இன்று முதல் கனடிய, மெக்ஸிக்கோ பொருட்களுக்கு 25% வரி 

இன்று முதல் கனடிய, மெக்ஸிக்கோ பொருட்களுக்கு 25% வரி 

அமெரிக்க சனாதிபதி கடந்த மாதம்  அறிவித்து பின் ஒரு மாத காலம் பின்தள்ளிய கனடா, மெக்சிக்கோ பொருட்கள் மீதான 25% மேலதிக இறக்குமதி வரியும், சீனா பொருட்கள் மீதான 20% மேலதிக வரியும் இன்று செவ்வாய் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கனடா, மெக்சிக்கோ, சீனா பதிலுக்கு தாமும் அமெரிக்க பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறை செய்கின்றன. இந்த வரிகளின் தாக்கம் சில பொருட்களின் விலைகளில் உடனடியாகவும், சிலவற்றில் சில கிழமைகளிலும் தெரியவரும். இந்த 3 நாடுகளும் […]

செலன்ஸ்கிக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பா

செலன்ஸ்கிக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பா

வெள்ளை மாளிகையில் ரம்புடனும், உதவி சனாதிபதி வான்சுடனும் முரண்பாடு விரட்டப்பட்ட யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கிக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் திரண்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை லண்டன் நகரில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் பிரித்தானிய பிரதமர் யூக்கிறேனுக்கு உதவ அனைத்து நாடுகளையும் கேட்டுள்ளார். பிரித்தானியாவும், பிரான்சும், வேறு சில நாடுகளும் தமது தரப்பில் யூக்கிறேன் யுத்த நிறுத்த தீர்வு ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார். ஆனாலும் பொருளாதார, ஆயுத, அரசியல் ஆளுமை கொண்ட அமெரிக்காவின் ஆதரவு இன்றி ஐரோப்பா […]

இஸ்ரேல் மீண்டும் காசா மீது உணவு, மருந்து தடை 

இஸ்ரேல் மீண்டும் காசா மீது உணவு, மருந்து தடை 

இஸ்ரேல் மீண்டும் ஞாயிறு முதல் காசாவுக்கு உணவு, மருந்து போன்ற humanitarian பொருட்கள் எடுத்து செல்வதற்கு தடை விதித்துள்ளது. இஸ்ரேல் தான் ஏற்கனவே செய்து கொண்ட இணக்கத்துக்கு முரணாகவே மீண்டும் இந்த தடையை செய்கிறது. ஜனவரி மாத நடுப்பகுதியில் இருந்து இஸ்ரேல், ஹமாஸ் இரண்டும் கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் வரைந்த யுத்தநிறுத்த இணக்கத்துக்கு அமைய சனிக்கிழமை வரை கைதிகளை கட்டம் கட்டமாக பரிமாறி வந்தன. சனிக்கிழமை முதலாம் கட்டம் முழுமையாக முற்று பெற்றாலும், இஸ்ரேல் […]

40 ஆண்டு போராட்டத்தை கைவிடும் Kurds, தீர்வு தெளிவில்லை

40 ஆண்டு போராட்டத்தை கைவிடும் Kurds, தீர்வு தெளிவில்லை

துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதில் வாழும் Kurds இன மக்களுக்கு ஒரு தனிநாடு அமைக்கும் நோக்கில் 1984ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடிய PKK என்ற ஆயுத குழு தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஆனாலும் Kurds மக்களுக்கு என்ன தீர்வு என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 1984ம் ஆண்டு முதல் துருக்கிக்கு எதிராக Abdullah Ocalan என்ற போராளி தலைமையில் போராடியது PKK. 1999ம் ஆண்டு துருக்கி Ocalan […]

ரம்ப், செலன்ஸ்கி பகிரங்க வாக்குவாதம் 

ரம்ப், செலன்ஸ்கி பகிரங்க வாக்குவாதம் 

அமெரிக்க சனாதிபதி ரம்பும், அமெரிக்க உதவி சனாதிபதி வன்சும் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியுடன் பத்திரிகையாளர் முன்னிலையில் என்றுமில்லாதவாறு வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதத்தின் பின் செலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். தொடரவிருந்த நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. தானும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் சமாதானத்தை விரும்புவதாகவும் ஆனால் செலன்ஸ்கி யுத்தத்தை தொடர விரும்புவதாகவும் ரம்ப் செலன்ஸ்கி மீது குற்றம் கூறியுள்ளார். செலன்ஸ்கி மூன்றாம் உலக யுத்தத்தை விரும்புவதாகவும் ரம்ப் சாடியுள்ளார். ஆனால் ரஷ்யாவே தமது நாட்டை ஆக்கிரமித்து உள்ளதாக செலன்ஸ்கி […]

மே மாதம் முதல் Skype சேவை நிறுத்தப்படும்?

