வல்வெட்டித்துறை பட்ட போட்டி 2025

வல்வெட்டித்துறை பட்ட போட்டி 2025

அடாத மழையில் நனைந்து, கிழிந்தாலும் விடாது ஏறிய வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2025 பட்டங்கள் கீழே: பட்ட போட்டி பட்டங்களின் தரம் உயர 3 வழிகள்: 1) வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் பங்கு கொள்ளும் பட்டங்களில்  ஏறக்குறைய அனைத்தும் ‘பெட்டி’ பட்டங்களே. பெட்டி பட்டங்களுக்கு மேலே பொம்மைகளை வைப்பது அல்லது பெட்டி பட்டத்தை சுற்றி உயிரின உடல் அமைப்பது பெரும் மகிமை ஆகாது. பெட்டி பட்டம் எவராலும் கட்டி ஏற்றப்படக்கூடியது. பெட்டி பட்டத்தின் aerodynamics மிக சாதாரணமானது. ஆனால் 60, 70 அல்லது அதிலும் கூடிய […]

மீண்டும் காசாவில் யுத்த நிறுத்த நம்பிக்கை 

மீண்டும் காசாவில் யுத்த நிறுத்த நம்பிக்கை 

காசாவில் மீண்டும் யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இந்த முயற்சிகள் கைகூடினால் முதல் கட்ட யுத்த நிறுத்தம் விரைவில் நடைமுறை செய்யப்படும். இக்காலத்தில் ஹமாஸ் 33 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும். முதல் கட்ட யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட்டால் அன்றைய தினத்தில் இருந்து 16ம் தினம் இரண்டாம்  கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகும். ஆனால் இந்த இரண்டாம் கட்ட பேச்சு காலத்தில் ஆட்சியில் இருக்கவுள்ள ரம்ப் என்ன செய்வார் என்பது எவருக்கும் தெரியாது. சில விசயங்கள் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளன. […]

தடைகளுக்கு மத்தியிலும் சீன ஏற்றுமதி 10.7% வளர்ச்சி

தடைகளுக்கு மத்தியிலும் சீன ஏற்றுமதி 10.7% வளர்ச்சி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனா மீது பெரும் தடைகளை விதித்தாலும் டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 10.7% ஆல் வளர்ச்சி அடைந்துள்ளது என்று இன்று திங்கள் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. ரம்ப் இந்த மாதம் சனாதிபதி ஆனவுடன் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை அதிகரிக்கலாம் என்ற பயத்தில் மேற்கு நாடுகளின் வர்த்தகங்கள் அதிகரித்த இறக்குமதியை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆசியாவிலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. அதேவேளை சீனாவின் இறக்குமதி 1% ஆல் அதிகரித்து உள்ளது.  […]

சர்வதேச நீதிமன்றுக்கு அமெரிக்கா தடை 

சர்வதேச நீதிமன்றுக்கு அமெரிக்கா தடை 

International Criminal Court (ICC) என்ற சர்வதேச குற்ற நீதிமன்றுக்கு அமெரிக்க காங்கிரசின் அங்கமான House வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. Illegitimate Court Counteraction Act என்ற இந்த சட்டத்துக்கு 243 House உறுப்பினர்கள் ஆதரவாகவும், 140 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து உள்ளனர். காசாவில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹுவை கைது செய்ய ICC பிடியாணை வழங்கியதே அமெரிக்காவின் மூர்க்கத்துக்கு காரணம். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு ஐ.நா., ICC போன்றவற்றின் சட்டங்கள் வறிய, சிறிய […]

யெமெனில் தூக்கை நெருங்கும் கேரளா பெண்

யெமெனில் தூக்கை நெருங்கும் கேரளா பெண்

Nimisha Priya என்ற 34 வயதுடைய கேரளா பெண் யெமென் (Yemen) என்ற மத்திய கிழக்கு நாட்டில் கொலை ஒன்று காரணமாக விரைவில் தூக்கில் இடப்பட உள்ளார். தற்போது மரணித்தவரின் குடும்பம் மட்டுமே இந்த குற்றத்தை மன்னித்து தூக்கை தடுக்கலாம். வறுமை காரணமாக பிரியா தனது 19ம் வயதில் யெமெனில் வீட்டு பணிப்பெண் தொழில் செய்ய சென்றார். பின் அவர் அங்கு மருத்துவ தாதி ஆனார். 2011ம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர் தோமஸ் என்ற ஆட்டோ சாரதி […]

