நேற்று வியாழன் தென் கொரிய விமான நிலையத்தில் இடம்பெற்ற ரம்ப்-சீ சந்திப்பு சீனா ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியாத நாடாக மறியதை காட்டியுள்ளது. இந்த சந்திப்பை ரம்ப் ஒரு பெரு வெற்றியாக கூறினாலும், சீனா இந்த சந்திப்பை ஒரு சாதாரண நிகழ்வாகவே காண்பிக்கிறது. இந்த சந்திப்பில் திடமான தீர்வுகள் எதுவும் ஏற்படவில்லை. சீனா fentanyl க்கான மூல இரசாயணங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை 10% ஆல் குறைக்கவும் மட்டுமே இணங்கின. மலேசியாவுடன் ரம்ப் critical […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் பலத்த நெருக்கடிகள் மத்தியில் சீன சனாதிபதி சீயை இன்று வியாழன் தென் கொரியாவில் நேரடியாக சந்திக்கவுள்ளார். இன்று இவர்கள் இருவரும் ஒரு முழுமையான பொருளாதார தீர்வை அடையாவிடில் ரம்ப் பலத்த எதிர்ப்புகளை ஆதரவாளர் மத்தியில் சந்திக்க நேரிடும். ரம்பை நன்கறிந்த சீனா இந்த சந்திப்பதை முடிந்த அளவு தணித்தே பேசி வருகிறது. சந்திப்பும் முடிந்த அளவு இறுதி நேரத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. APAC அமர்வுக்கு செல்லும் சீ தரை இறங்கியவுடன் அமெரிக்காவுக்கு […]
அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுக்கு இந்தியா 7 புதிய யுத்த விமானங்களை இழந்திருந்தது என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். ஆசியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ரம்ப் ஜப்பானில் செய்த உரை ஒன்றில் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின்போது “7 planes were shot down, 7 brand new beautiful planes were shout down” என்று கூறினார். இந்தியா இதுவரை அந்த யுத்தத்தில் தனது யுத்த இழப்புகளை முறைப்படி அறிவிக்காமை ரம்ப் போன்ற பலர் தமது […]
திங்கள் அக்டோபர் 27ம் திகதி மலேசியாவில் இடம்பெற்ற ASEAN நாடுகளின் அமர்வுக்கு இந்திய பிரதமர் மோதி நேரடியாக செல்வதை தவிர்த்திருந்தார். இதற்கு இந்திய மாநிலங்களில் சிலவற்றில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஒரு காரணமாகலாம் என்றாலும் இந்தியாவுடன் முரண்படும் ரம்பை நேரடியாக சந்திக்க விரும்பாமையே முதல் காரணம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. மோதி இணையம் மூலம் ASEAN அமர்வில் பங்கெடுத்து இருந்தார். இந்த அமர்வுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் சென்று இருந்தது மட்டுமன்றி, இக்காலத்தில் அமெரிக்க அதிகாரிகள் சீன பொருட்கள் […]
இன்று பல நாடுகளிடம் அணுக்குண்டு ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும் தலையில் இந்த அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகள் பழைய முறை எரிபொருளை பயன்படுத்தியே ஏவப்படும், பயணிக்கும் (அல்லது ஹிரோஷிமாவில் போடப்பட்டதுபோல் விமானத்தில் இருந்து போடப்படும்). ஆனால் ரஷ்ய சனாதிபதி தாம் அணு சக்தியில் பயணிக்கும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக கூறியுள்ளார். அக்டோபர் 21ம் திகதி இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக ரஷ்ய ஜெனரல் Gerasimov கூறியுள்ளார். Burevestnik என்ற இந்த ஏவுகணை முதலில் திண்ம எரிபொருளை (solid […]
தனது வரி (tariff) கொள்கைகளை அவமதிக்கும் நோக்கில், முன்னாள் அமெரிக்க சனாதிபதி Ronald Reagan னின் பேச்சு ஒன்றின் துண்டங்களை பயன்படுத்தி, Ontario மாநில அரசு அமெரிக்க தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒன்றை செய்ததால் விசனம் கொண்ட ரம்ப் கனடா மீதான இறக்குமதி வரியை சனிக்கிழமை 10% ஆல் அதிகரித்து உள்ளார். 1987ம் ஆண்டு இறக்குமதி வரிகள் தொடர்பாக Reagan செய்த இந்த தொலைக்காட்சி உரை உண்மையானது என்றாலும் ரம்ப் இதை fake செய்தி என்றுள்ளார். இதே காரணத்துக்காக கனடாவுடனான […]
லத்தீன் அமெரிக்கா நோக்கி அமெரிக்காவின் USS Gerald Ford என்ற விமானம் தாங்கி கப்பலை அனுப்புகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். இந்த நகர்வை ரம்ப் வெள்ளி தெரிவித்துள்ளார். அண்மை காலங்களில் ரம்ப் வெனிசுஏலா, கொலம்பியா போன்ற சில லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் முரண்பட்டு வருகிறார். அதன் ஒரு அங்கமே இந்த விமானம் தங்கியின் பயணம். ஏற்கனவே அமெரிக்க படைகள் லத்தீன் அமெரிக்க பகுதியில் நிலை கொண்டு உள்ளன. இவர்களுடன் 8 யுத்த கப்பல்கள், 1 அணு சக்தி […]
இலங்கையின் வடக்கே மீண்டும் சீனாவின் சூரிய சக்தி மற்றும் காற்று மூலமான மின் உற்பத்தி நடவடிக்கைகள்ஆரம்பமாகலாம். முனைய சில திட்டங்கள் முறிந்து போனதாலேயே மீண்டும் சீனா வடக்கே முதலீடும் வாய்க்கு தோன்றியுள்ளது. 2021ம் ஆண்டு நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய 3 தீவுகளிலும் சூரிய சக்தி மூலமான மின்னை உற்பத்தி செய்யும் உரிமை சீனாவின் Sinosar-Etechwin நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் மேற்படி திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் என்று இந்தியா அடம்பிடித்தால் இரத்து செய்யப்பட்டிருந்தது. உடனே […]
யூக்கிறேன் யுத்த நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய சனாதிபதி பூட்டினை ஹங்கேரி என்ற நாட்டில் இரண்டாம் தடவையும் நேரடியாக சந்தித்து உரையாடும் முயற்சியை அமெரிக்க சனாதிபதி ரம்ப் கைவிட்டு உள்ளார். அண்மையில் அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் இடம்பெற்ற முதலாவது நேரடி சந்திப்பும் பயன் எதையும் வழங்கி இருக்கவில்லை. இரண்டாம் சந்திப்பும் அவ்வாறே அமையும் என்ற கணிப்பு ரம்பை சூழ்ந்திருக்கலாம். அத்துடன் ரம்ப் ரஷ்யாவின் Rosneft, Lukoil ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதித்துள்ளார். ஆனாலும் […]
2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் சனாதிபதியாக பதவி வகித்த சர்கோஸி (Nicolas Sarkozy) தனது 5 ஆண்டு சிறை தண்டனையை தொடர பாரிஸில் உள்ள La Sante சிறைச்சாலைக்கு செவ்வாய் சென்றுள்ளார். தற்போது 70 வயதான சரோஸ்கி முன்னாள் லிபிய (Libya) தலைவர் கடாபியிடம் இருந்து பல மில்லியன் டாலர்கள் இலஞ்சம் பெற்று தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. சரோஸ்கிக்கு 9 முதல் 12 சதுர மீட்டர் பரப்பளவு […]