சொல்லையே பயன்படுத்துவது தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வாறு செய்வது இன்றைய முட்டுக்காய் தமிழன் அழகிய பண்டை தமிழை அழிப்பதை, […]
தமிழ், குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் தன்னை புத்திசாலி என்று நிறுவ சிங்களத்தை ‘மோட்டு சிங்களம்’ என்று கூறும். ஆனால் தற்கால நிகழ்வுகள் தமிழர் தான் மூடர் என எண்ண வைக்கிறது. வல்வெட்டித்துறையிலிருந்து ஹாட்லி கல்லூரிக்கு வந்த மாணவன் ஒருவன் தனது 6ம் ஆண்டில் ஒரு வகுப்பறை நாடகம் நிகழ்த்தினான். அந்த நாடகத்தின் பிரதான நோக்கம் சிங்களவன் ஒரு மூடன் என நிறுவதே. நாடகத்தின் பெயர் “சொன்னதை செய்யும் பாண்டா”. யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிங்கள ‘வேலைக்கார […]
யாழ்ப்பாணத்தில் உன்னதமானவர்களை வெள்ளையன் பிள்ளை மாதிரி என்று பெருமையிட்டு அழைப்பது உண்டு. அக்காலத்தில் வெள்ளையர்கள் உன்னதமான, நேர்மையான, பொய் புரளி இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் தற்கால நிலைமை அவ்வாறு அல்ல. குறிப்பாக அரசியலில் வெள்ளையர்களும் பொய், புரளி, உருட்டு, பிரட்டு நிரம்பி உள்ளனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் இதே நிலையே. ரஷ்யாவின் பூட்டின் யூகிரைன் தனது கோதுமை போன்ற தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாது துறைமுகங்களை தடுப்பது “real war crime” என்று ஐரோப்பிய வெளியுறவு […]
கனடிய தமிழ் வாக்குகளை சில்லறை விலையில் பெற்று கனடிய அரசியல் கட்சிகளுக்கு மொத்த விலையில் விற்கும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய பிரதமர் மே மாதம் 18ம் திகதியை கனடாவில் “Tamil Genocide Remembrance Day” என்று அறிவித்து உள்ளார். இது கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் மற்றுமொரு சில்லறை சாதனை மட்டுமே. இவ்வகை கனடிய சில்லறை நாடகங்களால் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. கனடா இப்போது கூறும் massacre […]
அரசியல் கட்சிகளுக்கு அப்பால், இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையில் ஒரு புரட்சி இடம்பெற்றது. Gota Go Gama என்று ஆரம்பித்து, Mina Go Gama என்று வளர்ந்த இந்த புரட்சி இலங்கையின் உச்சத்தில் இருந்த ஆட்சி குடும்பத்தை விரட்ட முனைந்து. அந்த குடும்பத்தின் பிரதானியான பிரதமர் மகிந்தவை விரட்டியும் இருந்தது. இந்த புரட்சி இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு நிகரான ஒரு புரட்சியாக தொடர்கிறது. இந்த வன்முறை அற்ற, நியாயமான புரட்சியையே உலகம், குறிப்பாக […]
Facebook மூலம் எவராவது உண்மை செய்திகளை பெறுவதாக கருதினால் அவர்களுக்கு குறைந்தது அரை மண்டை பழுது என்று அர்த்தம். பல Facebook பாவனையாளர் முன், பின் ஆராயாது R-S Papers என்ற மூடர்கள் பேச்சை மீண்டும் பரப்பி வருகிறார்கள். மழைக்கும் பாடசாலை செல்லாத இந்த மூடர்கள் தமது துணைக்கு Dark-net என்ற உச்சநிலை அறிவாளிகளையும் இழுத்து உள்ளனர். மிக பிரதானமாக இந்த மூடர்கள் மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்ற பதங்களில் குழம்பி உள்ளனர். இலங்கையின் மொத்த கடன் […]
கனடாவின் Liberal, Conservative, NDP கட்சி பதவிகளில் குந்தி இருப்போரும், குந்தி இருக்க கனவு கொள்வோரும் கனடா ஒரு நேர்மை மிக்க நாடு, ஆக்கிரமிக்கப்படும் இலங்கை தமிழர் போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் நாடு என்றெல்லாம் புகழ் பாடுகின்றனர். உண்மையில் இந்த தமிழருக்காக கனடிய கட்சிகள் ஊளையிடுவது தமிழரின் வாக்குகளை பெற மட்டுமே. தமிழரிலும் கேவலமாக ஆக்கிரமிக்கப்படும் பாலஸ்தீனர் சார்பில் கனடிய கட்சிகளோ, அந்த கட்சிகளில் தொங்கும், தொங்க முனையும் தமிழ் பாத்திரங்களே என்றைக்கும் பாலஸ்தீனர் சார்பில் […]
தற்போது பொருளாதார இடரில் உள்ள இலங்கைக்கு அண்டை நாடான இந்தியா 40,000 தொன் டீசலும், 36,000 தொன் பெட்ரோலும் ‘கடன்’ அடிப்படையில் வழங்கி இருந்தது – நன்கொடையாக அல்ல, கடன் அடிப்படையில். இந்தியாவின் இந்த கடன் வழங்களால் பூரித்துப்போன இலங்கையின் முன்னாள் Cricket விளையாட்டு வீரர் அர்ஜுணா ரணதுங்க இந்தியாவை இலங்கையின் மூத்த அண்ணன் என்று புகழ்பாடி உள்ளார். இதே மூத்த அண்ணன் 1987ம் ஆண்டும் இலங்கையின் வடபகுதிக்கு, குறிப்பாக வடமராச்சி பகுதிக்கு, பருப்பு, சமையல் எண்ணெய் […]
(இளவழகன், 2022-01-22) போன இடத்து அரசியல் இலாபங்களுக்காக தப்பி ஓடியவர்களும், இவர்களின் வாக்குகளை பெற இவர்கள் போடும் புண்ணாக்கையும் உன்ன தயாராக உள்ள போன இடத்து அரசியல் வாதிகளும் செய்யும் இன்னோர் கூத்துதான் “Thai Pongal & Tamil Heritage Month Celebrations”. முதலில் கனடா, பின் இலண்டன். (கவனிக்க: Thai என்ற பதம் ஆங்கிலத்தில் ஏற்கனவே தாய்லாந்தை – Thailand – குறிக்க பயன்படுகிறது. அதனால் Thai Pongal “தாய் பொங்கல்” என்றே பொருள்படும்). தப்பி […]