கம்போடியாவிலிருந்து 250 இந்தியர் மீட்பு

கம்போடியாவிலிருந்து 250 இந்தியர் மீட்பு

கம்போடியாவிலிருந்து 250 இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூரகிழக்கில் தொழில்நுட்ப துறை தொழில் தருவதாக கூறி அழைத்து பின் அவர்களை அடைத்து வைத்து இணையம் மூலமான குற்றச்செயல்களுக்கு (cyber crime, online scams) பயன்படுத்தி உள்ளனர். கடத்தப்பட்ட ஒருவருக்கு பெண் ஒருவரின் படங்களை வழங்கி அவற்றை பயன்படுத்தி Facebook போன்ற கணக்குகளை ஆரம்பித்து பலரிடம் பணம் பறிக்க வைத்துள்ளனர். சிலரை வரி திணைக்கள அதிகாரிகளாக நடிக்க வைத்து பணம் பறித்துள்ளனர். 2023ம் ஆண்டு ஐ. […]

ஏப்ரல் 8 வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

ஏப்ரல் 8 வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

வரும் ஏப்ரல் 8ம் திகதி வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம் இடம்பெறும். இந்த கிரகணம் சில இடங்களில் 4 நிமிடங்கள் 28 செக்கன்களுக்கு இருளை பரப்பும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. வட அமெரிக்காவின் தென் மேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு நோக்கி இந்த கிரகணம் நகரும். அதனால் இது Mazatlan (Mexico); 4m 14s, Dallas; 3m 47s, Little Rock; 2m 33s, Indianapolis; 3m 46s, Cleveland; 3m […]

ஆட்டம் காணும் பைடெனுக்கு உதவ வந்த ஒபாமா, கிளின்டன்

ஆட்டம் காணும் பைடெனுக்கு உதவ வந்த ஒபாமா, கிளின்டன்

தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடென் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ரம்பிடம் தோல்வி அடையலாம் என்ற பயம் கொண்ட பைடென் தரப்பு முன்னாள் Democratic கட்சி சனாதிபதிகளான ஒபாமாவையும் (Obama), கிளின்டனையும் (Bill Clinton) பிரசாரத்துக்கு அழைத்துள்ளது. நியூ யார்க் நகரத்து Radio City Music மண்டபத்தில் வியாழன் இடம்பெற்ற பைடென் பிரச்சார நிகழ்வில் ஒபாமாவும், கிளின்டனும் பைடெனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்த நிகழ்வு $25 மில்லியன் பணத்தை திரட்டியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 5,000 பேர் பங்கு கொண்டதாகவும் அனுமதி கட்டணங்கள் $250 முதல் $500,000 […]

மீண்டும் நெருங்கும் சீன-அஸ்ரேலிய உறவு, 218% wine வரி நிறுத்தம்

மீண்டும் நெருங்கும் சீன-அஸ்ரேலிய உறவு, 218% wine வரி நிறுத்தம்

சீனாவுக்கும் அஸ்ரேலியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் நெருக்கம் அடைய ஆரம்பித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அஸ்ரேலிய wine களுக்கு சீனா நடைமுறை செய்திருந்த 218.4% இறக்குமதி வரி மார்ச் 29ம் திகதி முதல் நிறுத்தப்படுகிறது. இதனால் அஸ்ரேலிய wine சீன சந்தையை முழுமையாக அடைகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்தில் அஸ்ரேலியாவை ஆட்சி செய்த ரம்ப் ஆதரவு அரசு சீனாவுடன் முரண்பட்டது. அதனால் சீனா மெல்ல அஸ்ரேலிய தயாரிப்புகள் மீது மேலதிக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்தது. மேற்கு நாடுகள் அஸ்ரேலியா சீனாவுடன் முரண்படுவதை விரும்பினாலும், அஸ்ரேலியாவின் தயாரிப்புகளை […]

ஜப்பானில் சிறுவர் Diaper தயாரிப்பை நிறுத்தி முதியோர் Diaper தயாரிப்பு

ஜப்பானில் சிறுவர் Diaper தயாரிப்பை நிறுத்தி முதியோர் Diaper தயாரிப்பு

இதுவரை சிறுவர்களுக்கான diaper தயாரித்து வந்த ஜப்பானின் Oji Nepia என்ற நிறுவனம் தாம் அப்பணியை நிறுத்தி, முதியோருக்கான diaper தயாரிப்பில் மட்டும் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு காரணம் ஜப்பானில் குழந்தைகள் பிறப்பது குறைந்து, முதியோர் தொகை வேகமாக அதிகரிப்பதே. 2001ம் ஆண்டு 700 மில்லியன் diaper களை தயாரித்த Oji தற்போது சந்தையின் அளவு குறைவதால் ஆண்டுக்கு 400 மில்லியன் diaper களை மட்டுமே தயாரிக்கிறது. 2023ம் ஆண்டு ஜப்பானில் 753,631 குழந்தைகள் மட்டுமே […]

