அமெரிக்காவில் 50 அகதிகள் லாரிக்குள் மரணம்

அமெரிக்காவில் 50 அகதிகள் லாரிக்குள் மரணம்

அமெரிக்காவின் Texas மாநிலத்து San Antonio நகரில் மூடப்பட்ட லாரி ஒன்றில் 50 அகதிகள் மரணித்த நிலையில் காணப்பட்டு உள்ளனர். இந்த அகதிகள் பெரும்பாலும் மெக்ஸிக்கோ, குவாட்டமாலா, Honduras ஆகிய நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. San Antonio நகரம் மெக்ஸிக்கோ எல்லையில் இருந்து வடக்கே 260 km தூரத்தில் உள்ள நகரம். உள்ளூர் நேரப்படி திங்கள் மாலை 6:00 மணியளவில் அதிகாரிகளுக்கு மரணித்தோர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் 48 பேர் அந்த இடத்திலேயே மரணித்து இருந்தனர். […]

பணம் இருந்தும் கடனில் முறிகிறதா ரஷ்யா?

பணம் இருந்தும் கடனில் முறிகிறதா ரஷ்யா?

இலங்கை அண்மையில் டாலர் இன்மையால் தனது வெளிநாட்டு bond கடன்களை அடைக்க முடியாது கடனில் முறிந்து இருந்தது. ஆனால் ரஷ்யா தேவையான பணம் இருந்தும் வெளிநாட்டு கடனில் முறிகிறது என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன. ஆனால் அவ்வாறு தான் முறியவில்லை என்கிறது ரஷ்யா. ரஷ்யாவுக்கு சுமார் $40 பில்லியன் bond கடன் உள்ளது. அதேவேளை ரஷ்யாவிடம் யூகிரைன் யுத்தத்துக்கு முன் $640 பில்லியன் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்பாக இருந்துள்ளது. ரஷ்யாவின் கையில் உள்ள $640 பில்லியன் […]

பெட்டியில் மில்லியன் யூரோ பெற்றார் இளவரசர் சார்ள்ஸ்

பெட்டியில் மில்லியன் யூரோ பெற்றார் இளவரசர் சார்ள்ஸ்

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் 1 மில்லியன் யூரோவை ($1.05 மில்லியன்) பணமாக ஒரு பெட்டியில் (suitcase) பெற்றார் என்று Clarence House கூறியதாக பிரித்தானிய Sunday Times இன்று கூறியுள்ளது. இந்த பணம் Sheikh Hamad bin Jassim  என்ற முன்னாள் கட்டார் (Qatar) பிரதமரால் வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த பணம் உடனடியாக Prince of Wales Charitable Fund என்ற நிதியத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுள்ளது. அதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. […]

சீனாவுக்கு எதிராக G7 நாடுகள் $600 பில்லியன் திட்டம்

சீனாவுக்கு எதிராக G7 நாடுகள் $600 பில்லியன் திட்டம்

சீனாவின் Belt and Road திட்டத்தை மேற்கு நாடுகள் ஆரம்பித்தில் புறக்கணித்து இருந்தாலும் சீன திட்டம் உலகில் தமது ஆளுமையை பறிப்பதால் G7 நாடுகள் இன்று ஞாயிறு $600 பில்லியன் திட்டம் ஒன்றை போட்டிக்கு நடைமுறை செய்ய இணங்கி உள்ளன. இத்தொகை வரும் 5 ஆண்டு காலத்தில் செலவிடப்படும். ஜெர்மனியின் Schloss Elmau என்ற இடத்தில் கூடிய G7 தலைவர்கள் மத்தியிலேயே இந்த அறிவிப்பை அமெரிக்க சனாதிபதி பைடென் செய்யதுள்ளார். Partnership for Global Infrastructure and […]

Belarus பெறும் ரஷ்யா அணு ஏவுகணை, மேற்குக்கு புதிய தலையிடி

Belarus பெறும் ரஷ்யா அணு ஏவுகணை, மேற்குக்கு புதிய தலையிடி

Belarus என்ற ரஷ்ய சார்பு ஐரோப்பிய நாட்டுக்கு ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் அணுக்குண்டை காவ வல்ல Iskander-M என்ற ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையை வழங்க தீர்மானித்தது மேற்கு நாடுகளுக்கு மேலும் ஒரு தலையிடி ஆகியுள்ளது. யூகிரைன், போலந்து, லித்துவேனியா, லத்வியா ஆகிய NATO நாடுகளை எல்லைகளில் கொண்ட Belarus தன்வசம் Iskander-M வகை ஏவுகணையை கொள்வது NATO அணிக்கு பயமுறுத்தலாக இருக்கும். அணுக்குண்டுகளை காவ வல்ல இந்த ஏவுகணை சுமார் 500 km தூரம் சென்று தாக்க […]

