இலங்கையில் நியூசிலாந்துக்கான தூதுவராலயம் ஒன்றை அமைக்க நியூசிலாந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த செய்தியை நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Murray McCully வெளியிட்டு உள்ளார். . “Sri Lanka offers increasing value and diversity to our exports, and is a trade gateway to a fast-growing part of Asia” என்றுள்ளார் McCully. . நியூசிலாந்து அரசின் 2017 ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் இலங்கை தூதுவராலய நிர்மாணத்துக்கு $6.2 மில்லியன் […]
பொதுநல சேவை நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வடக்கு வருகிறார் இந்திய நடிகர் ரஜனிகாந்த். இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 9ம் திகதி இடம்பெறும். . தனது பணத்தின் போது இவர் ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்குவர். Gnanam Foundation சுபாஷ்கரன் என்பவரின் Lyca Productions என்ற அமைப்பின் ஓர் அங்கமாகும். ஞானம் என்பவர் சுபாஷ்கரனின் தாயார் ஆவர். இந்த வீடுகள் வவுனியாவில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ளன. . ரஜனி […]
அண்மை காலங்களில் விமான பயணிகள் தமது carry-on பைகளுள் பெருமளவு திரவங்கள், கழிகள் எடுத்து செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் laptops, tablets, cameras, DVD Players, video games போன்ற இலத்திரனியல் பொருட்கள் எடுத்து செல்லப்படுவது தடை செய்யப்பட்டு இருந்திருக்கவில்லை. இப்போது அவ்வாறான இலத்திரனியல் பொருட்களுக்கும் சில விமானங்களில் தடை வந்துள்ளது. . அமெரிக்கா நோக்கி வரும் சில விமான சேவைகளில் carry-on பைகளில் cell phone அளவுக்கும் பெரிதான இலத்திரனியல் பொருட்கள் எடுத்து […]
இலங்கையின் தென்மேற்கே அதி வறுமையில் வாழும் சிறுவருக்கு உதவும் பொருட்டு கொழும்பில் இயங்கிவரும் Rainbow Centreக்கு நன்கொடை சேர்க்க கனடியர் இருவரும், மேலும் சிலரும் ஓமானில் (Oman) சைக்கிள் ஓடியுள்ளார். கனடாவின் Calgary நகரின் Wallace King, வயது 64, மற்றும் Pat Dodge, Yuri Lipkov உட்பட 6 பேர் இந்த ஓடத்தில் பங்கு கொண்டிருந்தனர். இவர்கள் மொத்தம் $30,000 தமது நன்கொடைக்கு சேர்த்துள்ளனர். . ஓமானில் இவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 200 km […]
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் Chang Wanquan இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று ஞாயிரு புறப்பட்ட Wanquan நேபாளுக்கும் பயணம் செய்வார். சீன அமைச்சரின் பயணம் சம்பந்தமாக இருநாடுகளும் பெரிதாக செய்திகளை வெளியிடவில்லை. . தனது பயணத்தின்போது சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை அரசாங்க உயர் அதிகாரிகள், Defense Staff College அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவார். இவரின் பயண காரணம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாவிடினும், இலங்கை மீது இவர் அழுத்தங்கள் கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது. […]
சீனா தனது Belt and Road Initiative (BRI) திட்டத்தின் அங்கமாக ஒரு பெருந்தெருவை சீனா, பாகிஸ்தான் ஊடு அமைக்கிறது. இந்த பெருந்தெரு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் ஊடாகவே செல்கிறது. தற்போது ஐ. நா. தீர்மானம் (resolution) ஒன்றும் இந்த பெருவீதி திட்டத்தில் இணைத்துள்ளது. அதனால் முழு காஸ்மீரையும் தனது என்று கூறும் இந்தியா விசனம் கொண்டுள்ளது. . கடந்த வெள்ளிக்கிழமை ஐ. நா. பாதுகாப்பு செயலகம் (UNSC) ஆபிகானிதான் தொடர்பாக எடுத்துக்கொண்ட தீர்மானம் ஒன்றே […]
சோமாலியா அகதிகள் சென்ற வள்ளம் ஒன்றின் மீது ஹெலி ஒன்று நடாத்திய சூட்டுக்கு 33 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். இந்த செய்தியை IOM (international Organization for Migration) பேச்சாளர் Joel Millman உறுதி செய்துள்ளார். இவரின் கருத்துப்படி இந்த அகதிகள் சோமாலியாவில் சூடான் நாட்டை நோக்கி பயணித்தவர்களாக இருக்கலாம். மரணித்தவருள் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். . ஐக்கிய நாடுகளின் UNHCR அமைப்பும் இந்த சம்பவத்துக்கு கவலை தெரிவித்துள்ளது. . இந்த தாக்குதல் […]
நேற்று செவ்வாய் ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice) கூறிய தீர்ப்பில் புலிகள் (LTTE) ஒரு பயங்கரவாத இயக்கம் என்று மீண்டும் கூறியுள்ளது (Judgment ECLI:EU:C:2017:202). . LTTE ஒரு பயங்கரவாத இயக்கம் இல்லை என்றும், அதனால் அந்த இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தற்போது முடக்கப்பட்டுள்ள அது சார்ந்த 4 நபர்களின் சொத்துக்களை (frozen assets) விடுவிக்க வேண்டும் என்றும் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே (Case C-158/14) இவ்வாறு தீர்ப்பு கூறப்பட்டு […]
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் ஆக இருந்த காலத்தில் இருந்தே அவரின் வருமானத்தையும், அவர் செலுத்திய வரியையும் அறிய பலர் ஆவலாக இருந்தனர். இந்த விபரங்களை பத்திரிகையாளர் டிரம்பிடம் கேட்டிருந்த போதும், டிரம்ப் தனது வரி மீள் பரிசீலனையில் (audit) உள்ளதகாவும், அது முடிந்தபின் வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னரும் அவ்வாறே கூறு இழுத்தடித்து வந்தார். . ஆனால் இன்று MSNBC என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டுக்கான டிரம்பின் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அண்மையில் இடம்பெற்ற உத்தரபிரதேச மாநில தேர்தலில் பெருவெற்றி அடைந்துள்ளது. மொத்தம் 403 ஆசனங்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்து தேர்தலில் BJP 312 ஆசனங்களை வென்றுள்ளது. இது, 7 ஆசனங்களை மட்டும் வென்ற, காங்கிரஸ் கடைசிக்கு பலத்த அடியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பிரதமர் மோதிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கருதலாம். . கடந்த மாத இறுதியிலும், இந்த மாத ஆரம்பத்திலும் […]