சிங்கப்பூரில் சனத்தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்பு

சமீப காலங்களில் சனத்தொகை பெருக்க வீதம் குறைந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. உலக வங்கியின் கருத்துப்படி 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சனத்தொகை பெருக்கம் தாய்க்கு 1.2 குழந்தைகள். இந்த வீதம் சனத்தொகையை சமஅளவில் வைத்திருக்க போதுமானது இல்லை. சனத்தொகையை சம அளவில் வைத்திருக்க தாய்க்கு குறைந்தது 2.1 குழந்தையாவது தேவை. இவாறான குறைந்த சனத்தொகை [பெருக்க வீதம் விரைவில் சிங்கப்பூரின் மொத்த சனத்தொகையை குறைக்கும். அதுமட்டுமன்றி விரைவில் சிங்கப்பூரின் பெரும்பாலானோர் முதியோர்களாயும் சிறு தொகையினரே உழைக்கு, வரி செலுத்தும், சேவைசெய்யும் வயதினராகவும் இருப்பர். இந்த […]

ரஷ்யாவில் விழுந்த விண்கல், 1000 வரை காயம்

இன்று உள்ளூர் நேரப்படி காலை 9:20 மணியளவில் ரஷ்யாவின் Ural  மலைப்பகுதியில் பாரிய விண்கல் ஒன்று வீழ்ந்துள்ளது. இப்பகுதி மொஸ்கோவில் இருந்து சுமார் 1500 km கிழக்கே உள்ளது. இந்த நிகழ்வின்போது சுமார் 1000 பெயர்கள் காயமடைத்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிதறி பறந்த கண்ணாடி துண்டுகள் காரணமாகவே காயமடைந்து உள்ளனர். இந்த கல் சுமார் 10 தொன் எடை கொண்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்கல் வளிமண்டலத்துள் நுழையும்போது சுமார் 54,000 km/h ஆக இருந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது. பூமிக்கு மேலே 30 […]

அறுவடைக்கும் உரிமைகொள்ளும் Monsanto

Mnsanto Co என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனம் genetically modified பயிர்களை தயாரிப்பவர்கள். அத்துடன் அவ்வாறு தயாரித்த பயிர்களை தமது உடமையாக பெரும் பணம் செலவு செய்து பாதுகாப்பவர்கள். அண்மையில் இந்த நிறுவனம் 75 வயதுடைய Vernon Bowman என்ற அமெரிக்க கமக்காரருக்கு எதிராக வழக்கு ஒன்றை 2007 ஆம் ஆண்டில் தாக்கல் செய்திருந்தது. ஆரம்ப நீதிமன்றம் Monsanto சார்பில் தீர்ப்பு கூறி இருந்தது. இபோது இந்த வழக்கு உயர் நீதிமன்றம் செல்கின்றது. Vernon Bowman செய்த குற்றம் என்ன? Monsanto விற்பனை செய்த […]

வடகொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியா சிறிய ஆனால் வலுமிக்க அணுக்குண்டு ஒன்றை வெடித்து மூன்றாவது முறையாக பரிசோதனை செய்துள்ளது. ஐ.நா., அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் உதாசீனம் செய்துவிட்டு வடகொரியா இந்த பரிசோதனையை நடாத்தியுள்ளது.1960 களில் USSR இன் உதவியுடன் இத்துறையில் செயல்பட தொடங்கிய வடகொரியா தனது முதல் அணுக்குண்டை 2006 பரிசோதனை செய்திருந்தது. பின்னர் இரண்டாவது பரிசோதனையை 2009 இல் செய்திருந்தது. முதல் இரண்டு குண்டுகளும் புளுடோனியத்தை அடிப்படையாக கொண்டவை. ஆனால் மூன்றாவது குண்டு யுரேனியத்தை அடிப்படையாக கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு […]

ஆப்கானிஸ்தான் இலஞ்ச தொகை $3.9 பில்லியன்

2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட மொத்த தொகை US$ 3.9 என்கிறது UN அறிக்கை ஒன்று. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தின் இரண்டு மடங்கு எனப்படுகிறது. இலஞ்சம் கொடுப்பதை வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள் பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மக்கள். இங்கு அதிகம் இலஞ்சம் பெறுவது நீதிபதிகளும், அரச சட்டத்துரையினருமே. இவர்கள் பெறும் சராசரி இலஞ்சம் சுமார் $300. வைத்திய துறையினர் சராசரி $100 பெறுகின்றனர். இலஞ்சம் காரணமாக கடந்த கார்த்திகை மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் […]

