தமிழை வெட்டி குதறிய கனேடிய Amazon

தமிழை வெட்டி குதறிய கனேடிய Amazon

மூலைக்கு மூலை தமிழ் மரபு திங்கள் கொண்டாடி, நகரத்துக்கு நகரம் தமிழ் கொடி ஏற்றி​, வீதிக்கு வீதி தமிழ் விழா கொண்டாடி தமிழை வயிற்று பிழைப்புக்கு மட்டும் பயன்படுத்தும் தமிழரை கொண்ட கனடாவி​ல் இணையம் மூலம் வர்த்தகம் செய்யும் Amazon நிறுவனம் (amazon.ca) C$19.66 க்கு விற்பனை செய்யும் தமிழ் குறுக்கெழுத்து புத்தகம் ​ஒன்று தமிழை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்துள்ளது. ​TAMIL CROSSWORD PUZZLE BOOK என்ற இந்த புத்தகம் வழங்கும் குறுக்கெழுத்து பயிற்சிகள் மெய் எழுத்துகளில் உள்ள குற்றை பிரித்து ஒரு எழுத்தாகவும், […]

யாருக்கு சொல்லியழ 24: Richard Falk 4 மணிநேர கனடிய விசாரணை

யாருக்கு சொல்லியழ 24: Richard Falk 4 மணிநேர கனடிய விசாரணை

அமெரிக்க யூத குடும்பத்தில் பிறந்து, Yale மற்றும் Harvard பல்கலைக்கழகங்களில் பயின்று, Princeton பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பதவி வகித்து, ஐ.நா. வின் விசேட Rapporteur அதிகாரியாக பதவி வகித்த 95 வயது Richard Falk என்பவரை கனடிய எல்லை அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.  இவர் Ottawa நகரில் வெள்ளி, சனி இடம்பெற இருந்த “Palestine Tribunal on Canadian Responsibility” என்ற பலஸ்தீன அமர்வு ஒன்றுக்கு செல்ல வியாழன் Toronto விமான நிலையம் வந்தபோதே 4 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். […]

யாருக்கு சொல்லியழ 23: தமிழரின் ஒற்றை கண் மதவு

யாருக்கு சொல்லியழ 23: தமிழரின் ஒற்றை கண் மதவு

(இளவழகன், 2025-08-12) கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய தமிழர் புட்டு குழலையும், இடியாப்ப உரலையும் மட்டும் கண்டுபிடித்து இருக்கவில்லை. தற்போது ‘ஒற்றை கண் மதவு’ ஒன்றையும் கண்டுபிடித்து உள்ளார்கள். உலகில் வேறு எங்கும் இல்லாத ‘ஒற்றை கண் மதவு’ ஒன்று 2025-08-09 அன்று இலங்கையின் மூளை என்று கூறப்படும் வடமராட்சியின் கரவெட்டி பகுதியில், கொடிகாமம் வீதிக்கு குறுக்கே, ஞானாசாரியார் கல்லூரி வீதி சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஒற்றை கண் மதவுள் […]

திருத்தி அமைக்கப்பட்ட கோவில் சந்தை 

திருத்தி அமைக்கப்பட்ட கோவில் சந்தை 

வடமராட்சியின் கரவெட்டி பகுதியில், நெல்லியடி-கொடிகாமம் வீதியோரம் உள்ள பழையதோர் சந்தை ‘கோவில் சந்தை’. இது அண்மையில் பெரும் செலவில் திருத்தி அமைக்கப்பட்டு மார்ச் 20, 2025 அன்று மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. திருத்தி அமைத்தலுக்கு 31 மில்லியன் ரூபாய் செலவானதாகவும் அதில் 27 மில்லியன் புலம்பெயர்ந்த தமிழரின் பணம் என்றும், மிகுதி 4 மில்லியன் பிரதேச சபை வழங்கிய பணம் என்றும் கூறப்படுகிறது. யுத்தத்துக்கு முன் இப்பகுதியில் கோவில் சந்தை ஒரு பிரதான சந்தை. யுத்தத்துக்கு முன் இப்பகுதி மக்களால் நிரம்பி வழிந்த காலத்திலும் […]

சிங்கள அரசியல் மாறிவிட்டது, தமிழ் அரசியல் மாறுமா?

சிங்கள அரசியல் மாறிவிட்டது, தமிழ் அரசியல் மாறுமா?

