அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்து Los Angeles நகரில் ரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இவற்றை அடக்க 2,000 National Guards படையினர் அனுப்பப்பட்டு உள்ளனர். இந்த படையினர் அங்கு 60 தினங்களுக்கு நிலைகொள்வர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. படையினர் அனுப்பப்பட்டதை அந்த மாநில ஆளுநர் “purposefully inflammatory” என்று சாடியுள்ளார். குறைந்தது 44 பேர் ICE (Immigration and Customs Enforcement) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின் வெள்ளி ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த […]
கனடிய பிரதமர் மார்க் கார்னி விடுத்த G7 அமர்வுக்கான அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோதி கனடா செல்லவுள்ளார். கார்னி வெள்ளிக்கிழமை விடுத்த அழைப்பை உடனடியாக ஏற்று கொண்டுள்ளார். ஒரு கையில் இந்திய உளவுப்படை கனடாவில் கனடிய சீக்கியரை படுகொலை செய்தது என்ற குற்றச்சாட்டை கொண்டிருக்கையில் மறு கையால் அழைப்பையும் விடுத்துள்ளது கனடா. கனடா இந்திய பிரதமரை அழைப்பதால் ஆவேசம் கொண்டுள்ளன World Sikh Organization of Canada போன்ற கனேடிய சீக்கிய அணிகள். இரண்டு நாடுகளும் அண்மையில் மறுதரப்பு […]
காசாவில் ஹமாசுக்கு எதிராக போராட புதிய பாலஸ்தீன ஆயுத குழுக்களை இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்கி வளர்த்து வருகிறது. இந்த நகர்வை எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஒரு காலத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு (PLO) எதிராக போராட இஸ்ரேல் இரகசியமாக ஹமாசுக்கு உதவி இருந்தது. இந்த நகர்வை இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு பாதுகாப்பு அமைச்சரவையின் அனுமதி இன்றியே நடைமுறை செய்துள்ளார். இந்த குழுக்களில் ஒன்று Yasser Abu Shabab என்றவரின் தலைமையில் இயங்குகிறது. கடந்த 20 மாதங்களாக மிகையான ஆயுத, […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் இரண்டாம் ஆட்சி காலத்தில், இதுவரை ரம்பின் வலது கரமாக இருந்த இலான் மஸ்க்குக்கும் (Elon Musk) ரம்புக்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரம் அடைந்துள்ளன. ரம்ப் Tesla போன்ற நிறுவங்களை பழிவாங்கக்கூடும் என்ற பயத்தால் வியாழன் Tesla பங்கு சந்தை பெறுமதி சுமார் $150 பில்லியனை அல்லது 14% பெறுமதியை இழந்துள்ளது. ரம்ப் “big and beautiful” என்று அழைத்த அவரது வரவு-செலவு திட்டத்தை இலான் மஸ்க் “disgusting abomination” என்று அழைத்தமையே முரண்பாடு ஆரம்பிக்க காரணம். […]
காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ வாக்கு மூலம் தடுத்துள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையில் 14 நாடுகள் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்து உள்ளது. வீட்டோ வாக்கு உரிமை கொண்ட பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 4 நாடுகளும், ஏனைய 10 நாடுகளும் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளன. […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் இரண்டாம் ஆட்சியின் ஆரம்பத்தில் ரம்பின் வலது கரம் போல் இயங்கியவர் Tesla நிறுவன CEO இலான் மஸ்க். அண்மையில் ரம்ப் ஆட்சியில் இருந்து விலகிய இவர் செவ்வாய்க்கிழமை ரம்பின் வரவு-செலவை கடுமையாக வசை பாடியுள்ளார். ரம்ப் “big and beautiful” என்று அழைத்த வரவு-செலவு திட்டத்தை இலான் மஸ்க் “disgusting abomination” என்று அழைத்துள்ளார். அத்துடன் இந்த வரவு-செலவு திட்டத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை அடுத்த நவம்பர் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் கூறியுள்ளார் இலான் மஸ்க். […]
யூக்கிறேனை இலகுவில் தாக்கி அடக்கி விடலாம் என்று ரஷ்ய சனாதிபதி பூட்டின் கொண்டிருந்த கனவு தொடர்ந்தும் பாரிய தோல்விகளை தழுவுகிறது. ஜூன் 1ம் திகதி யூக்கிறேன் ரஷ்யாவுள் ஆழ ஊடுருவி தனது drone மூலமான தாக்குதல்களை செய்துள்ளது. ரஷ்யா தான் ஆரம்பித்த யுத்தத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவது அவமானமே. யூக்கிறேனில் இருந்து சுமார் 4,000 km தொலைவில் ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள Belaya என்ற விமானப்படை தளம் மீது இடம்பெற்ற தாக்குதல் வியப்புக்கு […]
இஸ்ரேல் காசா மீது திணித்துள்ள தடைகளை மீறி சூழல் பாதுகாப்பு வாதியான Greta Thunberg உதவி கப்பல் ஒன்றை காசா நோக்கி செலுத்துகிறார். Madleen என்ற இந்த கப்பல் இத்தாலியின் Catania என்ற தென்பகுதி துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து உள்ளது. Freedom Flotilla Coalition என்ற தொண்டர் அமைப்பின் ஆதரவுடனேயே Thunberg இந்த உதவி வழங்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஞாயிறு பயணத்தை ஆரம்பித்த இவருடன் மொத்தம் 11 தொண்டர்கள் பயணிக்கின்றனர். சுவீடன் நாட்டவரான Thunberg தான் […]
அண்மையில் இந்தியா பாகிஸ்தானுடன் செய்த யுத்தத்தின் முதல் நாளே இந்தியா பல யுத்த விமானங்களை இழந்திருந்தது என்பதை இந்தியாவின் முப்படை தலைமை அதிகாரி General Anil Chauhan ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும் அவர் எத்தனை இந்திய விமானங்கள் சுடப்பட்டன, எவ்வகை விமானங்கள் சுடப்பட்டன என்பதை விபரமாக தெரிவிக்கவில்லை. சிங்கப்பூரில் இடம்பெறும் பாதுகாப்பு தொடர்பான Shangri-La Dialogue அமர்வில் Bloomberg செய்தி நிறுவனம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு Chauhan “The more important question is not whether jects were […]
காசாவில் இடம்பெறுவது war crime என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Olmert (2006 – 2009). இவர் இஸ்ரேலில் வெளியாகும் Haaretz என்ற பத்திரிகைக்கு காசா யுத்தம் தொடர்பாக எழுதிய கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு சாடியுள்ளார். பின்னொரு கூற்றில் “What is it if not a war crime?” என்று கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் Olmert. காசா யுத்த ஆரம்பத்தில் இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு பலஸ்தீனரை வதைக்காது என்று கூறிய Olmert தற்போது காசாவில் இஸ்ரேல் […]