சாலமன் தீவு பகுதியில் 8.0 நிலநடுக்கம்

இன்று புதன்கிழமை சாலமன் தீவுகளுக்கு அண்மையில் 8.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கம் 1.5 மீட்டர் உயர அலைகளை உருவாக்கி இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு அண்மையில் உள்ள Vanuath என்ற இடத்தில் 11 cm வரையான அலைகள் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் நிலைய கூற்றுப்படி இந்த நிலநடுக்கம் Lata என்ற இடத்தில் இருந்து 81 km மேற்கே, 5.8 km ஆழத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 200 தீவுகளை கொண்ட சாலமன் தீவுகளின் […]

எகிப்தில் ஈரானிய ஜனாதிபதி Ahmadinejad

சுமார் 32 வருடங்களின் பின் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் எகிப்துக்கு பயணம் செய்துள்ளார். மாசி மாதம் 6 ஆம் திகதி எகிப்தில் நடைபெற உள்ள Organisation of Islamic Cooperation (OIC) இல் பங்கு கொள்வதற்காக அங்கு சென்ற Ahmadinejad எகிப்திய ஜனாதிபதி மோர்சி உட்பட பல உயர்மட்ட எகிப்திய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். 1980 களில் எகிப்து அமெரிக்காவின் கைப்பொம்மை ஆனபின், எகிப்துவுக்கும் ஈரானுக்கும் இடையில் உறவுகள் முறிந்திருந்தன. அம்முறிவு முபாரக் பதவியில் இருந்து 2012 ஆம் ஆண்டில் துரத்தப்படும்வரை நீடித்தது. […]

சீனாவில் வாணவேடிக்கை வாகன விபத்து, 9 பேர் பலி

சீனாவின் G30 என்ற பெரும்தெருவில் உள்ள 30 மீட்டர் உயரமான பாலம் ஒன்றில் வாணவேடிக்கை பொருட்களை ஏற்றி சென்ற பாரிய வாகனம் ஒன்று வெடித்ததால் 80 மீட்டர் நீள பாலத்துண்டு உடைந்து வீழ்ந்துள்ளது. அப்போது அதில் சென்றுகொண்டிருந்த சுமார் 25 வாகனங்களும் 30 மீட்டர் வரை வீழ்ந்ததால் 9 பேர் பலியாகியும் பலர் காயமடைந்தும் உள்ளனர். உள்ளூர் நேரப்படி இவ்விபத்து காலை 8:50 அளவில் இடம்பெற்றுள்ளது. 4400 km நீளமான G30 பெரும்தெரு சீனாவில் கிழக்கு-மேற்காக செல்லும் நீளம் கூடிய பெரும்தெரு ஆகும். மாசி […]

மெக்ஸிகோவில் வெடிவிபத்து, 14 பேர் பலி

மெக்ஸிகோவின் அரச எரிபொருள் நிறுவனமான PeMex இனது தலைமையகத்தில் இடம்பெற்ற வெடிவிபத்துக்கு 14 பேர் பலியாகியும், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் சிலர் இன்னமும் இடிபாடுகளுள் உள்ளனர். இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் பிற்பகல் 3:30 மணியளவில் மெக்ஸிகோவின் தலைநகர் Mexico City யில் இடம்பெற்றுள்ளது. இந்த 51 மாடி கட்டடத்தின் நிலக்கீழ் பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கும் எரி வாயு ஒழுக்கும் இவ் வெடிப்புக்கு காரணமாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் வெடிப்பின் காரணம் உத்தியோக பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. […]

சீனாவின் முதலாவது கனரக விமானம் Yun-20

சீனா தனது முதாவது கனரக விமானத்தை வெற்றிகரமாக வெள்ளோட்டம் செய்துள்ளது. Yun-20 என்ற 47 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானம் தொடர்ச்சியாக 7800 km வரை 60 தொன் சுமையை எடுத்து செல்லக்கூடியது. இந்த விமானம் அமெரிக்காவின் C-17 விமானத்துக்கு நிகரானது.அமெரிக்கா, ரஷ்யா, உக்கிரேன், ஆகிய மூன்று நாடுகளுக்கும் அடுத்ததாக சீனாவே இப்போது இவ்வகை விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. உக்கிரேனின் விமானக்கள் USSR காலத்து செயல்பாடுகளின் அபிவிருத்தியுன் அடிப்படையில் அமைந்தது. சீனா படிப்படியாக Boeing, AirBus போன்ற வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனக்களில் தங்கி இருப்பதை குறைக்க […]