இளவழகன் (2024-11-07) இலங்கை பொது தேர்தலுக்கு மேலும் ஒரு கிழமை மட்டுமே உள்ளது. இலங்கையின் பெரும்பான்மை சிங்களம் அண்மையில் இரண்டு தடவைகள் உலகம் நம்ப முடியாத காரியங்களை செய்து சாதனை படைத்துள்ளது. ஒன்று சனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பின் கதவால் நாட்டை விட்டு ஓட விரட்டியது. மற்றையது இடதுசாரியான அநுர குமார திஸாநாயக்காவை (AKD) சனாதிபதி ஆக்கியது. அதே சிங்களம் நவம்பர் 14ம் திகதி அநுர தலைமையிலான NPP அணியின் கையில் பாராளுமன்றத்தை வழங்குவதன் மூலம் தனது மூன்றாம் சாதனையையும் செய்யலாம். கோத்தபாய ஒரு […]

காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

2024ம் ஆண்டும் கனடிய தமிழ் அரசியல் புள்ளிகளும், புள்ளிகளாக மாற துடிப்பவர்களும் தமது கனடிய பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் genocide பெயரில், 15 ஆண்டுகளின் பின்னும்,  ஊளையிட்டு உள்ளனர். இந்த ஊளையிடல் இடம்பெறுவது கனடா வருடிக்கொடுக்கும் இஸ்ரேலின் அரச படையினரின் காசா மீதான genocide இடம்பெறும் வேளையிலேயே. நமது தமிழ் அரசியல் புள்ளிகள் எதோ தாம் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக Facebook பேச்சு பேசினாலும், அவர்கள் உள்நோக்கம் சொந்த இலாபங்கள் மட்டுமே. இவர்களால் இலங்கை தமிழருக்கு எந்தவித பயனும் இல்லை. 1983ம் ஆண்டு கலவர […]

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாருக்கு சொல்லியழ 22: யாழ்ப்பாணத்தில் drywall screw, but no drywall

யாழ்ப்பாண கட்டிட பொருட்கள் கடைகளில் screw (புரி ஆணி) தாங்கோ என்று கேட்டால் தற்போது கிடைப்பது drywall screw களே. “என்ன அண்ணை இது, பழையன மாதிரி செப்பு, பித்தளை, அல்லது இரும்பு screw இல்லையே” என்று கேட்டால் “இப்ப சனம் இதைத்தான் கேட்டு வாங்குகினம்” என்ற பதில் வருகிறது. வளியில் ஈரப்பதன் (moisture) குறைந்த நாடுகளில் வீடுகள் drywall பயன்படுத்தி கட்டப்படும். குறிப்பாக சுவர்கள் drywall சுவர்களாக இருக்கும். Drywall பலகைகளில் நடுவில் gypsum இருக்கும், இருபுறமும் கடதாசி இருக்கும். […]

யாருக்கு சொல்லியழ 21: அந்த கதை ஏன் இப்ப?

யாருக்கு சொல்லியழ 21: அந்த கதை ஏன் இப்ப?

கடந்த ஜூன் 18ம் திகதி சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Singh Nijjar கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கனடாவுக்கு Five Eyes நாடுகள் வழங்கிய உளவுகளின் அடிப்படையில் இந்த கொலையில் இந்தியாவின் கை இருப்பதாக கனடிய பிரதமர் ரூடோ இந்தியா மீது குற்றம் சுமத்தி இருந்தார். கனடா தம் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதால் வெகுண்டு எழுந்தது மோதி தலைமையிலான இந்திய அரசு. கூடவே இந்திய ஊடகங்களும் கனடா மீது வெகுண்டு எழுந்து உள்ளன. இந்த நிலையில் இலங்கையின் Ali Sabry என்ற வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் உதவிக்கு […]

யாருக்கு சொல்லியழ 20: அது அங்கே, இது இங்கே

யாருக்கு சொல்லியழ 20: அது அங்கே, இது இங்கே

உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனா மாதிரி உலகை ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னையே ஆழ முடியாது தவிக்கிறது. அந்த நாடு மட்டுமல்ல அங்குள்ள ஒரு கட்சியே தன்னை ஆழ முடியாத நிலை உருவாக இறுதியில் இந்திய வம்சம் வந்த Rishi Sunak பிரதமர் ஆகியுள்ளார் – பொது தேர்தல் மூலம் அல்ல, பதிலாக மேசைக்கு கீழான உட்கட்சி நாடகம் மூலம். Sunak பிரித்தானியாவில் இரண்டாம் சந்ததி. இவரின் பெற்றோர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சென்ற இந்திய வம்சத்தினர். […]

யாருக்கு சொல்லியழ 19: முட்டுக்காய் தமிழர்

யாருக்கு சொல்லியழ 19: முட்டுக்காய் தமிழர்

வேற்று மொழி சொல் ஒன்றுக்கு தமிழில் ஏற்கனவே மாற்று சொல் ஒன்று இல்லை என்றால் அதற்கு புதியதொரு தமிழ் சொல்லை கொள்ள விரும்புவது நலம், அவசியம். ஆனால் அவ்வாறு தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி தமிழை, தமிழின் மகிமையை அழிக்கும் என்றால் தமிழுக்கான மாற்று சொல்லை அமையாது நேரடியாக வேற்று மொழி சொல்லையே பயன்படுத்துவது தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வாறு செய்வது இன்றைய முட்டுக்காய் தமிழன் அழகிய பண்டை தமிழை அழிப்பதை, […]

1 2 3 4