கருக்கலைப்பு உரிமையை கைவிடும் அமெரிக்க தேசிய சட்டம்

கருக்கலைப்பு உரிமையை கைவிடும் அமெரிக்க தேசிய சட்டம்

அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் (Supreme Court) இன்று தேசிய அளவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த உரிமையை கைவிட்டு உள்ளது. அமெரிக்க சரத்து (Constitution) கருக்கலைப்பு உரிமையை வழங்கவில்லை என்பதே தேசிய அளவில் நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு உரிமையை இன்று கைவிட காரணமாக காட்டப்பட்டுள்ளது. அதனால் கருக்கலைப்பு உரிமை இன்று முதல் மாநில அரசுகளின் கடமையாகிறது. 1973ம் ஆண்டு இடம்பெற்ற Roe v. Wade என்ற வழக்கின் தீர்ப்பே அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவிலான உரிமை ஆக்கியது. […]

அமெரிக்காவில் 122 முட்டைகளுடன் 98 kg, 5 மீட்டர் மலைப்பாம்பு

அமெரிக்காவில் 122 முட்டைகளுடன் 98 kg, 5 மீட்டர் மலைப்பாம்பு

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் 98 kg (216 இறாத்தல்) எடையும், 5 மீட்டர் (18 அடி) நீளமும் கொண்ட மலைப்பாம்பு (Burmese python) ஒன்று அகப்பட்டு உள்ளது. இந்த பெண் பாம்பு 122 முட்டைகளை கொண்டிருந்தது. இந்த பாம்பு கடந்த டிசம்பர் மாதம் அகப்பட்டு இருந்தாலும் தற்போதே விபரம் வெளிவந்து உள்ளது. தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்ட Dionysus என்ற பெயர் கொண்ட ஆண் பாம்பு ஒன்றின் உதவியுடனேயே மேற்படி பெண் பாம்பு பிடிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் […]

​ராஜபக்ச குடும்பம் உட்பட இலங்கை​ மீது அமெரிக்காவில் வழக்கு​

​ராஜபக்ச குடும்பம் உட்பட இலங்கை​ மீது அமெரிக்காவில் வழக்கு​

இலங்கை மீதும், ராஜபக்ச குடும்பத்தினர் மீதும் அமெரிக்காவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Hamilton Reserve Bank Ltd என்ற வங்கியே இந்த வழக்கை நியூ யார்க் நகரில் உள்ள நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. St. Kitts & Nevis தீவுகளை தளமாக கொண்ட மேற்படி வாங்கி தான் bond மூலம் கடனாக வழங்கிய $250 மில்லியன் பணத்தையும், அதற்கான வட்டியையும் பெறவே நீதிமன்றின் உதவியை நாடி உள்ளது. இந்த bond ஜூலை மாதம் 25ம் திகதி […]

பிரித்தானிய Glencore $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியது

பிரித்தானிய Glencore $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியது

ஆபிரிக்க நாடுகளில் இயங்கும் Glencore Energy UK Limited என்ற எண்ணெய் அகழ்வு செய்யும் நிறுவனம் பல ஆபிரிக்க நாடுகளில் $28 மில்லியன் இலஞ்சம் வழங்கியதாக ஏற்றுக்கொண்டுள்ளது. பிரித்தானியாவின் Serious Fraud Office (SFO) செய்த விசாரணையின் பின்னரே Glencore இந்த உண்மையை ஒத்துக்கொண்டுள்ளது. பல ஆபிரிக்க நாடுகளில் Glencore எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வேலைகளுக்கான உரிமையை பெறல், குளறுபடி செய்வதை கவனியாது விடல் போன்ற விரோத நடவடிக்கைகளுக்கே இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த […]

சுமார் 3 ஆண்டுகளில் இஸ்ரேலில் 5ம் தேர்தல்

சுமார் 3 ஆண்டுகளில் இஸ்ரேலில் 5ம் தேர்தல்

சுமார் ஒரு ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள இஸ்ரேலின் கூட்டணி அரசு மீண்டும் கவிழ்ந்து உள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் அக்டோபர் மாதம் நிகழவுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் அங்கு நிகழவுள்ள 5ம் தேர்தல். Naftali Bennett என்ற தற்போதைய பிரதமரின் சொந்த கட்சியே பிரதமரின் காலை வாரி உள்ளது. இந்த ஆட்சி ஒருவருக்கு ஒருவர் முரணான 8 கட்சிகளின் கூட்டணி. அதில் United Arab List என்ற இஸ்ரேலில் வாழும் பலஸ்தீனர் […]