பிரான்ஸ் வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொள்ள அறிவித்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் Keir Starmer தொடர்ந்தும் பலஸ்தீனர் நாட்டை மறைமுகமாக மறுத்து வருகிறார். பலஸ்தீனர் நாட்டை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் அது ஒரு சமாதான தீர்வுடன் இணைந்து ஏற்படவேண்டும் என்றும் Starmer கூறியுள்ளார். பல சந்ததிகளாக மேற்கு நாடுகளின் அரசியல் புள்ளிகள் இந்த நரி தந்திர சூத்திரத்தையே பாடி வருகின்றனர். ஏனென்றால் இஸ்ரேல் என்றைக்கும் பலஸ்தீனர் நாட்டை ஏற்காது. அதனால் அங்கு தீர்வு ஏற்படாது. அதனால் Starmer போன்றோர் பலஸ்தீனர் […]
பிரான்ஸ் பலஸ்தீனர் நாட்டை செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொள்ள உள்ளதாக அந்த நாட்டின் சனாதிபதி மக்ரோன் (Emmanuel Macron) வியாழக்கிழமை கூறியுள்ளார். பிரான்ஸ் மட்டுமன்றி வேறு சில ஐரோப்பிய நாடுகளும் பிரான்சுடன் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. பல சந்ததிகளாக செய்த தவறை பிரான்ஸ் தற்போது, பெரும் அழிவுகளுக்கு பின், திருத்த முன்வந்துள்ளது. ஆனாலும் இராணுவ பலத்தை உள்ளடக்காத பிரான்சின் இந்த அரசியல் நகர்வு பலஸ்தீனருக்கு உடனடி நலன் எதையும் வழங்காது. குறிப்பாக அமெரிக்காவின் கண்மூடித்தனமான ஆதரவு உள்ளவரை இஸ்ரேலை எவரும் […]
Henley Passport Index அமைப்பின் இந்த ஆண்டுக்கான கடவுச்சீட்டு தராதர கணிப்பில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு கொண்டோர் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இரண்டாம் இடத்தில் உள்ள தென் கொரிய, ஜப்பான் கடவுச்சீட்டு கொண்டோர் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து கடவுச்சீட்டு கொண்டோர் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். 2014ம் ஆண்டில் 1ஆம் […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரியால் அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான GM (General Motors) க்கு இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முழு ஆண்டுக்கும் சுமார் $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரையான இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு GM $14.9 பில்லியன் இலாபம் அடைந்திருந்தாலும் 2025ம் ஆண்டில் $10 பில்லியன் முதல் $12.5 பில்லியன் வரையிலான இலாபத்தையே அடையும் […]
காசாவில் இஸ்ரேல் செய்யும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தும்படி 28 மேற்கு நாடுகள் திங்கள் அறிக்கை விடுத்து முதலை கண்ணீர் விட்டுள்ளன. கனடா, அஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இந்த அறிக்கையில் இணைந்துள்ளன. ஜெர்மனி மேற்படி அறிக்கையில் இருந்து விலகி இருந்துள்ளது. ஆனாலும் ஜெர்மனியும் கூடவே முதலை நடிப்புக்கு கண்ணீர் விட்டுள்ளது. இந்த அறிக்கை “the suffering of civilians in Gaza has reached new depths.” என்றும், “the drip feeding of aid and the […]
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் F-7 வகை யுத்த விமானம் ஒன்று கல்லூரி ஒன்றில் விழுந்ததால் குறைந்தது 19 பேர் பலியாகியும், மேலும் 164 வரை காயமடைந்தும் உள்ளனர். Milestone School and College என்ற கல்லூரியின் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றின் மீதே இந்த விமானம் விழுந்துள்ளது. அதன் விமானியும் பலியாகி உள்ளார் என்கிறது விமானப்படை. திங்கள் பிற்பகல் 1:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பங்களாதேஷ் செவ்வாய் கிழமையை துக்க தினமாக அறிவித்துள்ளது. இந்த கல்லூரியில் […]
Halong Bay என்ற உல்லாச பயணிகளின் விருப்பத்துக்குரிய வியட்நாம் நகரில் படகு ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தது 38 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேர் காப்பாற்றப்பட்டும் உள்ளனர். ஏனையோர் காணாமல் உள்ளனர். Wonder Sea என்ற இந்த படகில் 48 உல்லாச பயணிகளும், 5 பணியாளர்களுமாக மொத்தம் 53 பேர் விபத்தின்போது இருந்ததாக VNExpress என்ற பத்திரிகை கூறுகிறது. அப்பகுதியில் வீசிய புயல் ஒன்றே படகு கவிழ காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். தொடந்து பொழிந்த மழை […]
அமெரிக்க சனாதிபதி ரம்பிடம் எண்ணற்ற குறைபாடுகள் உள்ளன. தனக்கு தெரிந்த ஒரே மொழியான ஆங்கிலத்தில் தரமாக பேச முடியாதது முதல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது வரை அவரின் குறைபாடுகள் பல. ரம்பின் இவ்வகை குடிகார பேச்சுக்கு மகுடமாக அமைகிறது அவர் Jerome Powell என்ற அமெரிக்க Chairman of the Federal Reserve (அமெரிக்க மத்திய வங்கி) முன்னாள் சனாதிபதி பைடெனால் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் என்றும், Powell மேற்படி பதவிக்கு தகுதி அற்றவர் என்றும் கூறுவது. […]
காசா குண்டு வீச்சுகளில் இருந்து தப்பிய பல்லாயிரம் வீடுகளை, பாடசாலைகளை, அரச நிலையங்களை இஸ்ரேல் அழித்து தரை மட்டம் ஆக்கி வருகிறது. இவை இஸ்ரேல் மார்ச் மாதம் யுத்த நிறுத்தத்தில் இருந்து முறித்துக்கொண்டு பின்னரே planned demolitions மூலம் அழிக்கப்பட்டு உள்ளன. பலஸ்தீனர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்வதை தடுக்கும் நோக்கிலேயே இஸ்ரேல் இந்த திட்டமிட்ட operation control அழிப்பை செய்கிறது. இஸ்ரேலின் இச்செயலும் சந்தேகத்துக்கு இடமின்றி war crime ஆகும். முன்னாள் Ehud Olmert என்ற முன்னாள் இஸ்ரேல் […]
சீனா 600 km/h வேகத்தில் பயணிக்கவல்ல ரயில் ஒன்றை கடந்த கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இது maglev வகை (magnetic levitation) ரயில் ஆகும். இந்த ரயில் 1,200 km நீளமான பெய்ஜிங்-ஷாங்காய் பயணத்தை 2.5 மணித்தியாலத்தில் முடிக்கும். Maglev ரயில்களுக்கு சக்கரம் இல்லை. இவை காந்தமாக்கப்பட்ட பாதையில் நிலத்தில் தொடாது பயணிக்கும். 2003ம் ஆண்டு முதல் ஜெர்மனி தயாரித்த maglev ரயில் ஒன்று ஷாங்காய் நகரில் உல்லாச பயணிகளை கவர நீண்ட காலமாக சேவையில் […]