சீன உதவியுடன் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு

சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் புதியதோர் எண்ணெய் குதத்தை அமைக்கவுள்ளதாக இன்று வெள்ளி இலங்கை அரசு கூறியுள்ளது. இந்த புதிய எண்ணெய் சுத்திகரிக்கும் கட்டுமானம் சுமார் $3 பில்லியன் செலவில் அமைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 116,000 பரல் எண்ணெய்யை நாள் ஒன்றில் சுத்திகரிப்பு செய்யும். . இந்த திட்டத்துக்கு அமெரிக்காவின் குழு ஒன்று உட்பட மொத்தம் மூன்று குழுக்கள் போட்டியிட்டதாகவும், இறுதியில் சீனாவின் குழுவே அந்த உரிமையை வெற்றி கொண்டுள்ளதாகவும் இலங்கையின் Board of Investment […]

பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது இந்தியா

பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்து உள்ளது. பர்மாவின் படைகள் அந்நாட்டு Rohingya மக்கள் மீது செய்யும் கொடுமைகளை உலகம் கண்டிக்கும் இந்த நேரத்திலேயே இந்தியா பர்மாவின் படைகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. . பர்மாவின் கடற்படை தளபதி தற்போது இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். இந்த பயண காலத்திலேயே மேற்படி ஆயுத விற்பனை தெடர்பாக உரையாடப்பட்டு உள்ளது. அத்துடன் பர்மாவின் கடற்படைக்கு இந்தியா பயிற்சிகளும் வழங்க இணங்கி உள்ளது. . நேற்று புதன்கிழமை […]

இலங்கையில் குழந்தை பண்ணைகள்

இலங்கையில் குழந்தை பண்ணைகள் இயங்கி வருவதாக கூறுகிறது நெதர்லாந்து தொலைக்காட்சி விவரண படக்காட்சி ஒன்று. Zembla என்ற இந்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனம் Adoptibedrog – Deel 2 என்ற தலைப்பில் இன்று செப்டம்பர் 20ம் திகதி மாலை 9:15 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்வே இலங்கையின் குழந்தை பண்ணைகளை அடையாளம் காண்கிறது. . இந்த குழந்தை பண்ணைகளில் இருந்து குழந்தைகள் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாம். 1980ம் ஆண்டுகளிலேயே இங்கிருந்து அதிகம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், 1987 […]

மெக்ஸிக்கோவில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று செய்வாய் கிழமை மீண்டும் ஒரு நிலநடுக்கம் மெக்ஸிக்கோவை தாக்கியுள்ளது. மெக்ஸிக்கோவின் தலைநகரான Mexico Cityயை 7.1 அளவிலான (7.1 magnitude) இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த நடுக்கத்துக்கு பலியானோர் தொகை தற்போது 119 ஆக உள்ளது. . உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:14 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்துக்கு பல மாடி கட்டிடங்களும், பாலங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன. . அமெரிக்காவின் Geological Survey இந்த நடுக்கத்தின் மையம் Mexico Cityக்கு தெற்கே 122 km […]

ரஷ்யாவின் Zapad யுத்த பயிற்சியால் NATO விசனம்

ரஷ்யாவும், பெலரூஸும் (Belarus) கடந்த வியாழன் முதல் Zapad 2017 என்ற யுத்த பயிற்சியில் (war game) ஈடுபட்டு உள்ளன. இதனால் விசனம் கொண்டுள்ளன NATO நாடுகள். இந்த யுத்த பயிற்சி வழமையாக இடம்பெறும் ஒன்று என்றாலும், இம்முறை இதை NATO சந்தேக கண்ணோடு பார்க்கிறது. (Zapad என்றால் West என்று அர்த்தம்). . இந்த யுத்த பயிற்சிகளை ரஷ்யா Lubenia, Vesbaria, Veishnoria ஆகிய பகுதிகளில் நடத்துகிறது. இந்த பகுதிகள் NATO நாடுகளான Poland, Lithuania, […]

