அங்கோலாவில் முன்னாள் ஆட்சி மகன் கைது

ஆபிரிக்க நாடான அங்கோலாவின் (Angola) முன்னாள் ஜனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மகனான Zenu என்று அழைக்கப்படும் Jose Filomeno dos Santos அந்நாட்டு புதிய அரசால் ஊழல் குற்றசாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். . Zenuவின் தந்தை அங்கோலாவை 1979 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டுவரை ஆட்சி செய்தவர். ஜனாதிபதியான தந்தை 2013 ஆம் ஆண்டில் 35 வயதான மகனை அங்கோலாவின் sovereign wealth fund குக்கு chairman ஆக நியமித்தார். […]

சிரியாவுக்கு S-300, அமெரிக்கா, இஸ்ரேல் குமுறல்

சிரியாவுக்கு தனது S-300 ஏவுகணைகளை விற்பனை செய்ய ரஷ்யா இன்று திங்கள் தீர்மானித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இரண்டு கிழமைகளுக்குள் சிரியாவை அடையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவும், இஸ்ரேலும் விசனம் கொண்டுள்ளன. . சில தினங்களுக்கு முன் சிரியாவை தாக்க சென்ற இஸ்ரேல் யுத்த விமானங்களை நோக்கி சிரியா தனது S-200 வகை ஏவுகணையை ஏவி இருந்தது. உடனே இஸ்ரேல் விமானங்கள் அங்கு பறந்துகொண்டிருந்த ரஷ்ய வேவுபார்க்கும் விமானம் ஒன்றி பின் மறைந்து கொண்டன. அதனால் ஏவப்பட்ட […]

மாலைதீவு தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி?

மாலைதீவில் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாமே வென்றுள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணி கூறியுள்ளது. அத்துடன் எதிரணி வேட்பாளர் Ibrahim Mohamed Solih தனது ஆட்சியை அங்கரிக்குமாறும் கேட்டுள்ளார். இந்தியாவும் உடனடியாக எதிர்க்கட்சி தலைவரை வாழ்த்தி உள்ளது. ஆனால் மேலும் பல நாட்களுக்கு சட்டப்படியாக முடிவுகள் அறிவிக்கப்பட மாட்டாது. . தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி Abdulla Yameen இடம்பெற்ற தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தையும் தெரிவித்து இருக்கவில்லை. . தற்போதைய ஜனாதிபதியின் கட்சி (PPM, Progressive […]

மோதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மோதி அரசு 36 Rafale யுத்த விமானங்களை பிரான்ஸிடம் இருந்து $8.7 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது. அந்த கொள்வனவின் ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது. . இந்திய சட்டப்படி இவ்வகை கொள்வனவின் 30% இந்தியாவில் முதலீடு செய்யப்படல் அவசியம். அதன்படி இந்திய செயல்பாடுகளுக்கு மோதி தனது நண்பர் அனில் அம்பானியின் Reliance Group நிறுவனத்தை பலவந்தமாக புகுத்தி உள்ளார்  என்று தற்போது அறியப்படுகிறது. அத்துடன் இந்த கொள்வனவுக்கு, ஊழல் […]

ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி

இன்று சனிக்கிழமை ஈரானில் இடம்பெற்ற இராணுவ ஊர்வலம் ஒன்றின் மீது குறைந்தது 4 ஆயுததாரிகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியும், சுமார் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோரில் பொதுமக்களும் அடங்குவார். ஆயுதாரிகளில் 3 பேர் கொல்லப்பட்டும், ஒருவர் அகப்பட்டும் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. . இந்த தாக்குதல் ஈரான்-ஈராக் எல்லையோரம் உள்ள Khuzestan Ahvaz என்ற தென்மேற்கு மாகாணத்தின் தலைநகர் Ahvaz இல் இடம்பெற்று உள்ளது. . தாக்குதல் செய்த ஆயுததாரிகள் இராணுவ உடையிலேயே அங்கு […]

