எரிபொருள் உற்பத்தியை குறைக்கிறது OPEC, மேற்கு கவலை

எரிபொருள் உற்பத்தியை குறைக்கிறது OPEC, மேற்கு கவலை

தமது எரிபொருள் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பரல்களால் குறைக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளான OPEC (Organization of the Petroleum Exporting Countries) இன்று புதன் அறிவித்துள்ளது. இந்த குறைப்பு தற்போதைய உற்பத்தியின் 2% ஆகும். இந்த தீர்மானத்தால் கவலை கொண்டுள்ளன அமெரிக்காவும், மேற்கு நாடுகளும். இந்த உற்பத்தி குறைப்பு நீடித்தால் உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும். அது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். OPEC உற்பத்தி குறைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது மேற்கு நாடுகளே. […]

தென் கொரியா ஏவிய ஏவுகணை வெடிக்க கலங்கிய மக்கள்

தென் கொரியா ஏவிய ஏவுகணை வெடிக்க கலங்கிய மக்கள்

வட கொரியாவின் நீண்ட தூர ஏவுகணை ஏவல்களுக்கு போட்டியாக தென்கொரியா ஏவிய Hyunmoo-2 என்ற குறுந்தூர ஏவுகணை ஏவிய மறுகணம் கோளாறு காரணமாக பெரும் சத்தத்துடன் வெடிக்க (malfunctioned), அந்த பகுதில் வாழும் தென் கொரியார் வட கொரியாவே தம்மை தாக்கியதாக எண்ணி கலங்கி உள்ளனர். Gangneung என்ற வடகிழக்கு கரையோர நகரில் வாழும் மக்கள் உடனே அப்பகுதி தீயணைக்கும் படைக்கு விபத்தை அறிவித்து உள்ளனர். விமானப்படை தளத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினரிடம் வெடித்தது தமது ஏவுகணை […]

ஜப்பான் மேலால் வடகொரிய ஏவுகணை, ஜப்பான் குமுறல்

ஜப்பான் மேலால் வடகொரிய ஏவுகணை, ஜப்பான் குமுறல்

இன்று செவ்வாய் வடகொரியா தனது ஏவுகணை ஒன்றை ஜப்பானுக்கு மேலால் ஏவி உள்ளது. இதனால் ஜப்பானும், அமெரிக்காவும் கடுமையாக கோபம் கொண்டுள்ளன. ஜப்பானின் பிரதமர் இச்செயலை வன்முறை குணம் (violent behavior) என்று குறிப்பிட்டு உள்ளார். மேற்படி ஏவுகணை காரணமாக சில இடங்களில் ஜப்பானியர்களை பாதுகாப்பு தேடுமாறு ஜப்பானிய அரசு கூறியிருந்தது. East Japan Railway சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன. ஜப்பானின் கணிப்பின்படி இந்த ஏவுகணை ஜப்பானுக்கு கிழக்கே சுமார் 4,600 km தூரத்தில் பசிபிக் […]

உயர் வருமான வரி குறைப்பை கைவிட்டார் டிரஸ்

உயர் வருமான வரி குறைப்பை கைவிட்டார் டிரஸ்

அண்மையில் பிரித்தானிய பிரதமராக பதவியை கைக்கொண்ட லிஸ் டிரஸ் தனது முதலாவது வரவு செலவு திட்டத்தில் கொண்டிருந்த பிரதான அங்கம் ஒன்றை எதிர்ப்புகள் காரணமாக திங்கள் கைவிட்டார். உயர் வருமானம் கொண்டோருக்கு வழங்க இருந்த வருமான வரி குறைப்பையே டிரஸ் அரசு கைவிட்டு உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 150,000 பவுண்ட் ($167,000) அல்லது அதற்கு மேல் உழைப்பவர்கள் செலுத்திவந்த 45% வரியை குறைக்கவே டிரஸ் அரசு தனது வரவு செலவு திட்டத்தில் அறிவித்து இருந்தது. இந்த வரி […]

புதிய பிரித்தானிய பிரதமரை கலைக்க முன்னெடுப்பு

புதிய பிரித்தானிய பிரதமரை கலைக்க முன்னெடுப்பு

செப்டம்பர் 6ம் திகதி ஆட்சிக்கு வந்திருந்த பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான அரசை கலைத்து அங்கு பொது தேர்தல் மூலம் புதிய அரசு ஒன்றை அமைக்கும் முனைப்பில் சிலர் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழிமுறைக்கு முதல் படியாக குறைந்தது 100,000 பேரின் கையெழுத்து பெறுவது அவசியம். குறைந்தது 100,000 கையெழுக்கள் கிடைத்தால் மட்டுமே இந்த விசயம் பாராளுமன்றில் விவாதிக்கப்படலாம். ஆனால் இந்த முயற்சி தற்போது 400,000 கையெழுக்களை பெற்று உள்ளது. அது மட்டுமன்றி இத்தொகை […]

