அமெரிக்காவில் விமானமும், ஹெலியும் வானத்தில் மோதின 

அமெரிக்காவில் விமானமும், ஹெலியும் வானத்தில் மோதின 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Reagan National Airport என்ற விமான நிலையத்துக்கு அருகில் American Airlines flight 5342 விமானமும், அமெரிக்க இராணுவ ஹெலி ஒன்றும் வானத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகின. பயணிகள் விமானத்தில் 60 பயணிகளும், 4 பணியாளரும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் மரணங்கள் இடம்பெறுள்ளதாக கூறப்பட்டாலும் முழு விபரங்களும் இதுவரை அறியப்படவில்லை. ஹெலியில் 3 படையினர் இருந்துள்ளனர். தேடுதல் பணிகள் தொடர்கின்றன. விபத்துக்கு உள்ளான பயணிகள் விமானம் ஒரு Bombardier CRJ […]

இலங்கையில் smartphone IMEI பதிவு

இலங்கையில் smartphone IMEI பதிவு

இலங்கையில் பயன்படுத்தப்படும் smartphone தொலைபேசி சேவைகள் விரைவில் IMEI அடையாள இலக்க (ID) பதிவுக்கு உட்படுத்தப்படும் என்று Telecommunication Regulatory Commission of Sri Lanka கூறியுள்ளது. ஒவ்வொரு வாகனத்துக்கும் அடையாளமாக VIN (Vehicle Identification Number) இலக்கம் இருப்பதுபோல் ஒவ்வொரு smartphone களுக்கும் அடையாளமாக IMEI (International Mobile Equipment Identity) இலக்கம் உள்ளது. உலகம் முழுவதும் ஒரு தொலைபேசிக்கு ஒரு IMEI ஆக இருக்கும். இது 15 இலக்கங்களை கொண்டது. இந்த IMEI இலக்கம் […]

மகா கும்பமேளா நெரிசலுக்கு 30 பேர் பலி, 90 பேர் காயம்

மகா கும்பமேளா நெரிசலுக்கு 30 பேர் பலி, 90 பேர் காயம்

இந்தியாவின் கங்கை ஆறும், யமுனா ஆறும் சந்திக்கும் இடத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வில் இடம்பெற்ற நெரிசலுக்கு குறைந்தது 30 பலியாகியும், 90 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 25 பேரே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் குயாரத், அசாம் போன்ற தூர இட மாநிலத்தவரும் அடங்குவர். ஒடுக்கமான பாலம் ஒன்று வழியே பெருமளவு பக்தர்கள் செல்ல முயற்சித்த வேளையிலேயே நெரிசல் இடம்பெறுள்ளது. சில போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த முயன்றாலும் நெரிசல் […]

2049ல் சீன கடற்படை அமெரிக்காவுக்கு நிகராகும், கூறுவது ரஷ்யா

2049ல் சீன கடற்படை அமெரிக்காவுக்கு நிகராகும், கூறுவது ரஷ்யா

2049ம் ஆண்டளவில் சீனாவின் கடற்படை அமெரிக்க கடற்படைக்கு நிகரான வளர்ச்சியை கொண்டிருக்கும் என்று Russian International Affairs Council (RIAC) என்ற ஆய்வு அமைப்பு கூறியுள்ளது. அத்துடன் ரஷ்யா சீனாவின் வழிமுறைகளை பின்பற்றி வளரவேண்டும் என்றும் கேட்டுள்ளது RIAC. People’s Republic of China என்ற சீன கொம்யூனிஸ்ட் கட்சி 2049ம் ஆண்டு சீனாவை 100 ஆண்டுகள் ஆட்சி செய்தமையை கொண்டாடும். சீனா தனது GDP யின் 1.5% மட்டுமே தற்போது தனது இராணுவத்தில் செலவிடுகிறது. இதே […]

ICC கைதியை விடுதலை செய்த இத்தாலி பிரதமர் விசாரணையில் 

ICC கைதியை விடுதலை செய்த இத்தாலி பிரதமர் விசாரணையில் 

சர்வதேச குற்ற நீதிமன்றம் (International Criminal Court) தேடிவந்த Osama Najim என்ற லிபியா நாட்டு warlord ஐ விடுதலை செய்த இத்தாலிய பிரதமர் மீது விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன. Najim லிபிய போலீஸ் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாகவும், Mitiga என்ற லிபிய தடுப்புக்காவல் சிறையின் உயர் அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற குற்ற செயல்கள் காரணமாகவே ICC யால் விசாரணைக்கு தேடப்பட்டவர். Najim ஜனவரி 21ம் திகதி இத்தாலியில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரை கையேற்க […]

