அமெரிக்க சனாதிபதி ரம்ப் தாம் தற்போதும் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்வதாகவும் தான் விரைவில் இந்திய பிரதமர் மோதியை சந்திக்க உள்ளதாகவும் செவ்வாய் கூறியுள்ளார். இரண்டு “Great Countries” களும் விரைவில் நல்ல இணக்கத்துக்கு வரும் என்றும் ரம்ப் கூறியுள்ளார். திடீரென உதிர்ந்த ரம்பின் அன்பான வார்த்தைகளுக்கு பதிலளித்த பிரதமர் மோதி வாஷிங்ரனும் நியூ டெல்லியும் “close friends and natural partners” என்றுள்ளார். கடந்த கிழமை மோதி சீனா சென்று சீன சனாதிபதி சீயை சந்தித்து உரையாடியதால் விசனம் அடைந்த ரம்ப் […]
கட்டாரின் Doha நகரில் ஹமாஸ் உறுப்பினர்கள் தங்கியிருந்த இடத்தை இஸ்ரேல் இன்று செவ்வாய் பிற்பகல் தாக்கியுள்ளது. இங்கு தங்கியிருந்த ஹமாஸ் உறுப்பினர்களே யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் திட்டம் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாம். இந்த தாக்குதலுக்கு வகுத்த திட்டத்தை இஸ்ரேல் Summit of Fire என்று பெயரிட்டு உள்ளது.
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைந்து இன்று பாராளுமன்றம் ஆர்ப்பாட்டம் செய்வோரால் தீயிடப்பட்டு உள்ளது. அதற்கு முன் பிரதமர் KP Sharma Oli பதவி விலகியுள்ளார். ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். பல அரசியல் தலைவர்களின் வதிவிடங்களும் தீயிடப்பட்டு அல்லது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. முதலில் நேபாளில் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக இளையோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை கட்டுப்படுத்த அரசு social media களை தடை செய்தது. அதன் பின்னரே […]
பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் பிரதமர் Francois Bayrou மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் திங்கள் நிறைவேறியதால் பிரதமர் பதவியை இழக்க அரசு கவிழ்ந்துள்ளது. பிரதமருக்கு எதிராக 364 வாக்குகளும், ஆதரவாக 194 வாக்குகளும் கிடைத்துள்ளன. 2026ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் பிரெஞ்ச் அரசு $51 பில்லியன் பெறுமதியான செலவுகளை கட்டுப்படுத்த முனைந்த வேளையிலேயே அரசு கவிழ்ந்துள்ளது. இதனால் சனாதிபதி மக்கிறோன் (Macron) மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த பிரதமர் 9 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். கடந்த […]
அமெரிக்க ரம்ப் அரசு Halting International Relocation of Employment Act 2025 (HIRE Act 2025) என்ற சட்டத்தை நடைமுறை செய்ய முனைகிறது. அவ்வாறு சட்டம் ஒன்று நடைமுறை செய்யப்பட்டால் அந்த சட்டத்தால் அதிகம் பாதிப்பு அடையப்போவது இந்தியாவே. பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களை அடையும்போது இலகுவில் இறக்குமதி வரி அரவிடலாம். ஆனால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் software களுக்கு அவ்வாறு வரி அறவிட முடியாது. சிலவேளைகளில் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்தே அமெரிக்காவில் software code எழுதப்படலாம். […]
Radar தொழில்நுட்பத்தை முறியடிக்க வந்த Radar Jamming தொழில்நுட்பத்தை முறியடிக்க சீனா AI Radar தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ளது. இந்த நுட்பம் சீனாவின் ஆகஸ்ட் மாத Information Research வெளியீட்டில் வெளிவந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளாக பாவனையில் உள்ள ரேடார் (RADAR: Radio Detection and Ranging) தொழில்நுட்பம் முதலில் பொதுமக்கள் சேவைகளுக்கு பயன்பட்டு வந்தது. கண்ணனுக்கு தெரியாத தூரத்தில் பயணிக்கும் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றின் தூரங்கள், வேகங்கள் ஆகியவற்றை அறிய ரேடார் பயன்பட்டது. ஆனால் பின்னர் இது […]
அமெரிக்காவில் பொதுவாகவே பார வாகனம் (truck) செலுத்தும் சீக்கிய சாரதிகள் மீது வெறுப்பு உள்ளது. அண்மையில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து சீக்கிய சாரதிகள் மீதான அந்த வெறுப்பை உரமாக்கி உள்ளது. ஆகஸ்ட் 12ம் திகதி Harjinder Singh என்ற Democratic கட்சி ஆளும் கலிபோர்னியா மாநில சீக்கிய truck சாரதி Republican கட்சி ஆளும் புளோரிடா மாநிலத்தில் U-turn ஒன்றை செய்யும்போது ஏற்பட்ட விபத்துக்கு 3 பேர் பலியாகினர். இந்த விபத்து மேற்படி இரண்டு […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்காவின் Department of Defense என்று அழைக்கப்பட்ட திணைக்களத்தை Department of War என்று பெயரிட executive order மூலம் பணித்துள்ளார். ஆனாலும் இந்த புதிய பெயர் அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம். World War I, World War II காலத்தில் இந்த திணைக்களம் Department of War என்றே அழைக்கப்பட்டது என்று தன் முனைவை நியாயப்படுத்துகிறார் ரம்ப். 1789 முதல் 1947 வரை இது Department of War என்றே அழைக்கப்பட்டது. […]
ரம்ப் இந்திய பொருட்கள் மீது திணித்த 50% இறக்குமதி வரி இந்தியாவின் பெரும் செல்வந்தர்களை அதிகம் பாதிக்க உள்ளது. சீனாவுடன் அமெரிக்கா முரண்பட ஆரம்பித்த காலம் முதல் இந்தியா தனது பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வழி கிடைத்தது. ஆனால் அந்த ஏற்றுமதி தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது செல்வந்தர் முகேஷ் அம்பானி ($97.7 பில்லியன்), கெளதம் அதானி ($77.9 பில்லியன்), லட்சுமி மித்தால் ($25.4 பில்லியன்), விக்ரம் லால் ($11.1 பில்லியன்) போன்ற செல்வந்தர்கள் கொண்டுள்ள செல்வங்களின் அளவு குறையும். கடந்த ஆண்டு […]
இன்று புதன் பெய்ஜிங்கில் சீனா அரங்கேற்றிய இராணுவ அணிவகுப்பு அமெரிக்க சனாதிபதி ரம்பை பல முனைகளில் மிரள வைத்துள்ளது. ரஷ்யாவின் பூட்டின், வட கொரியாவின் கிம் உட்பட பல தலைவர்கள் இந்த அணிவகுப்பை சீயுடன் இணைந்து பார்வையிட்டனர். அணிவகுப்பால் மிரண்ட அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன சனாதிபதி சீ ரஷ்யாவின் பூட்டினுடனும், வட கொரியாவின் கிம்முடனும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுவதாக கூறியுள்ளார். குறிப்பாக அனுவகுப்பில் பங்கு கொண்ட புதிய ஆயுதங்கள் ரம்ப் போன்ற மேற்கின் தலைவர்களை […]