அமெரிக்காவும், சீனாவும் அடுத்து வரும் 90 தினங்களுக்கு ஒரு இடைக்கால வரி யுத்த நிறுத்தத்தை அறிவித்து உள்ளன. அதற்கு பின் என்னவாகும் என்பதை 90 தினங்களில் இடம்பெறும் பேச்சுக்கள் தீர்மானிக்கும். இந்த தற்காலிக வரி குறைப்பின் படி, ரம்ப் சீன பொருட்களுக்கு விதித்த 145% வரி வரும் 90 தினங்களுக்கு 30% ஆக குறைக்கப்படும். அதேவேளை சீனா தனது அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125% இல் இருந்து 10% ஆக குறைக்கும். ஏனைய வரிகள், தடைகள் தொடரும். பேச்சுக்கு […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது இரண்டாவது ஆட்சியில் பயணிக்கும் முதல் வெளி நாடாக சவுதி அரேபியா உள்ளது (போப்பாண்டவரின் மரண சடங்கு தவிர). ரம்ப் சவுதிக்கு செவ்வாய் பயணிக்க உள்ளார். ஆனால் இஸ்ரேல் இந்த அமெரிக்க-சவுதி நெருக்கத்தில் இருந்து விலக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க-சவுதி நெருக்கத்தில் இஸ்ரேல்-சவுதி நெருக்கமும் ஒரு அங்கமாகவே முன்னர் இருந்தது. ஆனால் காசா யுத்தத்தில் இஸ்ரேலின் போக்கு இஸ்ரேலை விலக்கி உள்ளது. இஸ்ரேல் காசா யுத்தத்தை நிறுத்தி, பலஸ்தீனர் நாட்டை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சவுதி இஸ்ரேலுடன் நெருக்கமாககும் என்று சவுதி கூறியுள்ளது. […]
மூர்க்கத்தின் உச்சத்தில் இருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் திடீரென ஒரு உடனடி யுத்த நிறுத்தத்துக்கு இணங்க அமெரிக்கா அறிந்த உளவு ஒன்றே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த உளவு என்ன என்பது இதுவரை பகிரங்கத்துக்கு வரவில்லை. அமெரிக்காவை மிரள வாய்த்த இந்த உளவு வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவை அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதை அமெரிக்கா “alarming intelligence” என்றே குறிப்பிடுகிறது. இந்த உளவை அமெரிக்காவின் உதவி சனாதிபதி JD வன்ஸ் இந்திய பிரதமர் மோதிக்கு நியூ யார்க் நேரப்படி வெள்ளி மதியம் (இந்தியாவில் வெள்ளி இரவு) […]
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக பேச்சு ஒன்று சுவிற்சலாந்து நாட்டின் ஜெனீவா நகரில் தற்போது இடம்பெறுகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் வரி யுத்தத்தில் இருந்து தம்மை விடுவித்து கொள்ளவே இந்த பேச்சு இடம்பெறுகிறது. அமெரிக்கா தரப்பில் Treasury Secretary யான Scott Bessent உம், சீனா தரப்பில் உதவி Premier He Lifeng உம் ஜெனீவா பேச்சில் ஈடுபடுகின்றனர். பேச்சுக்கு முன் ரம்ப் சீனா மீதான தனது 145% இறக்குமதி வரி மிக அதிகம் என்றும், 80% இறக்குமதி வரியே தகுந்த வரி […]
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன. இந்த இணைக்கப்படி தரை, ஆகாய, கடல் தாக்குதல் அனைத்தும் நிறுத்தப்படும். இந்த யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் பங்கு பிரதானம் என்று பாகிஸ்தான் அறிவித்தாலும், இதில் அமெரிக்காவின் பங்கு இல்லை என்கிறது இந்தியா. சில தினங்களுக்கு முன்னரே அமெரிக்க உதவி சனாதிபதி இது தங்களின் யுத்தம் இல்லை என்று கூறியிருந்தார். யுத்த நிறுத்தம் காரணமாக பாகிஸ்தான் மீண்டும் தனது வான்பரப்பை அனைத்து விமானங்களின் பயன்பாட்டுக்கு […]
அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. இவர் தனது நலனுக்காக எவரையும் கைவிடுவார், எவருடனும் நட்பு கொள்வார். நீண்ட காலமாக இஸ்ரேலின் நண்பராக இருந்த ரம்ப் தற்போது இஸ்ரேலை கைவிடுகிறாரா என்று சந்தேகிக்க வைக்கிறது அவரின் அண்மைக்கால நகர்வுகள். ரம்ப் 2016ம் ஆண்டில் இடம்பெற்ற தனது முதல் ஆட்சியில் அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு நகர்த்தி, ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, வேறும் பல இஸ்ரேலுக்கு ஆதரவான நகர்வுகளை செய்திருந்தார். ஆனால் தற்போது ரம்பின் பல நகர்வுகள் இஸ்ரேலை வியக்க வைத்துள்ளன: 1) […]
சீனாவின் AVIC Chengdu Aircraft நிறுவதின் பங்கு சந்தை பெறுமதி Shenzhen பங்கு சந்தையில் இந்த கிழமை சுமார் 40% ஆல் அதிகரித்து உள்ளது. இதன் பெறுமதி புதன் கிழமை மட்டும் 17% ஆல் அதிகரித்து உள்ளது. மறுதினம் வியாழன் மேலும் 20% ஆல் அதிகரித்து உள்ளது. அதற்கு காரணம் இந்த நிறுவனம் தயாரித்து பாகிஸ்தானுக்கு வழங்கிய யுத்த விமானமான J-10 வகை யுத்த விமானங்கள் புதன்கிழமை 3 பிரான்ஸ் தயாரித்த Rafale வகை யுத்த விமானங்களையும், 1 ரஷ்யா […]
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இராணுவ தாக்குதல்கள் தொடர்கின்றன. இரு தரப்பும் தமது இழப்புகளை முடிந்தவரை மறைத்தும், எதிரி தரப்பு இழப்புகளை விபரித்து செய்திகளை வெளியிடுகின்றன. பாகிஸ்தான் இந்திய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் செய்துள்ளதாக இந்தியா கூறுகிறது. ஆனால் தாம் அவ்வாறு செய்யவில்லை என்கிறது பாகிஸ்தான். பதிலுக்கு தாம் எல்லைகளில் மட்டும் 40 முதல் 50 வரையிலான இந்திய படையினரை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. இந்தியாவின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் 31 பொதுமக்கள் பலியானதாக கூறுகிறது பாகிஸ்தான். ஆனால் […]
கனடாவில், குறிப்பாக ரொரண்ரோ (Toronto) நகர் பகுதியில் வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகின்றன. 2024ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஏப்ரல் மாத வீடு விற்பனை 23.3% ஆல் வீழ்ச்சி அடைந்து, வீடுகளின் சராசரி விலையும் ஒரு மில்லியனுக்கு டாலருக்கு குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பகுதியில் 7,302 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5,601 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு […]
இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் யுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 26 உல்லாச பயணிகளை படுகொலை செய்தமைக்கு பதிலடி வழங்கும் நோக்கில் இந்தியா பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் 9 இடங்களில் தாக்குதல்களை செய்துள்ளது. இந்த தாக்குதலுக்கு குறைந்தது 26 பேர் பாகிஸ்தான் தரப்பில் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் பதிலுக்கு செய்த தாக்குதலுக்கு இந்தியா தரப்பிலும் குறைந்தது 10 பேர் பலியாகியும், 32 காயமடைந்தும் உள்ளனர் என்கிறது இந்தியா. இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு குறுக்கே இரு […]