இந்தோனேசிய மைதான நெரிசலுக்கு 129 பேர் பலி

இந்தோனேசிய மைதான நெரிசலுக்கு 129 பேர் பலி

இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற  கால்பந்தாட்ட போட்டி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு குறைந்தது 129 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 300 பேர் வரை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். Kanjuruhan என்ற விளையாட்டு மைதானத்தில் Persebaya Surabaya என்ற அணிக்கும் Arema Malang என்ற அணிக்கும் இடையில் சனிக்கிழமை இரவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று இடம்பெற்றது. Persebaya Surabaya அணி 3 goal பெற்று 2 goal பெற்ற Arema Malang அணியை வென்று […]

சீனாவில் Boeing 737 MAX மீட்சிக்கு குந்தகமாகும் சீன C919

சீனாவில் Boeing 737 MAX மீட்சிக்கு குந்தகமாகும் சீன C919

அண்மையில் ஐரோப்பா சென்றிருந்த அமெரிக்க சனாதிபதி பைடென் பயணிகள் விமானம் தயாரிப்பு தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையே நிலவிவந்த முரண்பாடுகளை தீர்த்து இருந்தார். அந்த இணக்கத்துக்கு பிரதான காரணம் அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing மற்றும் ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus இரண்டும் இணைந்து சீனா புதிதாக தயாரிக்கும் பயணிகள் விமானங்களுக்கு எதிராக ஐக்கியமான போட்டியை வழங்குவதே. சீனா ஏற்கனவே ARJ21 (Advance Regional Jet 21) என்ற 90 […]

யுகிரேனின் 4 பகுதிகளை ரஷ்யாவுடன் பூட்டின் இணைப்பு

யுகிரேனின் 4 பகுதிகளை ரஷ்யாவுடன் பூட்டின் இணைப்பு

Luhansk, Donetsk, Zaporizhia, Kherson ஆகிய நாலு யுகிறேனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இன்று இணைத்துள்ளார் ரஷ்ய சனாதிபதி பூட்டின். அவரின் கருத்துப்படி இன்று முதல் இந்த பகுதிகளில் எவராவது தாக்குதல் செய்தால் அது ரஷ்யா மீது தொடுக்கும் தாக்குதலாகும். இப்பகுதிகள் பெரும்பான்மையாக ரஷ்ய இனத்தினரை கொண்டன. சில இடங்களை ஏற்கனவே ரஷ்ய ஆதரவு கொண்ட ஆயுத குழுவே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இப்பகுதிகள் யுகிரேனில் இருந்து பிரிய வாக்கெடுப்பு ஒன்றும் நடைபெற்று இருந்தது. இந்த இணைப்பை கடுமையாக எதிர்க்கின்றன […]

கண்டுபிடிப்புகளில் இலங்கை 85ம் இடத்தில்

கண்டுபிடிப்புகளில் இலங்கை 85ம் இடத்தில்

World Intellectual Property Organization (WIPO) வெளியிட்ட இந்த ஆண்டுக்கான Global Innovation Index (GII 2022) சுட்டியில் இலங்கை 85ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 132 நாடுகள் இந்த கணிப்புக்கு உள்ளடக்கப்பட்டு இருந்தன. முதலாம் இடத்தில் இந்த ஆண்டும் சுவிற்சர்லாந்து உள்ளது. 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளிலும் சுவிற்சர்லாந்தே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்த ஆண்டு அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டு 6ம் இடத்தில் இருந்த அமெரிக்கா 2019ம், 2020ம், 2021ம் […]

தம் ஈரானிய உளவாளிகளை கைவிட்ட CIA

தம் ஈரானிய உளவாளிகளை கைவிட்ட CIA

தம் ஈரானிய உளவாளிகளை அமெரிக்காவின் உளவு படையான CIA எவ்வாறு கைவிட்டது என்று விபரிக்கும் ஆக்கம் ஒன்றை இன்று Reuters செய்தி சேவை வெளியிட்டு உள்ளது. உளவாளிகள் அகப்படுவதற்கு CIA உளவாளிகளுக்கு வழங்கிய பாதுகாப்பு அற்ற தொடர்பு வழிகளே காரணம் என்று கூறப்படுகிறது. Gholameza Hosseini என்ற ஈரானிய நபர் தானாக முன்வந்து CIA உளவு படைக்கு உதவ முன்வந்தார். Hosseini CIAயின் இணையத்துக்கு சென்று “I’m an engineer who has worked at the […]