சீனா S-400, Su-35 கொள்வனவு, அமெரிக்கா தடை

சீனா ரஷ்யாவின் நவீன S-400 ஏவுகணைகளையும், பத்து Su-35 யுத்த விமானங்களையும் கொள்வனவு செய்ததை காரணம் கூறி, அமெரிக்காவின் CAATSA விதிகளின் கீழ், சீனா மீது சில தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. பதிலுக்கு தாமும் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர் சீன அதிகாரிகள். . Equipment Development Department என்ற சீன இராணுவ தளபாட கொள்வனவு திணைக்களம், அதன் அதிகாரி Li Shangfu உட்பட சிலர் மீது அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது. . உண்மையில் […]

பிரான்சில் மாணவர்க்கு smartphone தடை

இந்த மாதம் முதல் பிரான்சில் மாணவர்கள் பாடசாலையில் smartphone பயன்படுத்துவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. வகுப்பறை மட்டுமன்றி, பாடசாலையின் மைதானம் போன்ற பகுதிகளிலும் இந்த smartphone பயன்பாட்டு தடை நடைமுறையில் இருக்கும். . முதலாம் வகுப்பு மாணவர் முதல் ஒம்பதாம் வகுப்பு மாணவர் வரை இந்த தடைக்கு உள்ளாவர். . கடந்த வருட கணிப்பின்படி, பிரான்சில் 12 வயது முதல் 17 வயது வரையான மாணவர்களுள் 93% மாணவர்கள் smartphone வைத்திருந்துள்ளனர். . மாணவர்கள் smartphone களை […]

​சிரியாவில் நீண்டகால அமைதிக்கு அறிகுறி

2011 ஆம் ஆண்டு அந்நிய நாடுகளின் தூண்டுதலில் ஆரம்பிக்கப்பட்ட ​சிரியாவின் யுத்தம் ஓரளவு அமைதியை அடையும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆரம்பத்தில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளினதும், சவுதி, கட்டார், துருக்கி ஆகிய நாடுகளினதும் உதவியுடன் அரச எதிரணி வேகமாக பெரும் பகுதிகளை கைப்பற்றி இருந்திருந்தாலும், பின்னர் கிடைத்த ரஷ்ய, ஈரான், ஹெஸ்புல்லா ஆதரவுகளுடன் அசாத் அரசு எதிரிகளை முறியடித்து இழந்த பகுதிகளை மீண்டு இருந்தது. . இறுதியாக தப்பிய எதிரணிகள் அனைத்தும் சிரியாவின் வடமேற்கே, துருக்கியின் எல்லையோரம் […]

சீனாவும் அமெரிக்கா மீது மூன்றாம் தொகுதி ​வரி

திங்கள் அமெரிக்காவின் ரம்ப் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை (tariffs) அறிவித்ததை தொடர்ந்து இன்று சீனாவும் பதில் வரியை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $60 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு சீனா மேலதிக இறக்குமதி வரியை அறவிடும். . அமெரிக்காவின் புதிய வரிகள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுபோல் சீனாவின் புதிய வரிகளும் இந்த மாதம் 24 ஆம் […]

​ ​ரஷ்ய வேவு விமானம் வீழ்ந்தது, வீழ்த்தியது ​யார்?

சிரியாவின் Mediterranean கடலோரம், சுமார் 35 km கடலின் உள்ளே, 15 படையினருடன் பறந்த ரஷ்யாவின் Ilyushin II-20 வகை வேவு பார்க்கும் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. திங்கள் வீழ்ந்த இந்த விமானம் இதுவரை கண்டு கொள்ளப்படவில்லை. அத்துடன் யார் இந்த விமானத்தை சுட்டது என்பதுவும் இதுவரை அறியப்படவில்லை. . ஆரம்பத்தில் இஸ்ரேல், சிரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் மீது சந்தேகம் கொண்டிருந்தாலும், தொடர்ச்சியாக நிகழ்ந்த பல சம்பவங்கள் இந்த விமான வீழ்ச்சிக்கு […]