கனடாவின் மேற்கு நகரான வன்கூவரில் (Vancouver) சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில் இடம்பெற்ற கார் தாக்குதல் ஒன்று பலர் பலியாகியும், வேறு பலர் காயமடைந்தும் உள்ளனர். இப்பகுதியில் வாழும் பிலிப்பீன் நாட்டவர் பங்கு கொண்ட Lapu Lapu Day களியாட்ட நிகழ்வு ஒன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றது. இந்த விழாவுக்கு சுமார் 100,000 பேர் வந்திருந்ததாகவும், அவர் நிறைந்திருந்த வீதியில் வேகமாக சென்ற SUV வாகனம் ஒன்றே தாக்கியது என்றும் கூறப்படுகிறது. East 41st Avenue வும், Fraser Street உம் சந்திக்கும் […]
அமெரிக்காவின் ஒரு மாநிலமான கலிபோர்னியாவின் பொருளாதாரம் 2024ம் ஆண்டு இதுவரை உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக இருந்த ஜப்பானின் பொருளாதாரத்தை பின் தள்ளி 4வது பெரிய பொருளாதாரம் ஆகியுள்ளது. 2024ம் ஆண்டில் கலிபோர்னியாவின் பொருளாதாரம் (GDP) $4.10 ட்ரில்லியன் ($4,100 பில்லியன்) ஆகவும் ஜப்பானின் பொருளாதாரம் $4.01 ட்ரில்லியன் ($4,010 பில்லியன்) ஆகவும் இருந்துள்ளன. இந்த செய்தியால் ரம்புக்கு எதிரான Democratic கட்சி மாநில ஆளுநர் Gavin Newsom மேலும் உற்சாகம் அடைந்துள்ளார். இவர் 2028ம் ஆண்டில் அமெரிக்க சனாதிபதி போட்டியில் […]
இந்திய இராணுவமும், பாகிஸ்தான் இராணுவமும் வெள்ளிக்கிழமையும், இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் மறு தரப்பு மீது சுட்டு உள்ளன. சிறு ஆயுதங்களால் செய்யப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு விளைவான அழிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏப்ரல் 22ம் திகதி காஷ்மீர் பகுதியில் 26 இந்திய உல்லாச பயணிகள் துப்பாக்கி குழு ஒன்றால் சுட்டு கொன்றமைக்கு பின் இரண்டு நாடுகளும் மீண்டும் முறுகல் நிலையில் உள்ளன. தாக்குதலை செய்தவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர் என்றும், ஒருவர் இந்தியர் என்றும் இந்தியா கூறுகிறது. 1960ம் ஆண்டு […]
சீன பொருட்கள் மீதான மிகையான இறக்குமதி வரியை (tariff) பெருமளவில் குறைக்க உள்ளதாக சனாதிபதி ரம்ப் செவ்வாய் கூறியுள்ளார். அவர் தனது கூற்றில் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி “come down substantially, but it won’t be zero” என்றுள்ளார். ரம்பின் இந்த கூற்றுக்கு சற்று முன் JPMorgan வங்கி தலைமையிலான அமர்வு ஒன்றில் ரம்பின் Treasury செயலாளர் Scott Bessent அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அதி உயர் வரிகள் பொருளாதார தடைகளை ஒத்தது […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் பிரதான கையாக இயங்கும் இலான் மஸ்க் (Elon Musk) தனது அரசியல் பணிகளுக்கான கால அளவை மே மாதம் முதல் கிழமைக்கு 1 அல்லது 2 தினங்களாக குறைக்க முன்வந்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் Tesla கார் உற்பத்தி நிறுவனத்தின் காலாண்டு அறிவிப்பு ஒன்றிலேயே கூறியுள்ளார். இவரின் இந்த மன மாற்றத்துக்கு காரணம் மின்னில் இயங்கும் கார்களை தயாரிக்கும் Tesla நிறுவனம் பாரிய வீழ்ச்சியை அடைவதே. இலான் மஸ்கின் அரசியல் செயற்பாடுகள் அவர் மீது அமெரிக்காவிலும், […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்துவரும் இறக்குமதி வரி (tariff) யுத்தம் காரணமாக 2025ம் ஆண்டில் 3.3% வளர்ச்சியை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்ட உலக பொருளாதாரம் 2.8% வளர்ச்சியை மட்டுமே கொண்டு இருக்கும் என்று IMF இன்று செவ்வாய் எச்சரித்து உள்ளது. அது மட்டுமன்றி 2.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட 2025ம் ஆண்டுக்கான அமெரிக்க பொருளாதார வளர்ச்சியும் 1.8% ஆக மட்டுமே இருக்கும் என்றும் IMF கூறியுள்ளது. சனாதிபதி ரம்ப் அமெரிக்க Federal Reserve என்ற மத்திய […]
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Pahalgam என்ற காஷ்மீர் பகுதியில் ஆயுத குழு ஒன்று செய்த துப்பாக்கி சூட்டுக்கு குறைந்தது 20 உள்நாட்டு உல்லாச பயணிகள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர். இரண்டு அல்லது மூன்று துப்பாக்கிதாரர் இந்த தாக்குதலை செய்திருக்கலாம் என்று Indian Express கூறுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவ்வகை சூட்டுக்கு 9 பேர் பலியாகியும், 33 பேர் காயப்பட்டும் இருந்தனர். Kashmir Resistance என்ற முன்பின் பெரிதும் அறியப்படாத ஆயுத குழு ஒன்று தாமே இந்த தாக்குதலை செய்ததாக […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த இறக்குமதி வரி (tariffs) யுத்தம் காரணமாக சீன விமான சேவை ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட அமெரிக்காவின் Boeing விமானம் ஒன்று அமெரிக்கா திரும்பி உள்ளது. உலகின் இரண்டு பிரதான விமான தயாரிப்பு நிறுவங்களின் ஒன்று அமெரிக்காவின் Boeing நிறுவனம், மற்றையது ஐரோப்பாவின் Airbus. சீனா தனக்கு தேவையான பயணிகள் விமானங்களில் அரை பங்கை Boeing நிறுவனத்திடம் இருந்தே கொள்வனவு செய்யும். மேற்படி அமெரிக்கா திரும்பிய விமானம் ஒரு Boeing 737 MAX […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் பலமுனை மிரட்டல்களுக்கு அடிபணிய மறுக்கிறது Harvard University. ஏற்கனவே அமெரிக்காவின் Columbia University ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்தாலும் ஹார்வர்ட் தனது சுதந்திரத்தை இழக்க மறுக்கிறது. ரம்ப் அரசு ஏப்ரல் 11ம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ரம்ப் அரசின் விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களை அமைக்கும்படியும், மாணவர்களை அனுமதிக்கும் முறைமையை மாற்றி அமைக்கும்படியும், பலஸ்தீனர் ஆதரவு போராட்டங்களை தடுக்கும்படியும் கேட்டிருந்தது. Columbia பல்கலைக்கழகத்திடமும் இவ்வாறு கேட்கப்பட்டு, கொலம்பியாவும் தனது சுதந்திரத்தை இழந்து […]