இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய தாயும், இரண்டு மகள்களும் 

இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய தாயும், இரண்டு மகள்களும் 

இந்திய கர்நாடக மாநிலத்து Ramatirtha Hill குகை ஒன்றில் வாழ்ந்த Nina Kutina என்ற 40 வயது ரஷ்ய தாயையும் அவரின் 6 மற்றும் 4 வயது பெண் பிள்ளைகளையும் வன அதிகாரிகள் ஜூலை 9ம் திகதி கைப்பற்றி உள்ளனர்.  தாயின் இந்திய விசா பல ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்து உள்ளது. தாய் வழங்கிய இந்த சிறு குடும்பத்தின் தரவுகள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் உள்ளன. 2017ம் ஆண்டுக்கு முன் இவர்கள் 4 நாடுகளில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 2017ம் […]

அயர்லாந்து கழிவு குழியில் 796 குழந்தைகளின் உடல்கள்

அயர்லாந்து கழிவு குழியில் 796 குழந்தைகளின் உடல்கள்

அயர்லாந்தின் Tuam என்ற நகர் கழிவு குழி ஒன்றில் குறைந்தது 796 குழந்தைகளின் அழிந்த உடல்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. இவை சுமார் 80 ஆண்டுகள் பழையன. இந்த குழந்தைகள் பொதுவாக சட்டப்படியான தந்தை இன்றி பிறந்தவர்கள். அவ்வகை குழந்தைகளையும் அவர்களின் தாய்மாரையும் பராமரிக்கும் St. Mary’s Home என்ற நிலையத்திலேயே இந்த கழிவு குழி உள்ளது. இந்த நிலையம் 1922ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை Catholic Church இன் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கே 1943ம் […]

காசாவில் மெல்ல அதிகரிக்கும் இஸ்ரேல் இராணுவ மரணங்கள் 

காசாவில் மெல்ல அதிகரிக்கும் இஸ்ரேல் இராணுவ மரணங்கள் 

காசாவில் பலியாகும் இஸ்ரேல் இராணுவத்தின் தொகை மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 22 மாதங்களாக காசாவில் இடம்பெறும் யுத்தத்துக்கு இதுவரை குறைந்தது 888 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர். அத்துடன் பெரும் தொகை இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர். இஸ்ரேல் வானத்தில் இருந்து குண்டுகளை பொழிந்தாலும், நிலத்தில் ஹமாஸ் எதிர்பாராத அளவு தாக்குதல்களை செய்து வருகிறது. இஸ்ரேல்-ஈரான் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தினத்தன்று இஸ்ரேல் கவச வாகனம் மீது ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு அதில் இருந்த 7 […]

எரிபொருள் நிறுத்தம் Air India விமான விபத்துக்கு காரணம்?

எரிபொருள் நிறுத்தம் Air India விமான விபத்துக்கு காரணம்?

அண்மையில் இந்திய அகமதாபாத் விமான நிலையம் அருகே லண்டன் சென்ற Air India flight AI171 விபத்துக்கு உள்ளானதால் 260 பேர் பலியாகி இருந்தனர். இந்த விபத்தின் ஆரம்ப நிலை விசாரணை விமானத்தின் இரண்டு இயந்திரங்களுக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டமை காரணம் என்று கூறுகிறது. இரண்டு இயந்திரங்களை கொண்ட இந்த விமானத்தின் இடது, வலது இயந்திரங்களுக்கான எரிபொருள் switch களும் ஒன்றின் பின் ஒன்றாக 1 நிமிடத்தில் RUN நிலையில் இருந்து CUTOFF நிலைக்கு திருப்பப்பட்டு உள்ளன. விமானம் மேலே […]

மஹாராஸ்ரா மாநிலத்திலும் ஹிந்தி எதிர்ப்பு வன்முறைகள்

மஹாராஸ்ரா மாநிலத்திலும் ஹிந்தி எதிர்ப்பு வன்முறைகள்

மும்பாய் நகரை உள்ளடக்கிய மஹாராஸ்ரா மாநிலத்திலும் ஹிந்தி எதிர்ப்பு வன்முறைகள் தலைதூக்கி உள்ளன. ஏப்ரல் மாதம் மஹாராஸ்ரா மாநிலத்து பாடசாலைகளில் மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு அடுத்து ஹிந்தியும் கட்டாயம் படிக்க வேண்டிய மூன்றாம் மொழி ஆக்கப்பட்டமையே கிளர்ச்சிகளுக்கு காரணம். மேற்படி கட்டாய மும்மொழி கொள்கை மத்தியில் பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ. கட்சியால் நடைமுறை செய்யப்பட்டது. தமிழ்நாடு போன்ற வேறு மாநிலங்களிலும் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு உண்டு. எதிர்ப்பு காரணமாக இந்த மும்மொழி கொள்கை மஹாராஸ்ரா மாநிலத்தில் தற்போது […]