காசாவில் மரணித்தோர் தொகை குறைந்தது 70,000

காசாவில் மரணித்தோர் தொகை குறைந்தது 70,000

காசாவில் இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களுக்கு மரணித்தோர் தொகை 70,000 க்கும் மேலாக இருக்கும் என்று பிரித்தானியாவின் London School of Hygiene & Tropical Medicine (LSHTM) செய்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு The Lancet என்ற மருத்துவ வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகை காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட தொகையிலும் மிக அதிகம். ஆனால் மேற்கு நாடுகளில் அரசியல்வாதிகளோ காசா சுகாதார அமைச்சின் தொகையே உண்மைக்கு அதிகம் என்று கூறி இஸ்ரேலை பாதுகாக்க முனைகின்றனர். கடந்த […]

உக்கிரம் அடையும் Los Angeles காட்டுத்தீ, சிலர் பலி

உக்கிரம் அடையும் Los Angeles காட்டுத்தீ, சிலர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் பரவும் காட்டு தீக்கு குறைந்தது 5 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 150,000 பேர் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். புதன் வரை Palisades பகுதி தீ மட்டும் சுமார் 15,800 ஏக்கர் பரப்பை எரித்துள்ளது. இங்கு சுமார் 1,000 வீடுகள், கட்டிடங்கள் எரிந்து அழிந்துள்ளன. இங்கே 3 பாடசாலைகளும் தீக்கு இரையாகி உள்ளன. Eaton பகுதி தீக்கு சுமார் 10,000 ஏக்கர் பரப்பு எரிந்துள்ளது. இங்கு சுமார் […]

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக குறையும் 

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக குறையும் 

வரும் மார்ச் மாதம் முடிவடைய உள்ள இந்த பொருளாதார ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக மட்டுமே இருக்கும் என்று இந்திய அரசு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 6.4% வளர்ச்சியே இந்தியாவின் மிக குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும். ஜனவரி 20ம் திகதி முதல் ஆட்சிக்கு வரும் ரம்பின் ஆட்சியும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேலும் மந்தம் அடைய செய்யலாம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டில் 7.58% ஆகவும், 2022ம் ஆண்டில் 6.99% ஆகவும், […]

ETA: 48 நாடுகளுக்கு பிரித்தானியாவில் புதிய ‘விசா’ 

ETA: 48 நாடுகளுக்கு பிரித்தானியாவில் புதிய ‘விசா’ 

இதுவரை விசா இன்றி செல்ல உரிமை கொண்டிருந்த 48 நாட்டவர்களுக்கு பிரித்தானியாவில் ETA (Electronic Travel Authorization) என்ற புதிய ‘விசா’ நாளை ஜனவரி 8ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவற்றின் கடவுச்சீட்டு கொண்டவர்க்கே இந்த புதிய ‘விசா’ நடைமுறை செய்யப்படுகிறது. மேற்படி 48 நாட்டவர்களும் பிரித்தானியா செல்ல விசா தேவை இல்லை என்று கூறப்பட்டாலும், ETA ஒரு விசாவுக்கான அனைத்து குணம்களையும் கொண்டுள்ளது. 1) பயணத்துக்கு […]

கனடிய பிரதமர் ரூடோ பதவி விலகினார்

கனடிய பிரதமர் ரூடோ பதவி விலகினார்

கனடிய பிரதமர் ரூடோ (Justin Trudeau) தனது பதவியில் இருந்து விலகுவதாக இன்று திங்கள் அறிவித்துள்ளார். உட்கட்சி நெருக்கடி காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளார். கடந்த சில இடைக்கால தேர்தல்களில் இவரின் Liberal கட்சி படுதோல்வி அடைந்து இருந்தது. தற்போதைய கருத்து கணிப்பின்படி Liberal கட்சி 3ம் இடத்தில் உள்ளது. ரூடோ 9 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தாலும் இவர் தனது தந்தையார் போல ஒரு திடமான அரசியலை கடைபிடிக்கவில்லை. மகனின் அரசியல் விரைவில் மறக்கப்படும், ஆனால் தந்தையின் […]

1 32 33 34 35 36 362