மே மாதம் முதல் Skype சேவை நிறுத்தப்படும்?

இலவசமாக உலகம் எங்கும் தொலைபேசி மற்றும் வீடியோ தொலைபேசி சேவைகளை வழங்கி வந்த Skype தனது சேவையை மே மாதம் முதல் நிறுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி முறைப்படி Microsoft நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில செய்தி நிறுவனங்கள் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளன. FaceTime, Zoom, WhatsApp, WeChat ஆகியவற்றுக்கு எல்லாம் முன்னர் உலக அளவில் இலவச தொலைபேசி சேவைக்கு வந்திருந்தது Skype. இந்த இணையம் மூலமான தொலைபேசி சேவையை Skype என்ற ஐரோப்பிய நிறுவனம் […]

அமெரிக்காவை நம்பிய செலன்ஸ்கி கைவிடப்படுகிறார்

அமெரிக்காவை நம்பிய செலன்ஸ்கி கைவிடப்படுகிறார்

யூக்கிறேனின் பலம், பலவீனம் இரண்டையும் கருத்தில் கொள்ளாது பைடென் காலத்து அமெரிக்காவின் ஆயுத, பண உதவிகளில் மயங்கி ரஷ்யாவுடன் யுத்தத்துக்கு சென்ற யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி தற்போது ரம்ப் ஆட்சியில் கைவிடப்பட்டு செய்வதறியாது முழிக்கிறார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க இதுவரை காலமும் பைடென் அரசு சுமார் $500 பில்லியன் யுத்த உதவிகளை செய்திருந்தது. இந்த உதவிகளை யூக்கிறேன் அமெரிக்காவுக்கு திருப்பி செலுத்தவேண்டும் என்று பைடென் அரசு நிபந்தனை எதையும் முன்வைத்திருக்கவில்லை. ஆனால் தற்போதைய ரம்ப் அரசு $500 […]

$5 மில்லியனுக்கு ரம்பின் அமெரிக்க Gold Card

$5 மில்லியனுக்கு ரம்பின் அமெரிக்க Gold Card

சனாதிபதி ரம்ப் $5 மில்லியனுக்கு அமெரிக்க Gold Card விற்பனை செய்யப்படவுள்ளது என்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த Gold Card அமெரிக்காவின் Green Card கொண்டுள்ள உரிமைகளை கொண்டிருக்குமாம். புதிய Gold Card வழங்கல் இரண்டு கிழமைகளில் ஆரம்பமாகும் என்று ரம்ப் கூறினாலும் அது சாத்தியமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ரம்ப் முன் பின் யோசனை செய்யாது வாய்க்கு வந்தபடி கூறி, பின் அந்த கூற்றுகளை மறந்துவிடுபவர். ரஷ்யாவின் செல்வந்தர்களும் இந்த Gold Card ஐ கொள்வனவு […]

பைடெனின் அமெரிக்கா யூக்கிறேனுக்கு, ரம்பின் அமெரிக்கா ரஷ்யாவுக்கு 

பைடெனின் அமெரிக்கா யூக்கிறேனுக்கு, ரம்பின் அமெரிக்கா ரஷ்யாவுக்கு 

முன்னாள் அமெரிக்க சனாதிபதி பைடென் காலத்தில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து யூக்கிறேனுக்கு ஆதரவாக நின்று ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. பைடென் அரசு யூக்கிறேனுக்கு பலநூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத உதவிகளையும் செய்தது. ஆனால் ரம்ப் அமெரிக்கா ரஷ்யாவுடன் இணைந்து யூக்கிறேனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிராக போர்க்கொடி தூக்குகிறது. யூக்கிறேனை ரஷ்யா ஆக்கிரமித்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஐ.நா. கண்டித்து திங்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட முனைந்த வேளையிலேயே இந்த அவலம் பதிவாகி […]

ஜெர்மனி தேர்தலில் CDU முன்னிலையில், ஆளும் கட்சி 3ம் இடத்தில் 

ஜெர்மனி தேர்தலில் CDU முன்னிலையில், ஆளும் கட்சி 3ம் இடத்தில் 

ஜெர்மனியில் ஞாயிரு இடம்பெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான SPD கட்சி 3ம் இடத்துக்கு தள்ளப்பட, CDU கட்சி முன்னிலையில் உள்ளது. குடிவரவாளர்களை கடுமையாக எதிர்க்கும் கட்சியான AfD இரண்டாம் இடத்தில் உள்ளது. இறுதி முடிவுகள் வெளிவரவில்லை என்றாலும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி CDU கட்சி 28% வாக்குகளை வென்று 208 ஆசனங்களை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள AfD கட்சி 20% ஆசனங்களை வென்று 152 ஆசனங்களை பெறுகிறது. தற்போதைய ஆளும் கட்சி 16% […]

1 15 16 17 18 19 361