nVIDIA $4 டிரில்லியன் நிறுவனம், CEO Huang சீனா செல்கிறார் 

nVIDIA $4 டிரில்லியன் நிறுவனம், CEO Huang சீனா செல்கிறார் 

nVIDIA என்ற artificial intelligence வல்லமை கொண்ட chip களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) $4 டிரில்லியன் ($4,000 பில்லியன்) ஆகியுள்ளது. உலகில் nVIDIA மட்டுமே $4 டிரில்லியன் பெறுமதி கொண்ட நிறுவனம். ஆனாலும் ரம்ப் அரசு விதித்த தடைகள் காரணமாக nVIDIA சீன சந்தையை தற்போது இழந்துள்ளது. சீன சந்தையை மீண்டும் கைப்பற்ற nVIDIA CEO Jensen Huang சில தினங்களில் சீனா செல்கிறார். அதற்கு முன் வியாழன் Huang […]

காசா குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. அதிகாரிக்கு அமெரிக்கா தடை 

காசா குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. அதிகாரிக்கு அமெரிக்கா தடை 

காசா மற்றும் West Bank ஆகிய இடங்களில் இஸ்ரேல் செய்யும் யுத்த குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. அதிகாரியான Francesca Albanese மீது அமெரிக்க ரம்ப் அரசு புதன்கிழமை தடை விதித்துள்ளது. இவர் International Criminal Court (ICC) சார்பிலேயே காசா விசாரணையை செய்கிறார். இஸ்ரேல் செய்யும் குற்றங்களை ICC விசாரணை செய்ய முடியாது என்பதே அமெரிக்காவின் கொள்கை. இத்தாலியரான Albanese கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காசா யுத்தத்தில் இலாபம் அடையும் அமெரிக்க நிறுவனங்களை விசாரணை […]

யூக்கிறேன் யுத்தத்தில் கதை மாறும் ரம்ப் 

யூக்கிறேன் யுத்தத்தில் கதை மாறும் ரம்ப் 

தான் ஆட்சிக்கு வந்தால் யூக்கிறேன் யுத்தத்தை 24 மணி நேரத்தில் சமாதானத்துக்கு கொண்டு வருவேன் என்று தேர்தல் காலத்தில் ரம்ப் கூறியிருந்தார். ஆனால் அவரின் 6 மாத கால ஆட்சியின் பின் அவர் பாதை மாறி முன்னாள் சனாதிபதி பைடென் வழியில் செல்கிறார். செவ்வாய்க்கிழமை ரம்ப் “I am not happy with Putin” என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டின் மீது வசைபாடி வருவதோடு யூக்கிறேனுக்கு ஆயுதங்களை வழங்கவும் அறிவித்துள்ளார். முன்னர் […]

Texas வெள்ள மரண தொகை 104 ஆகியது, 27 பேர் தொலைவு 

Texas வெள்ள மரண தொகை 104 ஆகியது, 27 பேர் தொலைவு 

அமெரிக்க Texas மாநிலத்து Guadalupe ஆற்று பெருக்கெடுப்புக்கு பலியானோர் தொகை 104 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொலைந்து உள்ளோர் தொகை 27 ஆக உள்ளது. Kerr County பகுதியில் மட்டும் 84 பேர் பலியாகியும், 11 பேர் தொலைந்தும் உள்ளனர். அதில் 28 பேர் இளையோர். தரமான வானிலை அவதானிப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ள நாட்டில் இவ்வகை அழிவை தவிர்க்க முடியாமை பல கேள்விகளை தோற்றுவித்துள்ளன. அண்மையில் சனாதிபதி ரம்ப் FEMA போன்ற பல […]

ஜப்பான், தென் கொரியா பொருட்களுக்கு ரம்ப் 25% வரி

ஜப்பான், தென் கொரியா பொருட்களுக்கு ரம்ப் 25% வரி

ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக இன்று திங்கள் அறிவித்துள்ளார். இந்த வரி நடைமுறைக்கு வந்தால் Toyota, Honda போன்ற ஜப்பானின் பெரிய நிறுவனங்களும், Samsung போன்ற தென் கொரியாவின் பெரிய நிறுவனங்களும் பெரிதும் பாதிப்பு அடையும். இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா கொள்வனவு செய்யும் மொத்த பெறுமதியிலும் மிக குறைந்த அளவு பெறுமதிக்கே இந்த நாடுகள் […]

1 2 3 350