அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனா மீது பெரும் இறக்குமதி வரிகளை விதித்த பின் சீனாவை நோக்கிய வெளி நாடுகளின் முதலீடுகள் குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் மட்டும் சீன அரச மற்றும் தனியார் bond கடன்களை கொள்வனவு செய்வதன் மூலம் $17.3 பில்லியன் மேலதிக முதலீடு சீனா சென்றுள்ளது. ஆனால் அமெரிக்க bond கடனுக்கான மதிப்பு குறைந்துள்ளது. Bond மதிப்பு குறைய அந்த முதலீட்டுக்கு முதலீட்டாளர் எதிர்பார்க்கும் வட்டியும் (yield) அதிகமாகும். அதனால் புதன்கிழமை $16 […]
கடந்த 40 ஆண்டுகளாக கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடை தயாரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த NEXT என்ற பிரித்தானிய நிறுவனம் தனது ஆடை தயாரிப்பு வளாகத்தை மூடுகிறது. இலங்கையில் ஆடை தயாரிப்புக்கான செலவு அதிகமாக உள்ளதாகவும், இந்த வர்த்தகம் கடந்த பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குகிறது என்றும் NEXT கூறியுள்ளது. ஆனால் குறிப்பாக எந்த செலவு அதிகரித்து உள்ளது என்று NEXT கூறவில்லை. பொதுவாக தொழிலாளர் ஊதியம் இலங்கையில் மிகையாக அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர் கூறுகின்றனர். மேற்படி […]
திங்கள் தானும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் உரையாடிய பின்னரே யூக்கிறேன் யுத்த நிறுத்த இணக்கம் சாத்தியமாகும் என்றும் ரம்ப் தற்பொருமையாக பல தடவைகள் கூறி இருந்தாலும், திங்கள் இருவரும் 2 மணி நேரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை செய்தும் அந்த பேச்சு தீர்மானம் எதுவும் இன்றியே முடிந்துள்ளது. அதனால் யூக்கிறேன் யுத்த நிறுத்தத்த ஆரம்ப திகதி, யுத்த நிறுத்த காலம், யுத்த நிறுத்தத்தின் உள்ளடக்கம் எதுவுமே தீர்மானிக்கப்பவில்லை. அவர்கள் இருவரும் இந்த விசயங்களை பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. […]
சுமார் 2,300 ஆண்டுகள் பழமையான Zidanku Silk Manuscripts என்ற ஏடுகள் அமெரிக்காவில் இருந்து இன்று ஞாயிறு மீண்டும் சீனா சென்றுள்ளன. இவை 1946ம் ஆண்டு John Hadley Cox என்பவரால் களவாக அமெரிக்காவுக்கு எடுத்து செல்லப்பட்டன. இவை இன்றுவரை அமெரிக்காவின் Smithsonian அமைப்புக்கு சொந்தமான National Museum of Asian Art இல் இருந்தன. இதுவரை சீனாவில் எடுக்கப்பட்ட ஏடுகளில் இவையே மிக பழையவை. இவற்றில் 3 தொகுதிகள் இருந்தாலும் Volume II ம், III ம் மட்டுமே இன்று […]
உலகின் 3 பிரதான rating அமைப்புகளில் ஒன்றான Moody’s வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் கடன் வழங்கலுக்கான நாணயத்தை அல்லது உத்தரவாத அளவை அதி உயர்ந்த Aaa தரத்தில் இருந்து இரண்டாம் தரமான Aa1 க்கு குறைத்து உள்ளது. Moody 1917ம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கு வழங்கி வந்திருந்த Aaa நாணய சான்றிதழை வெள்ளி பறித்துள்ளது. அமெரிக்காவில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் அரச செலவை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதனால் அரச கடனும், அதற்கான வட்டி செலவும் வேகமாக அதிகரித்து […]
அமெரிக்க சனாதிபதி வியாழக்கிழமை UAE யின் தலைநகர் அபுதாபியில் உள்ள Sheikh Zayed Grand Mosque என்ற பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். இதுவே ரம்பின் முதலாவது பகிரங்க பள்ளிவாசல் பயணம் என்று கூறப்படுகிறது. ரம்ப் பள்ளிவாசல் விதிக்கு ஏற்ப தனது காலனியை பள்ளிவாசலுக்கு வெளியே கழற்றி விட்டே உள்ளே சென்றார். உள்ளே சென்ற இவர் “Isn’t this beautiful?” என்று கேள்வியையும் கேட்டு “It is so beautiful” என்று பதிலையும் கூறியிருந்தார். இந்த பள்ளிவாசல் உல்லாச பயணிகளை கவரும் ஒரு […]
ரஷ்யாவுக்கும் யூக்கிறேனுக்கும் இடையிலான யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் துருக்கியில் இன்று வியாழன் இடம்பெற இருந்த நேரடி பேச்சு தொடர்ந்தும் குழப்பத்தில் உள்ளது. இந்த பேச்சு ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கும், யூக்கிறேன் சனாதிபதி செலன்சிக்கும் இடையிலான நேரடி பேச்சாக இருக்கும் என்று முன்னர் கூறப்பட்டாலும், பூட்டின் இறுதி நேரத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். அதன் பின் அமெரிக்க சனாதிபதி ரம்பும் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இறுதியில் செலன்ஸ்கியும் பங்கு கொள்ள மறுத்துவிட்டார். அதனால் வியாழன் மாலை 5:00 மணிவரை இந்த பேச்சு […]
சிரியாவின் முன்னாள் சர்வாதிகாரி அசாத் விரட்டப்பட்டு, பின் அங்கு ஆட்சியை கைப்பற்றிய சர்வாதிகாரி Ahmad al-Sharaa வை சவுதி சென்ற அமெரிக்க சனாதிபதி ரம்ப் சந்தித்து உரையாடி உள்ளார். அத்துடன் சிரியா மீதான அமெரிக்காவின் தடைகளையும் நீக்கவுள்ளதாக ரம்ப் கூறியுள்ளார். Ahmad முன்னர் அல்கைய்டாவின் பங்காளி ஒருவர். இவரின் Hayat Tahrir al-Sham (HTS) என்ற ஆயுத குழு al Nusra Front மூலம் அல்கைடாவில் அங்கம் கொண்டிருந்தது. அக்காலத்தில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும், ஐ.நாவும் இவரை ஒரு பயங்கரவாதி ஆகவே கணித்தன. […]
ICC என்ற சர்வதேச நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட்டு ICC யின் கையில் உள்ள முன்னாள் பிலிப்பீன் சனாதிபதி Rodrigo Duterte, வயது 80, திங்கள் அங்கு இடம்பெற்ற இடைக்கால தேர்தலில் Davao என்ற நகரின் முதல்வராக வெற்றி பெறுகிறார். சீன சார்பு Duterte குடும்பத்துக்கு எதிராக அமெரிக்காவால் சனாதிபதியாக ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி மார்க்கோசின் மகன் Marcos Jr. அண்மையில் Duterte ஐ விமான நிலையம் ஒன்றில் வைத்து இரகசியமாக கைது செய்து நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த கைது சட்டவிரோதமானது […]