சீன DeepSeek  நிறுவனத்தால் NVIDIA $593 பில்லியன் இழப்பு

சீன DeepSeek  நிறுவனத்தால் NVIDIA $593 பில்லியன் இழப்பு

சீனாவை தளமாக கொண்ட DeepSeek என்ற AI நிறுவனத்தின் வருகையால் அமெரிக்காவை தளமாக கொண்ட INVIDIA என்ற முதல் தர AI நிறுவனம் திங்கள்கிழமை பங்கு சந்தையில் $592.7 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அதனால் NVIDIA வின் பங்கு சந்தை பெறுமதி திங்கள் மட்டும் 17% ஆல் விழுந்துள்ளது. கடந்த கிழமையே DeepSeek தனது AI செயலியை Apple நிறுவனத்தின் app store இல் அறிமுகம் செய்திருந்தது. திங்கள் வரையில் DeepKeep கின் செயலி ChatGPT செயலியின் […]

கொலம்பியாவுடன் மோதும் ரம்ப், புதிய வரிகள், தடைகள்

கொலம்பியாவுடன் மோதும் ரம்ப், புதிய வரிகள், தடைகள்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது செயற்பாடுகளுக்கு துணைபோக மறுக்கும் கொலம்பியா என்ற தென் அமெரிக்க நாட்டின் மீது 25% அவசரகால இறக்குமதி வரியையும், விசா தடைகளையும் ஞாயிரு விதித்துள்ளார். ஞாயிரு முதல் கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கொலம்பியா நாட்டவருக்கு விசா வழங்கும் பணிகளையும் முற்றாக நிறுத்தி உள்ளது. கொலம்பிய சனாதிபதிக்கு நெருங்கியவர்கள் மீதும் ரம்ப் தடைகளை விதித்துள்ளார். கொலம்பியா மீதான மேற்படி 25% இறக்குமதி வரி ஒரு கிழமைக்கு பின் 50% ஆக அதிகரிக்கும் என்றும் ரம்ப் […]

மன்னார், பூநகரி அதானி மின் உற்பத்தி தொடர்ந்தும் இழுபறியில்

மன்னார், பூநகரி அதானி மின் உற்பத்தி தொடர்ந்தும் இழுபறியில்

இந்திய அதானி (Adani) நிறுவனம் இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு (CEB) வழங்கும் 484 MW, 20 ஆண்டு திட்டம் தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி உண்மையானது அல்ல என்றாலும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளது. இந்த திட்டம் முன்னைய ரணில் அரசால் கேள்வி (public tender) எதுவும் இன்றி, அதானி கேட்ட விலைக்கே மின்னை […]

ஹமாஸ் 15,000 போராளிகளை இணைத்தது என்கிறது அமெரிக்கா

ஹமாஸ் 15,000 போராளிகளை இணைத்தது என்கிறது அமெரிக்கா

2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் காசாவை தாக்கும் அதே காலத்தில் ஹமாஸ் சுமார் 10,000 முதல் 15,000 புதிய போராளிகளை இணைத்துள்ளது என்று அமெரிக்க புலனாய்வு அமெரிக்க காங்கிரசுக்கு கூறியுள்ளது. இந்த புதிய உறுப்பினர் இதுவரை முழுமையாக ஆயுத பயிற்சி பெறாவிட்டாலும், இவர்கள் வயதில் இளையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது ஆரம்பநிலை செயல்களையே செய்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உளவுப்படி சுமார் 20,000 முதல் 25,000 ஹமாஸ் போராளிகள் யுத்தத்தில் இறந்துள்ளனர். இவ்வாறு […]

சீனாவுடனான மோதலை தவிர்க்க முனையும் ரம்ப் 

சீனாவுடனான மோதலை தவிர்க்க முனையும் ரம்ப் 

தான் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி (tariffs) அறவிடுவேன் என்று தேர்தல் காலத்தில் கூறியிருந்த ரம்ப் தற்போது அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று கூறுகிறார். அமெரிக்காவின் Fox News என்ற செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரையாடல் ஒன்றிலேயே ரம்ப் இதை கூறியுள்ளார். அமெரிக்கா சீனாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் $500 பில்லியன் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதேவேளை திங்கள்கிழமை executive order மூலம் தடை செய்த birthright […]