காசாவில் இடம்பெறுவது war crime என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Olmert (2006 – 2009). இவர் இஸ்ரேலில் வெளியாகும் Haaretz என்ற பத்திரிகைக்கு காசா யுத்தம் தொடர்பாக எழுதிய கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு சாடியுள்ளார். பின்னொரு கூற்றில் “What is it if not a war crime?” என்று கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் Olmert. காசா யுத்த ஆரம்பத்தில் இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு பலஸ்தீனரை வதைக்காது என்று கூறிய Olmert தற்போது காசாவில் இஸ்ரேல் […]
இந்தியாவும் தற்போது stealth யுத்த விமான தயாரிப்பு முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த அறிவிப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேற்று செவ்வாய் அறிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானுடனான யுத்தத்தில் இந்தியா தனது யுத்த விமானங்கள் பலவற்றை இழந்து இருந்தது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய J-10 வகை stealth விமானங்களே இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் இந்தியா 2 Rafale வகை நவீன விமானங்களை இழந்துள்ளதாக அமெரிக்கா […]
இதுவரை காலமும் காசா யுத்தத்தில் அகப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஐ.நாவும் அதனுடன் இணைந்த தொண்டர் நிறுவனங்களுமே உணவு, மருந்து போன்ற அவசிய உதவிகளை வழங்கி வந்தன. ஆனால் அவ்வகை உதவி வழங்களை பறித்து இராணுவ மயமாக்க முனைகிறது Gaza Humanitarian Foundation (GHF) என்ற அமெரிக்க-இஸ்ரேல் அமைப்பு. இந்த அமைப்பை ஐ.நா. நிராகரித்து உள்ளது. GHF அமைப்பு திங்கள் தாம் சிலருக்கு உதவிகளை வழங்கியதாக அறிக்கை விட்டிருந்தது. ஆனால் அந்த வழங்கல் எப்போது, எந்த இடத்தில் செய்யப்பட்டது […]
காசாவில் மீண்டும் ஒரு யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இம்முறை இந்த யுத்த நிறுத்தம் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அரசால் முன் வைக்கப்பட்டது. ஹமாஸ் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாலும், இஸ்ரேல் இதுவரை தனது தீர்மானத்தை அறிவிக்கவில்லை. இந்த யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட்டால் 10 இஸ்ரேல் கைதிகள் இரண்டு குழுக்களாக விடுதலை செய்யப்படுவர். யுத்த நிறுத்தம் 70 தினங்களுக்கு நீடிக்கும். முன்னாள் சனாதிபதி பைடென் நடைமுறை செய்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மார்ச் 18ம் திகதி […]
காசாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை செய்த விமான தாக்குதலுக்கு 10 பிள்ளைகளை கொண்ட Alaa al-Najjar என்ற பெண் வைத்தியரின் 9 பிள்ளைகள் பலியாகி உள்ளனர். அதே வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் கணவர் வைத்தியரான மனைவியை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய வேளையிலேயே இஸ்ரேலின் விமானம் வீட்டை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு 11 வயது மகனும், தந்தையும் காயப்பட 9 பிள்ளைகள் பலியாகினர். இவர்களின் மூத்த பிள்ளைக்கு வயது 12. காயங்களுடன் தப்பிய 11 வயது மகனுக்கு Graeme Groom […]
அமெரிக்க சனாதிபதி தென்னாபிரிக்க சனாதிபதி Cyril Ramaphosa வை பேச்சுவார்த்தை என்ற போர்வையில் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவமானப்படுத்த முயன்றாலும் தற்போது அவமானப்படுவது ரம்பே. அதற்கு காரணம் ரம்ப் பயன்படுத்திய பொய்யான தரவுகளே. Ramaphosa விடம் ரம்ப் ஒரு படத்தை காட்டி அதில் காணப்பட்ட பைகளில் இருந்த சடலங்கள் தென்னாபிரிக்க வெள்ளையரின் சடலங்கள் என்றும் அவர்கள் கருப்பர்களால் படுகொலை செய்யப்பட்டவர் என்றும் ரம்ப் கூறியிருந்தார். ஆனால் அந்த படம் ஒரு வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட screenshot என்றும், […]
அமெரிக்க சனாதிபதி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) மாணவ விசா மூலம் கல்வி கற்கவரும் வெளிநாட்டு மாணவரை கொண்டிருக்க இன்று வியாழன் தடை விதித்துள்ளார். ஹார்வர்ட் தனது விருப்பத்துக்கு உடன்படாத காரணத்தாலேயே ரம்ப் இவ்வாறு தடை விதித்துள்ளார். புதிய மாணவ வருகையை தடை செய்தது மட்டுமன்றி ஏற்கனவே அங்கு கல்வி கற்கும் மாணவரையும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற்ற கூறப்பட்டுள்ளது. இந்த மாணவர் மாற மறுத்தால் விசா பறிக்கப்பட்டு, கைதும் செய்யப்படலாம். அமெரிக்க மத்திய அரசிடம் Student and […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனா மீது பெரும் இறக்குமதி வரிகளை விதித்த பின் சீனாவை நோக்கிய வெளி நாடுகளின் முதலீடுகள் குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் மட்டும் சீன அரச மற்றும் தனியார் bond கடன்களை கொள்வனவு செய்வதன் மூலம் $17.3 பில்லியன் மேலதிக முதலீடு சீனா சென்றுள்ளது. ஆனால் அமெரிக்க bond கடனுக்கான மதிப்பு குறைந்துள்ளது. Bond மதிப்பு குறைய அந்த முதலீட்டுக்கு முதலீட்டாளர் எதிர்பார்க்கும் வட்டியும் (yield) அதிகமாகும். அதனால் புதன்கிழமை $16 […]
கடந்த 40 ஆண்டுகளாக கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடை தயாரிப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த NEXT என்ற பிரித்தானிய நிறுவனம் தனது ஆடை தயாரிப்பு வளாகத்தை மூடுகிறது. இலங்கையில் ஆடை தயாரிப்புக்கான செலவு அதிகமாக உள்ளதாகவும், இந்த வர்த்தகம் கடந்த பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்குகிறது என்றும் NEXT கூறியுள்ளது. ஆனால் குறிப்பாக எந்த செலவு அதிகரித்து உள்ளது என்று NEXT கூறவில்லை. பொதுவாக தொழிலாளர் ஊதியம் இலங்கையில் மிகையாக அதிகரித்து உள்ளதாக ஆய்வாளர் கூறுகின்றனர். மேற்படி […]