கென்யாவில் வெள்ளை ஒட்டக சிவிங்கி

ஆபிரிக்கா கண்டத்து கென்யா (Kenya) என்ற நாட்டில் உள்ள Ishaqbini Hirola சரணாலத்துக்கு அண்மையில் வெள்ளை நிற ஓட்டக சிவிங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழமையாக சிவிங்கிகள் மண்ணிறத்திலும், வரைகளை கொண்டதாகவும் இருக்கும். ஆனால் இந்த தாய் சிவிங்கி வரைகள் இல்லாது, வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. . இந்த தாய் சிவிங்கி அருகே அதன் சேய் சிவிங்கியும் நின்றுள்ளது. சேய் சிவிங்கி அங்கங்கே தாயை போல் வெள்ளை நிறத்தையும் மற்றைய இடங்களில் வழமையான சிவிங்கி போல் மண்ணிறத்தையும் கொண்டிருந்தது. […]

மலேசிய பாடசாலை தீ தொடர்பாக 7 மாணவர் கைது

கடந்த வியாழன் அன்று மலேசிய இஸ்லாமிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ தொடர்பாக 7 மாணர்வர்களை கைது செய்துள்ளதாக மலேசிய போலீசார் கூறியுள்ளனர். இந்த மாணவர்கள் 11 முதல் 18 வயதுடையவர் ஆவர். . இந்த தீக்கு 21 மாணவரும், 2 ஊழியர்களும் பலியாகி இருந்தனர் (முதலில் 23 மாணவர் பலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது).. . ஆரம்பத்தில் போலீசார் இந்த தீயை மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்து என்றே கருதினர். ஆனால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் […]

3ம்-4ம் நூற்றாண்டு இந்திய சுவடியில் பூச்சியம்

தற்கால கணிதத்தில் மிகமுக்கிய பாகம் தான குறிப்பீடு (place value) ஆகும். அந்த தானத்தை மெருகூட்ட தோன்றியது பூச்சிய குறியீடு. இந்த இரண்டையும் கொண்டதாலேயே இன்று நடைமுறையில் இருக்கும் கணித முறைமை உலகத்தில் இருந்த மற்றைய எல்லா கணித முறைமைகளையும் பின்தள்ளி முன்வந்தது. . இந்த தான குறிப்பீடும், பூச்சிய குறியீடும் எந்த கலாச்சாரத்தில் இருந்து தோன்றியது என்பதை நிரூபிக்க விஞ்ஞானம் தன்னால் முடிந்ததை செய்கிறது. . இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் […]

வடகொரியா ஏவியது மீண்டுமொரு ஏவுகணை

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை இன்று ஏவியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை 6:57 மணியளவில், வடகொரியாவின் தலைநகருக்கு அண்மையில் உள்ள Sunan என்ற இடத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு உள்ளது. . தென்கொரியா மற்றும் ஜப்பான் கணிப்புகளின்படி இந்த ஏவுகணை 770 km உயரம் சென்று, 3,700 km தூரம் கிழக்கே பாய்ந்து பசுபிக் கடலுள் வீழ்ந்துள்ளது. முன்னரைப்போல் இம்முறையும் வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் மேலாக சென்றுள்ளது. அமெரிக்காவின் படைகள் நிறைந்த குஆம் (Guam) […]

முதலை பலியெடுத்த பிரித்தானிய பத்திரிகையாளர்

பிரித்தானியாவின் Financial Times என்ற பத்திரிகையின் பத்திரிகையாளராக பணிபுரியும் பிரித்தானியர் ஒருவர் அறுகம் குடா பகுதியில் முதலை ஒன்றால் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. Oxford பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற, 25 வயதுடைய, Paul McClean என்பவரே இவ்வாறு பலியானதாக கூறப்படுகிறது. இவரின் உடல் இதுவரை காணப்படவில்லை. . Paul McClean நண்பர்களுடன் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று இவரும் இவரின் நண்பர்களும் கடலில் surfing விளையாட சென்றுள்ளார். அப்போது இவர் நண்பர்களை விட்டு விலகி […]