சிங்கப்பூரில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் People’s Action Party (PAP) பெரும்பான்மை ஆட்சிக்கு தேவையான ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளது. தேசிய அளவில் இந்த கட்சிக்கு 65.57% வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த கட்சியின் 3 உறுப்பினர்கள் தமது தொகுதிகளில் 80% க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். தற்போது Lawrence Wong என்பவரின் தலைமையில் உள்ள இந்த கட்சி சிங்கப்பூரின் பெருமைக்குரிய தலைவர் லீ குவான் (Lee Kuan) ஆரம்பித்த கட்சியாகும். 1968ம் ஆண்டு முதல் இன்று வரை இந்த கட்சியே சிங்கப்பூரை ஆண்டு […]
அஸ்ரேலியாவில் மீண்டும் பிரதமர் Anthony Albanese தலைமையிலான Labor கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்க போதுமான ஆசனங்களை பெற்றுள்ளது. மொத்தம் 150 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் Labor கட்சி சுமார் 87 ஆசனங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இறுதி முடிவுகள் வெளியாக மேலும் சில தினங்கள் செல்லும். Labor கட்சிக்கு எதிராக போட்டியிட்ட Conservative கட்சி பாரிய தோல்வியை அடைந்துள்ளது. Conservative கட்சியின் தலைவர் Peter Dutton கடந்த 24 ஆண்டுகளாக தெரிவு செய்யப்பட்டிருந்த தனது தொகுதியில் […]
இன்று சனிக்கிழமை பாகிஸ்தானும் ஒரு புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. Abdali Weapon System என்ற இந்த ஏவுகணை 450 km தூரம் நிலத்தில் இருந்து நிலத்துக்கு பாய வல்லது என்று கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் 27ம் திகதி இந்தியாவும் ஒரு புதிய வகை ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்திருந்தது. இந்தியாவின் இந்த ஏவுகணை கப்பல்களை தாக்கி அழிக்க பயன்படும். ஏப்ரல் மாதம் 22ம் திகதி Pahalgam என்ற இந்திய காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைக்கு 26 உல்லாச பயணிகள் பலியான […]
கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் CIA என்ற உளவு அமைப்பு சீனாவில் அமெரிக்க நன்மைக்கு உளவு வேலை செய்ய சீனர்களை தேட ஆரம்பித்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு அங்கமாக குறைந்தது இரண்டு சீன மொழியிலான வீடியோக்கள் சீனாவில் கசிய விடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வீடியோக்களும் சீனாவில் ஊழல் செய்து கைதுக்கு பயப்படும் அல்லது வறுமையில் துன்புறும் சீனர்களை குறிவைத்துள்ளன. இந்த இரண்டு வீடியோக்களும் அமெரிக்கா சார்பில் உளவு செய்ய விரும்புவோர் எவ்வாறு CIA உடன் இணையம் மூலம் […]
2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் (GDP) 0.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று இன்று புதன்கிழமை அமெரிக்க Commerce Department தெரிவித்துள்ளது. உண்மையில் இந்த காலாண்டுக்கு 0.3% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனாலும் ரம்பின் இறக்குமதி வரி யுத்தம் அமெரிக்காவுக்கு பொருளாதார வீழ்ச்சியை வழங்கியுள்ளது. இதற்கு முந்திய பைடென் காலத்து காலாண்டில் (2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நாலாம் காலாண்டில்) அமெரிக்காவின் பொருளாதாரம் (GDP) 2.4% ஆல் வளர்ந்து இருந்தது. இந்த காலாண்டு பொருளாதார வீழ்ச்சி ரம்ப் […]
சீனா ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சிலர் மீது 2021ம் ஆண்டு முதல் நடைமுறை செய்திருந்த தடையை இன்று புதன் நீக்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சீனாவுக்கும் இடையில் முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு வழி செய்யும் நோக்கிலேயே இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மொத்தம் 10 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மீது சீனா தடை விதித்து இருந்தாலும் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள 4 பேர் மீதான தடையை மட்டுமே சீனா நீக்கி உள்ளது. […]
இந்தியா சில தினங்களில் தம்மை தாக்க திட்டம் விரைகிறது என்று பாகிஸ்தான் புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதல் அடுத்த 24 முதல் 36 மணித்தியாலங்களில் இடம்பெறலாம் என்றும் பாகிஸ்தான் புதன்கிழமை கூறியுள்ளது. ஆனால் இந்தியா பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து எதையும் இதுவரை தெரிவித்திருக்கவில்லை. காஷ்மீரில் உள்ள Pahalgam என்ற இடத்தில் 26 உல்லாச பயணிகள் படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியா விடுத்த கட்டளைக்கு ஏற்ப இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் இந்தியாவை விட்டு நீங்கி வருகின்றனர். […]
கனடாவில் இன்று திங்கள் இடம்பெற்ற தேர்தல் முடிபுகளின்படி மார்க் கார்னி தலைமையிலான லிபரல் (Liberal) கட்சி சிறுபான்மை ஆட்சி அமைக்கும். தற்போது முடிந்த வாக்கு எண்ணல்களின்படி லிபெரல் 131 ஆசனங்களை வென்றும், 31 ஆசனங்களில் முன்னணியிலும் உள்ளதால் இந்த கட்சி மொத்தம் 162 ஆசனங்களை பெறும் என்று கருதப்படுகிறது. அதேவேளை Conservative கட்சி 116 ஆசனங்களை வென்றும், 33 இல் முன்னணியிலும் உள்ளதால் 149 ஆசனங்களை பெறும் என்று கருதப்படுகிறது. பெரும்பான்மை ஆட்சிக்கு 172 ஆசனங்கள் தேவை. ஜஸ்டின் ரூடோ காலத்தில் 3ம் இடத்தில் […]
சுமார் $7.4 பில்லியன் (630 பில்லியன் இந்திய ரூபாய்கள்) பெறுமதியான 26 Fafale என்ற பிரான்சின் யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய திங்கள் அறிவித்துள்ளது. ஒரு ஆசனத்தை மட்டும் கொண்ட இந்த யுத்த விமானங்கள் பிரான்சின் Dassault Aviation நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை. இவை அனைத்தும் இந்தியாவின் கரங்களை 2030ம் ஆண்டு அளவில் முற்றாக அடையும். இந்த 26 விமானங்களில் 4 விமானங்கள் மட்டும் 2 ஆசனங்களை கொண்டிருக்கும். இந்திய யுத்த விமானிகளுக்கு பயிற்சி வழங்க இந்த நான்கும் […]
கனடாவின் மேற்கு நகரான வன்கூவரில் (Vancouver) சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில் இடம்பெற்ற கார் தாக்குதல் ஒன்று பலர் பலியாகியும், வேறு பலர் காயமடைந்தும் உள்ளனர். இப்பகுதியில் வாழும் பிலிப்பீன் நாட்டவர் பங்கு கொண்ட Lapu Lapu Day களியாட்ட நிகழ்வு ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றது. இந்த விழாவுக்கு சுமார் 100,000 பேர் வந்திருந்ததாகவும், அவர் நிறைந்திருந்த வீதியில் வேகமாக சென்ற SUV வாகனம் ஒன்றே தாக்கியது என்றும் கூறப்படுகிறது. East 41st Avenue வும், Fraser Street உம் சந்திக்கும் […]