செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்ற பல தேர்தல்கள் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் அவரின் Republican கட்சிக்கும் பெரும் தோல்வியை வழங்கியுள்ளன. நியூ யார்க் நகரின் முதல்வராக Zohran Mamdani என்ற இஸ்லாமியர் வெற்றி பெற்றுள்ளார். இவரை ரம்ப் தேர்தல் காலத்தில் “100% communist lunatic” என்று வசைபாடி இருந்தார். Mamdani வெற்றி பெற்றால் நிதி வழங்கமாட்டேன் என்றும் ரம்ப் நியூ யார்க் நகர வாக்காளரை மிரட்டி இருந்தார். அத்துடன் ரம்ப் Andrew Cuomo என்பவரை முதல்வராக தெரிவு செய்ய கேட்டிருந்தார். Mamdani […]
இஸ்ரேல் இராணுவத்தின் முன்னிலை சட்டத்தரணியான மேஜர் ஜெனரல் Yifat Tomer-Yerushalmi என்ற பெண் ஆபத்தில் உள்ளார். கடந்த கிழமை வரை பதவியில் இருந்த இவர் திடீரென தனது பதவியில் இருந்து விலகி, தலை மறைவானார். இவரை தேடிய இஸ்ரேல் கடந்த ஞாயிறு இரவு கடற்கரை ஒன்றில் கைது செய்து தற்போது சிறையில் அடைந்துள்ளது. இவர் இஸ்ரேல் படைகள் Sde Teiman என்ற இராணுவ சிறையில் இருந்த பலஸ்தீன கைதிகளை சித்திரவதை செய்வதை கொண்ட வீடியோக்களை கசிய விட்டதே […]
சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் பெருமளவு இறக்குமதி வரிகளை திணித்ததால் அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி பெரும் வீழிச்சியை அடைந்துள்ளது. ஆனாலும் உலக அளவில் இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில் சீன ஏற்றுமதி 6.1% ஆல் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் மட்டும் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பரில் சீன ஏற்றுமதி 8.3% ஆல் அதிகரித்து உள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத சீன மொத்த ஏற்றுமதியின் […]
நைஜீரியாவை தாக்க தயாராகும்படி அமெரிக்க படைகளுக்கு சனாதிபதி ரம்ப் சனிக்கிழமை கட்டளை விடுத்துள்ளார். நைஜீரியாவில் கிறீஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதே ரம்ப் தாக்குதல் முனைவுக்கு முன் வைக்கும் காரணம். நைஜீரியாவின் சில மாநிலங்கள் வன்முறைகள் நிறைந்தவை. சில மாநிலங்களில் Boko Haram போன்ற இஸ்லாமிய குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டாலும், பெருமளவு வன்முறைகள் இனங்களுக்கு இடையேயும், குழுக்களுக்கு இடையேயும், மற்றும் வேறுபட்ட தரப்புகளுக்கு இடையேயும் இடம்பெறுகின்றன. Boko Haram நைஜீரியா, நிஜார், Chad, கமரூன், மாலி போன்ற பல […]
தென் கொரியாவில் தற்போது இடம்பெறும் APAC அமர்வுகளுக்கு சென்றுள்ள சீன சனாதிபதி சீயும், கனடிய பிரதமர் கார்னியும் நேற்று வெள்ளி 40 நிமிடங்கள் நேரடியான சந்தித்து உரையாடி இருந்தனர். அப்போது சீ விடுத்த அழைப்பை ஏற்று கார்னி சீனா செல்ல சம்மதித்துள்ளார். சீயை சந்தித்த பின் கார்னி மேற்படி சந்திப்பை ஒரு “turning point” என்று புகழ்த்திருந்தார். 2017ம் ஆண்டுக்கு பின் இரண்டு நாடுகளின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து உரையாடியது இதுவே முதல் தடவை. அமெரிக்கா எள்ளு […]
நேற்று வியாழன் தென் கொரிய விமான நிலையத்தில் இடம்பெற்ற ரம்ப்-சீ சந்திப்பு சீனா ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியாத நாடாக மறியதை காட்டியுள்ளது. இந்த சந்திப்பை ரம்ப் ஒரு பெரு வெற்றியாக கூறினாலும், சீனா இந்த சந்திப்பை ஒரு சாதாரண நிகழ்வாகவே காண்பிக்கிறது. இந்த சந்திப்பில் திடமான தீர்வுகள் எதுவும் ஏற்படவில்லை. சீனா fentanyl க்கான மூல இரசாயணங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை 10% ஆல் குறைக்கவும் மட்டுமே இணங்கின. மலேசியாவுடன் ரம்ப் critical […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் பலத்த நெருக்கடிகள் மத்தியில் சீன சனாதிபதி சீயை இன்று வியாழன் தென் கொரியாவில் நேரடியாக சந்திக்கவுள்ளார். இன்று இவர்கள் இருவரும் ஒரு முழுமையான பொருளாதார தீர்வை அடையாவிடில் ரம்ப் பலத்த எதிர்ப்புகளை ஆதரவாளர் மத்தியில் சந்திக்க நேரிடும். ரம்பை நன்கறிந்த சீனா இந்த சந்திப்பதை முடிந்த அளவு தணித்தே பேசி வருகிறது. சந்திப்பும் முடிந்த அளவு இறுதி நேரத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. APAC அமர்வுக்கு செல்லும் சீ தரை இறங்கியவுடன் அமெரிக்காவுக்கு […]
அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலுக்கு இந்தியா 7 புதிய யுத்த விமானங்களை இழந்திருந்தது என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். ஆசியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ரம்ப் ஜப்பானில் செய்த உரை ஒன்றில் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின்போது “7 planes were shot down, 7 brand new beautiful planes were shout down” என்று கூறினார். இந்தியா இதுவரை அந்த யுத்தத்தில் தனது யுத்த இழப்புகளை முறைப்படி அறிவிக்காமை ரம்ப் போன்ற பலர் தமது […]
திங்கள் அக்டோபர் 27ம் திகதி மலேசியாவில் இடம்பெற்ற ASEAN நாடுகளின் அமர்வுக்கு இந்திய பிரதமர் மோதி நேரடியாக செல்வதை தவிர்த்திருந்தார். இதற்கு இந்திய மாநிலங்களில் சிலவற்றில் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஒரு காரணமாகலாம் என்றாலும் இந்தியாவுடன் முரண்படும் ரம்பை நேரடியாக சந்திக்க விரும்பாமையே முதல் காரணம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. மோதி இணையம் மூலம் ASEAN அமர்வில் பங்கெடுத்து இருந்தார். இந்த அமர்வுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் சென்று இருந்தது மட்டுமன்றி, இக்காலத்தில் அமெரிக்க அதிகாரிகள் சீன பொருட்கள் […]
இன்று பல நாடுகளிடம் அணுக்குண்டு ஏவுகணைகள் உள்ளன. ஆனாலும் தலையில் இந்த அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகள் பழைய முறை எரிபொருளை பயன்படுத்தியே ஏவப்படும், பயணிக்கும் (அல்லது ஹிரோஷிமாவில் போடப்பட்டதுபோல் விமானத்தில் இருந்து போடப்படும்). ஆனால் ரஷ்ய சனாதிபதி தாம் அணு சக்தியில் பயணிக்கும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக கூறியுள்ளார். அக்டோபர் 21ம் திகதி இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக ரஷ்ய ஜெனரல் Gerasimov கூறியுள்ளார். Burevestnik என்ற இந்த ஏவுகணை முதலில் திண்ம எரிபொருளை (solid […]