கப்பல் மோதி Baltimore பாலம் உடைந்தது, வாகனங்கள் ஆற்றில்

கப்பல் மோதி Baltimore பாலம் உடைந்தது, வாகனங்கள் ஆற்றில்

அமெரிக்காவின் Maryland மாநிலத்து Baltimore நகரினூடு ஓடும் Patapsco என்ற ஆற்றில் சென்ற கொள்கலன் காவும் பெரியதோர் கப்பல் Francis Scott Key Bridge என்ற பாலத்தில் மோதியதால் பாலம் முற்றாக உடைந்து விழுந்துள்ளது. உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 1:30 மணிக்கு (1:30 ET) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பாலம் 1.6 மைல் நீளமானது, 4 lane களை கொண்டது. அப்போது பாலத்தில் சென்ற வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. இழப்புகளின் விபரம் இதுவரை அறியப்படவில்லை. சிங்கப்பூரில் […]

ஐ. நா. தீர்மானத்தால் அமெரிக்காவுடன் இஸ்ரேல் முறுகல்

ஐ. நா. தீர்மானத்தால் அமெரிக்காவுடன் இஸ்ரேல் முறுகல்

நேற்று ஐ. நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க பைடென் அரசு அமெரிக்காவின் வீட்டோ (veto) வாக்கை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேறாது தடுக்கவில்லை என்பதால் இஸ்ரேல் அமெரிக்காவுடன் முரண்பட ஆரம்பித்துள்ளது. நேற்றைய ஐ. நா. தீர்மானம் இஸ்ரேல் உடனே காசா யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. அமெரிக்கா இந்த தீர்மானத்தை அதன் வீட்டோ வாக்கு மூலம் தடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் […]

உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. தீர்மானம்

உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. தீர்மானம்

இன்று திங்கள் ஐ. நா. பாதுகாப்பு சபை செய்து கொண்ட வாக்கெடுப்பில் உடன் காசா யுத்த நிறுத்தத்துக்கான தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா வாக்களியாது இருக்க (abstained) ரஷ்யா, சீனா உட்பட ஏனைய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்கா இம்முறை தனது வீட்டோ வாக்கை பயன்படுத்தி தீர்மானத்தை தடை செய்யவில்லை. இது அமெரிக்காவின் போக்கில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றத்தை காட்டுகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் இந்த தீர்மானத்துக்கு இணங்க செயற்படுமா  என்பது அறியப்படவில்லை.

சீன அரச கணினிகளில் அமெரிக்க Chip களுக்கு தடை

சீன அரச கணினிகளில் அமெரிக்க Chip களுக்கு தடை

அமெரிக்காவின் Intel மற்றும் AMD (Advanced Micro Devices) ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாரிக்கும் chip களை சீன அரச திணைக்களங்களின் கணினிகளில் இருந்து நீக்குமாறு சீனா அறிவித்துள்ளது. மேற்படி chip களுக்கு பதிலாக சீன நிறுவனங்கள் தயாரிக்கும் chip கள் பயன்படுத்தப்படும். அதனால் மேற்படி அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் வருமானத்தை இழக்கும். 2023ம் ஆண்டில் Intel தனது வருமானத்தின் 27% த்தை சீனாவில் இருந்தே பெற்றுள்ளது. AMD நிறுவனம் 15% […]

இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

இலங்கை McDonald’s மூடப்பட்டது, சுகாதாரம் கேள்வியில்

The Commercial High Court of Colombo விடுத்த உத்தரவுக்கு அமைய இலங்கை McDonald’s உணவகங்கள் அனைத்தும் இன்று ஞாயிறு முதல் மறு ஏப்ரல் 4ம் திகதி வரை மூடப்படுகின்றன.  இலங்கை கிளைகளுக்கான உரிமை எடுத்து இயக்கும் (franchise) Abans PLC இந்த கிளைகளில் சர்வதேச தரத்திலான சுகாதார முறைமைகளை நடைமுறை செய்யவில்லை என்று அமெரிக்க தாய் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தற்போது 12 McDonald’s உணவகங்கள் இலங்கையில் Abans நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இவை கொட்டாஞ்சேனை, […]