நேற்றைய தினம் இத்தாலி சீனாவின் Belt and Road Initiative என்ற திட்டத்தில் இணைந்தது மட்டுமன்றி, முற்காலங்களில் சீனாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட சீன கலாச்சார அரும்பொருட்களை (cultural relics) சீனாவிடம் மீண்டும் கையளிக்கவும் இணங்கி உள்ளது. . இந்த இணக்கத்தின்படி மொத்தம் 796 சீன அரும்பொருட்கள் சீனாவிடம் திருப்பி வழங்கப்படவுள்ளன. இந்த அரும்பொருட்களுள் சுமார் 4300 முதல் 4600 வருடங்களுக்கு முற்பட்ட (கி.மு 2600 – கி.மு.2300) Majiayao செங்களி பாத்திரமும் (red […]
சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலி இன்று சனிக்கிழமை இணைந்துள்ளது. சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடு இத்தாலியே. . அதேவேளை அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள ஏனைய 6 நாடுகளும் சீனாவின் Belt and Road திட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றன. அதில் இத்தாலி இணைவதை கடுமையாக எதிர்த்துள்ளன. ஆனாலும் இத்தாலி தனது நன்மை கருதி சீனாவுடன் இணைந்துள்ளது. . இன்று இத்தாலி […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Abilene நகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு கீழே 45 rattle snake என்ற வகை நச்சு பாம்புகள் குடியிருந்துள்ளன. ஒரே இடத்தில் இவ்வளவு பாம்புகள் அகப்பட்டது வீட்டுக்காரரை வியக்க வைத்துள்ளது. . மேற்படி வீட்டுக்காரர் தனது தொலைக்காட்சி சரியா இயங்காததால் அதன் cable ஐ சரிபார்க்க முயன்றுள்ளார். அப்போது அவரின் வீட்டுக்கு கீழே சில rattle snake வகை பாம்புகள் இருப்பதை அறிந்து Big Country Snake Removal என்ற நிறுவனத்தின் […]
இந்தியாவின் Jet Airways விமான சேவை தனது சேவைகளை முடங்க வைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள Jet Airways மேலும் பல தனது விமானங்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி வைத்துள்ளது. அந்த விமானங்களுக்கான குத்தகை பணத்தை செலுத்த முடியாமையே சேவை இடைநிறுத்தத்துக்கு காரணம். . Jet Airways விமான சேவையிடம் ஏறக்குறைய 100 விமானங்கள் உண்டு. அவற்றில் சுமார் 50 விமானங்களை தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. […]
இந்தியாவின் மிக பெரிய செல்வந்தர்களில் சகோதரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் இருவர். தந்தையின் சொத்தை முதலாக கொண்டு இருவரும் வர்த்தகத்தில் வளர்ந்தனர். அவ்வப்போது தம்முள்ளே மோதியும் கொண்டனர். . அண்ணன் முகேஷின் மொத்த சொத்துக்கள் தற்போது சுமார் $52.9 பில்லியன் என்று கூறப்படுகிறது. இவர் தனது மகளின் திருமண விழாவுக்கு மட்டும் அண்மையில் சுமார் $200 மில்லியன் செலவு செய்திருந்தார். . ஆனால் அனில் அம்பானி விரைவில் தனது சொத்துக்களை இழந்து வந்தார். 2008 ஆம் […]
ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கை (Mozambique) கடந்த வியாழன் தாக்கிய Idai என்ற சூறாவளிக்கு சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சூறாவளி Beira என்ற நகரை 177 km/h காற்று வீச்சில் தாக்கி உள்ளது. . சுமார் 500,000 மக்களை கொண்ட Beira நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறது ஐ.நா. . இந்த நகருக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்குமான பாதைகளும் முற்றாக […]
குடிவரவாளர்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்ட அஸ்ரேலிய செனட்டர் (Senator) Fraser Anning கின் தலையில் இளைஞர் ஒருவர் முட்டை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட செனட்டர் இளைஞரை தாக்க, இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. சூழ இருந்தோர் விரைந்து இருவரையும் கட்டுப்படுத்தினர். . இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மெல்பேர்ன் (Melbourne) நகரில் நிகழ்ந்துள்ளது. Hompton வாசியான 17 வயது இளைஞன் தனது இடது கையால் smart phone மூலம் வீடியோ எடுத்துக்கொண்டே வலது கையால் முட்டையை […]
அந்நியர்களால் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் சிரியாவில் உருவாக்கப்பட்ட யுத்தத்துக்கு கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 370,000 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . 2011 ஆம் ஆண்டு சவுதி, கட்டார், UAE, அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் அசாத்தை (Bashar al-Assad) பதவியில் இருந்து விலக்கி தமக்கு சாதகமான ஒருவரை பதவியில் அமர்த்த குழப்பத்தை உருவாக்கின. ஆரம்பத்தில் அசாத் பாரிய தோல்விகளை அடைந்து வந்தார். அனால் ரஷ்யாவும், ஈரானும், கூடவே லெபனானின் ஹொஸ்புல்லா இயக்கமும் […]
நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 1:30 மணியளவில், துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளன. Al Noor மற்றும் Linwood பள்ளிவாசல்களிலேயே மேற்படி சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. . இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் குறைந்தது 49 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். . அதேவேளை போலீசார் தாம் 3 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கூறி உள்ளனர். அஸ்ரேலியாவை […]
அனைத்து Boeing தயாரிப்பான 737 MAX-8 மற்றும் மேலதிக நீளம் கொண்ட MAX-9 விமானங்களையும் சேவையில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா இன்று கட்டளை இட்டுள்ளது. முதலில் சீனாவே மேற்படி விமான பாவனைக்கு எதிராக இவ்வாறு முழு தடையை விதித்து இருந்தது. கூடவே இந்தோனேசியாவும், வேறு சில நாடுகளும் தடையை விதித்தன. . பின்னர் ஐரோப்பாவையும் தமது வான்பரப்புள் இந்த விமானத்தை தடை செய்தன. இறுதியில் இன்று அமெரிக்காவும், கனடாவும் தடையை விதித்து உள்ளன. . இந்த தடைகள் […]