காசாவில் யுத்த குற்றங்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் இஸ்ரேல் படையினர் இஸ்ரேலுக்கு வெளியே செல்வது ஆபத்தாக அமைகிறது. Hind Rajab Foundation (HRF) என்ற தொண்டர் அமைப்பு இஸ்ரேல் படையினரின் சர்வதேச பயணங்களை கண்காணித்து, அங்கெல்லாம் வழக்குகளை தாக்கல் செய்து வருகிறது. இந்த படையினர் தாம் காசாவில் செய்த அக்கிரமங்களை தமது Facebook போன்ற இணையங்களில் பெருமையாக பதிவு செய்தமையே இவர்களுக்கு ஆபத்தாக அமைகின்றன. பிரேசில் நாட்டில் உல்லாச பயணத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் இஸ்ரேல் படையினர் ஒருவர் அவசர […]
ஒரு ஆண்டுக்கு மேலாக காசாவில் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா $8 பில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனையை செய்யவுள்ளதாக பைடென் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. தான் பதவி விலக சில தினங்களே இருக்கையில் பைடென் அவசர, அவசரமாக இந்த விற்பனையை செய்துள்ளார். இஸ்ரேலின் கையிருப்பில் உள்ள ஆயுதங்களின் தொகை குறைந்து உள்ளதால் அவற்றை நிரப்பும் நோக்கிலேயே இந்த ஆயுத விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் அமெரிக்காவின் State Department அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை இஸ்ரேல் […]
அமெரிக்காவின் Las Vagas என்ற சூதாட்ட நகரில் உள்ள Trump Hotel க்கு முன்னாள் Tesla EV truck ஒன்றை வெடிக்க வைத்த Matthew Alan Livelsberger, வயது 37, என்பவரும் ஒரு அமெரிக்க இராணுவத்தினன் என்று அறியப்பட்டுள்ளது. இவர் பட்டாசுகளை கொண்டு செய்த தயாரித்த தரம் குறைந்த குண்டு வெடித்த பின் இவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். அவ்விடத்தில் நின்ற சிலர் சிறு காயங்களுக்கு ஆளானாலும் வேறு எவரும் பலியாகவில்லை. Matthew Livelaberger அமெரிக்காவின் விசேட பயிற்சி பெற்ற Green […]
அமெரிக்காவின் New Orleans என்ற நகரில் 15 பேர் வாகனம் ஒன்று மூலம் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு பின்னால் ISIS என்ற ஆயுத குழு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். Shamsud-Din Jabar என்பவர் ஒரு pick-up வண்டியை French Quarter என்ற New Orleans நகர் பகுதி வீதியில் இருந்த மக்கள் ஊடு செலுத்தி மேற்படி படுகொலையை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வண்டியை செலுத்தியவர் ஒரு முன்னாள் அமெரிக்க […]
கனடாவில் சீக்கியரை படுகொலை செய்ய முன் இந்தியா பாகிஸ்தானில் 6 பேரை படுகொலை செய்தது என்று அமெரிக்காவின் The Washington Post செய்தி நிறுவனம் இன்று செவ்வாய் கூறியுள்ளது. 2021ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் செய்யப்பட்ட இந்த 6 படுகொலைகளை இந்தியாவின் உளவு படையான RAW அமைப்பே செய்ததாக மேற்படி செய்தி கூறுகிறது. பாகிஸ்தானில் படுகொலைகள் செய்வதற்கு இந்தியரை பயன்படுத்தாது, பாகிஸ்தான் வன்முறை கும்பல்களையே இந்தியா பயன்படுத்தியதாக கூறுகிறது மேற்படி செய்தி. அத்துடன் இந்தியா நேரடியாக தலையிடாது UAE நாட்டில் வாழும் முகவர்கள் மூலமே […]
விண்வெளியில் இரண்டு கலங்களை இணைக்கும் (docking) பயிற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. அந்த முயற்சியின் ஒரு படியாக இந்தியாவின் ISRO திங்கள் ஒரு கணையை ஏவி உள்ளது. இந்த கணையில் 2 கலங்கள் காவப்பட்டு உள்ளன. SpaDeX என்ற இந்த பயிற்சிக்கு வசதியாக இந்தியா ஏவிய கலம் ஒவ்வொன்றும் 220 kg எடை கொண்டவை. இவை இரண்டும் 470 km உயரத்தில் பூமியை வலம் வர வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கிழமை (ஜனவரி 7ம் திகதி) இவற்றில் ஒன்று மற்றைய கலத்துடன் இணைந்து […]
மாலைதீவு அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவர்களை இந்திய ஆதரவாளர் ஆக்கும் நோக்கில் இந்தியா மாலைதீவு அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்குவதாக அமெரிக்காவின் The Washington Post செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவின் இந்த முயற்சி “Democratic Renewal Initiative” என்ற இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அந்த ஆவணத்தை தாம் பார்த்ததாகவும் The Washington Post செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மாலைதீவின் எதிர் கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கட்சி உறுப்பினர் உட்பட 40 பேருக்கு இந்தியா இலஞ்சம் வழங்க முனைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் […]
தாய்லாந்தில் இருந்து தென் கொரியா வந்த Boeing 737 வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதால் குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். இந்த விமானத்தில் மொத்தம் 175 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 173 பேர் தென் கொரியர் என்றும் 2 பேர் தாய்லாந்தினர் என்றும் கூறப்படுகிறது. Jeju Air என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானமே தென் கொரியாவின் Muan விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளானது. இந்த விமானத்தின் சக்கரங்கள் (landing gear) சரியாக இயங்காமையே விபத்துக்கு காரணம் என்று […]
நத்தார் தினத்தன்று 67 பேருடன் பயணித்த அஜபர்ஜான் (Azerbaijian) விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 38 பேர் பலியாகி பலியாகி இருந்தனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் இன்று திடீரென மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் இந்த விபத்தில் ரஷ்யாவின் பங்கு என்ன என்றும் பூட்டின் தெரிவிக்கவில்லை. Baku என்ற அஜபர்ஜான் நகரில் இருந்து Grozny என்ற Caspian கடலுக்கு மேற்கே உள்ள ரஷ்ய நகருக்கு பறந்த அஜபர்ஜான் விமான சேவைக்குரிய விமானம் காஸ்பியன் கடலுக்கு கிழக்கே Kazakhstan நாட்டில் உள்ள Aktau […]
கனடாவின் பொய் கல்லூரிகள் (colleges), பல்கலைக்கழகங்கள் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதற்கு துணை போகின்றன என்று இந்தியா கனடா மீது குற்றம் சுமத்தியுள்ளது. கனடாவின் அக்கறை இன்றிய போக்கே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. கனடாவில் மாணவ விசா எடுக்கும் பெருமளவு இந்திய மாணவர்களின் நோக்கம் கனடாவில் படிப்பது அல்ல என்றும், அவர்கள் உடனே களவாக அமெரிக்கா செல்கின்றனர் என்றும் இந்தியா தனது அறிக்கையில் கூறியுள்ளது. 2022ம் ஆண்டு தாய், தந்தை, அவர்களின் 2 சிறுவர்கள் உட்பட்ட Patel குடும்பம் கனடிய Manitoba மாகாண – […]