பாரடா பிரபாகரா

பாரடா பிரபாகரா

விளக்கம் கேட்டவரை துரோகியென்று போட்டாயடா விளக்கமாக கூறியவரையும் துரோகியென்றே என்று போட்டாயடா . நீயெடுத்த உரிமையை உன் சகோதரர்க்கு மறுத்தாயடா Douglas அழிப்புக்காய் உன் கரும்புலியொன்றும் வெடித்தாளடா . அப்பவெல்லாம் வருடிகளை உன் காலடியில் வளர்த்தாயடா இப்போ பாரடா பிரபாகரா உன் வருடிகளின் அரசியல் உறவுகளை… . வெடித்தவள் உயிர் விரயமாக போனதடா எடுத்த கருமம் மட்டுமல்ல அரையில் உருத்திருந்ததும் பறி போனதடா . இப்ப பாரடா பிரபாகரா நீ விதைத்த அழிவுகளை பாவம் உன் மக்கள் […]

முதுமரத் தாய்

முதுமரத் தாய் துவாரகன் (2013/05) அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் அலைகளாக தீர்ந்து போகாத நினைவுகள் வாழ்வின் இறுதி மணித்துளிகள் அந்த விழிகளுக்குள் இறுகிப்போயின. சிறகடிக்கும் ஆசைகள் மண்ணோடு மண்ணாய் இற்றுப்போயின. தளர்ந்து செதிலாகிப் போன கால்களை நீட்டியபடி இன்னமும் தீர்ந்து போகாத அந்த நினைவுகளோடு காத்திருக்கிறாள் முதுமரத் தாயொருத்தி. அறுந்துபோன செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல் எல்லோரும் அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.