இந்த ஆண்டுக்கான அதிக விலைவாசி கொண்ட (expensive) நகரங்கள் பட்டியலில் ஆசிய நகரங்கள் வேகமாக மேலேறி உள்ளன. உலகின் மிக விலைவாசி உயர்ந்த முதல் 10 நகரங்களில் Hong Kong, Tokyo, Shanghai, Guangzhou, Seoul ஆகிய 5 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. Worldwide Cost of Living Index என்ற இந்த கணிப்பு லண்டன் நகரை தளமாக கொண்ட Economist Intelligence Unit என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்டது. இலங்கையின் கொழும்பு நகரின் 162ம் இடத்தில் இருந்து […]
தென் ஆபிரிக்காவில் ஊழல் தொடர்பாக தேடப்பட்ட Rajesh Gupta, Atul Gupta ஆகிய சகோதரர்கள் மத்திய கிழக்கு நாடான UAE யில் UAE போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் விரைவில் தென் ஆபிரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவர். இவர்கள் இருவரும் முன்னாள் தென் ஆபிரிக்காவின் சனாதிபதி சூமா (Jacob Zuma) காலத்தில் சூமாவுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 2016ம் ஆண்டு தென் ஆபிரிக்க அரசு தயாரித்த 355-பக்க அறிக்கை குப்தா சகோதரர்களின் […]
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் பலஸ்தீனர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தமக்கு சாதகமான இரட்டை சட்டம் ஒன்றை நடைமுறை செய்து இருந்தது. அந்த சட்டப்படி ஆக்கிரமித்த இடங்களில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு யூதர்கள் இஸ்ரேலின் சட்டங்களுக்கு அமைய ஆளப்படுவர். இஸ்ரேலின் civil, criminal சட்டங்களுக்கு உட்படும் இவர்கள் இஸ்ரேல் வாக்குகளையும் கொண்டுள்ளனர். அனால் இதே இடத்தில் சந்ததி சந்ததியாக குடியிருக்கும் பலஸ்தீனர் இஸ்ரேலின் இராணுவ ஆட்சிக்கு உட்படுவர். மேற்படி இரட்டை சட்டம் இந்த மாதம் முடிவடையும் […]
இலங்கையில் புத்த மத வாதம் வாக்குகளை பெற பயன்படுத்துவது போல் இந்தியாவில் பா. ஜ. கட்சி இந்து மத வாதத்தை பயன்படுத்தி வருகிறது. மதவாதம் இலகுவில் வாக்குகளை வழங்குவதால் பா. ஜ கட்சி உறுப்பினர் பயமின்றி இஸ்லாம் விரோத கூற்றுகளை வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பா. ஜ. உறுப்பினரின் கூற்றுகள் பா. ஜ. வை தற்போது இடரில் வைத்துள்ளன. பா. ஜ. பேச்சாளரான Nupur Sharma என்பவர் கூறிய முஹமத்தை இழிவு செய்யும் […]
உலக அளவில் உள்ள 370 துறைமுகங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு துறைமுகத்தின் தரம் (efficiency) 54.090ம் புள்ளிகளை பெற்று 22ம் இடத்தில் உள்ளது என்கிறது 2021ம் ஆண்டுக்கான Global Container Port Performance Index (CPPI) என்ற கணிப்பு. அத்துடன் இத்துறைமுகம் தென் ஆசியாவில் 1ம் இடத்திலும், இந்து சமுத்திரத்தில் 3ம் இடத்திலும் உள்ளது. CPPI கணிப்பை உலக வங்கியும், S&P Global Market Intelligence and Finance Services இணைந்து ஆண்டுதோறும் செய்கின்றன. King Abdullah Port […]
சீனாவின் ShenZhou 14 என்ற கலம் உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 10:44 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இரண்டு ஆண் விண்வெளி வீரரும், ஒரு பெண் வீரரும் இதில் பயணிக்கின்றனர். இவர்கள் 6 மாதங்கள் TianGong என்ற சீன விண் ஆய்வுகூடத்தில் தங்கியிருந்து TianGong கட்டுமான பணியை செய்வர். இது வீரர்களை கவி செல்லும் மூன்றாவது பயணமாகும். TianGong பல துண்டங்களாக சீனாவில் செய்யப்பட்டு, ஏவுகணைகள் மூலம் ஏவி, வானத்தில் வைத்து பொருத்தப்படுகிறது. ஏற்கனவே பல […]
பத்திரிகையாளர் ஜமால் கசோகியை (Jamal Khashoggi) படுகொலை செய்த காரணத்தால் சவுதி இளவரசர் முகமத் பின் சல்மான் (Mohammed bin Salman) மீது வசைபாடி, அவருடனான நேரடி தொடர்புகளை தவிர்த்த அமெரிக்க சனாதிபதி தற்போது அந்த கொள்கைகளை கைவிட்டு சவுதி சென்று சல்மானை சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. வெள்ளை மாளிகை தற்போது அவ்வாறு திட்டம் ஒன்றும் இல்லை என்று பகிரங்கமாக கூறினாலும், மறைவில் பைடெனின் சவுதி பயணத்துக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கசோகி கொலைக்கு சல்மான் நிச்சயம் […]
ரஷ்யாவின் Aeroflot விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்றை இலங்கை முடக்கி உள்ளது. Colombo Commercial High Court நீதிபதி Harsha Sethunga வின் உத்தரவுப்படியே விமானம் முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 200 பயணிகளை கொள்ளக்கூடிய இந்த Airbus A330 வகை விமானம் வியாழன் காலை கொழுப்பு வந்திருந்தது. அது வெள்ளி அதிகாலை மீண்டும் மாஸ்கோ பறக்க இருந்த நிலையில் கட்டுநாயக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை தடுத்து வைத்ததற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது அமெரிக்கா […]
உலகின் மிகப்பெரிய தாவரம் அஸ்ரேலியாவுக்கு அருகில் அண்மையில் காணப்பட்டுள்ளது. சுமார் 200 சதுர km கொண்ட இந்த கடல் தாவரம் (sea grass) ஒரு விதையில் இருந்து வளர்ந்தது என்பதாலேயே இது ஒரு தனி தாவரமாக கணிக்கப்படுகிறது. அத்துடன் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் கணிக்கப்படுகிறது. அஸ்ரேலியாவின் Perth நகருக்கு வடக்கே சுமார் 800 km தூரத்தில் உள்ள Shark Bay என்ற இடத்திலேயே இந்த கடல் தாவரம் உள்ளது. University of […]
பல நாடுகள் அந்நிய செலவாணியை பெறும் நோக்கில் தற்காலிக வதிவுரிமை வழங்குவது போல் இலங்கையும் தற்போது Golden Paradise Residence Visa வழங்க முன்வந்துள்ளது. அந்நிய நாட்டவர் இலங்கையில் $100,000 வைப்பு செய்தால் அவருக்கு 10-ஆண்டு கால வதிவுரிமை மற்றும் படிப்பு விசா வழங்கப்படும். வைப்பிடப்படும் $100,000 பணத்தின் அரைப்பங்கு ($50,000) ஒரு ஆண்டின் பின் மீள பெறப்படலாம். மிகுதி $50,000 வழங்கப்படும் விசா முடிவு அடையும்வரை வைப்பில் இருத்தல் வேண்டும். இந்த விசா கொண்டோர் இலங்கையில் […]