செங்டு (ChengDu) என்ற சீன நகரில் உள்ள அமெரிக்க முகவரகத்தை மூடுமாறு வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளது. இது அண்மையில் அமெரிக்கா சீனாவின் Houston முகவரகத்தை மூடுமாறு உத்தரவிட்டதற்கு பதிலடியாக. Chengdu சீனாவின் Sichuan மாநிலத்தில் தலைநகர் ஆகும். இந்த முகவரகமே திபெத் பகுதிக்கும் பொறுப்பு. . பொதுவாக இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் அல்லது யுத்தத்துக்கு நிகரான நிலையிலேயே மற்றைய நாட்டி தூதுவரகத்தை அல்லது முகவரத்தை மூட கட்டளையிடும். ஆனால் ரம்ப் அரசு அரசியல் […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் அமைத்துள்ள சீன முகவரகத்தை (Consulate General) மூடுமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியறவு திணைக்களம் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளின் உச்சத்தை இந்த உத்தரவு காட்டுகிறது. . ஜூலை 24 ஆம் திகதிக்கு முன் அனைத்து பணியாளர்களும் மேற்படி நிலையத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றும் மேற்படி உத்தரவு கூறியுள்ளது. . இதனால் விசனம் கொண்டுள்ள சீனா, மேற்படி உத்தரவு நீக்கப்படாவிடின் சீனா பதில் […]
அமெரிக்கா மீண்டும் சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு Artemis என்று பெயர் இடப்பட்டு உள்ளது. . இந்த திட்டத்தில் இணைய கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், இஸ்ரேல், இந்தியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. . அத்துடன் அமெரிக்கா ரஷ்யாவையும் இந்த திட்டத்தில் இணைக்க விரும்புகிறது. அதற்கான அழைப்பை NASA விடுத்து இருந்தாலும், ரஷ்யா இணையமறுத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரசியல் அணி சேர்ப்பு இது என்கிறது ரஷ்யா. […]
ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் லிபியா (Libya) சண்டையில் ஈடுபட்டுள்ள வெளிநாடுகளுக்கு சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்த எச்சரிக்கை லிபியா சண்டைக்கு உதவுவோர் மீது பொருளாதார தடைகள் விதிக்க உள்ளதாகவும் கூறி உள்ளது. . இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் லிபியா சண்டைக்கு உதவும் பின்னணி நாடுகளில் பிரான்சும் ஒன்று. மேற்படி நாடுகள் விடுத்த அறிக்கையில் வெளிநாடுகளின் பங்கை குறிப்பிட்டு, அவற்றை சாடி இருந்தாலும், அவ்வாறு லிபியாவில் தலையிடும் நாடுகள் எவை என்பதை குறிப்பிடவில்லை. அவர்களுக்கே […]
நியோவைஸ் (Neowise, C/2020 F3) என்ற வால்வெள்ளியை (comet) வரும் சில நாட்களில் இலகுவாக காணக்கூடியதாக இருக்கும். பூமியின் மத்திய கோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகள் மட்டுமே இதை காணக்கூடியதாக இருக்கும். மத்திய கோட்டுக்கு தெற்கே உள்ள அஸ்ரேலியா போன்ற நாடுகள் காண முடியாது. . இந்த வால்வெள்ளி வரும் 23 ஆம் திகதி (ஜூலை 23) பூமிக்கு அண்மையில் செல்லும். அப்பொழுது இது பூமியில் இருந்து சுமார் 103 மில்லியன் km தொலைவில் இருக்கும். இதன் […]
Pathao மற்றும் Gokada ஆகிய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் CEO பதிவில் இருந்த Fahim Saleh (வயது 33) என்பவரை அவரின் நியூ யார்க் அடுக்குமாடியில் கொலை செய்த கொலையாளி உடலை துண்டாடியும் உள்ளார். மரணித்த Saleh பங்களாதேசத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர். இக்கொலை தொடர்பாக 21 வயதுடைய Tyrese Haspil என்ற மரணித்தவரின் உதவியாளர் (executive assistant) கைது செய்யப்பட்டு உள்ளார். Haspil ஒரு கருப்பு இனத்தவர். . Saleh பங்களாதேசம், நேபாள், ஆகிய நாடுகளில் […]
இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் அடையாளம் காணப்பட்ட கரோனா நோயாளிகள் தொகை 1 மில்லியன் (1,000,000) ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,000 புதிய கரோனா தொற்றியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உலக அளவில் 3ஆவது அதிகூடிய கரோனா தொற்றியோர் தொகையை இந்தியா கொண்டுள்ளது. அத்துடன் 25,000 பேருக்கும் மேலான தொகையினர் இந்தியாவில் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். . மார்ச் மாதம் இந்தியா மக்கள் நடமாட்டத்தை கடுமையாக முடக்கி இருந்தாலும், ஜூன் மாதம் […]
இந்தியாவின் எதிர்ப்புக்கும் மத்தியில் சீனாவின் முதலீட்டுடன் பாகிஸ்தான் இன்று Diamer Bhasha என்ற நீர்மின் அணையை நிர்மாணிக்கும் வேலைகளை ஆரம்பித்து உள்ளது. இந்த நீர்மின் அணைக்கு சுமார் $8 பில்லியன் செலவாகும் என்றும் கூறப்படுகிறது. . இன்றைய ஆரம்ப விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன தூதுவர் ஆகியோர் சமூகமாக இருந்தனர். . இந்து நதியின் குறுக்கே அமையவுள்ள இந்த நீர்மின் அணை பாகிஸ்தானின் கட்டுப்பாடில் உள்ள காஸ்மீர் பகுதியில் உள்ளதால் இந்தியா விசனம் கொண்டுள்ளது. […]
ஈரானும், சீனாவும் 25 ஆண்டு கால பொருளாதரார, இராணுவ உறவு ஒன்றுக்கு திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் சீனாவுக்கு மலிவு விலையில் ஈரானின் எண்ணெய் கிடைக்க வழி செய்யும். பதிலுக்கு சீனா சுமார் $400 பில்லியன் பெறுமதியை ஈரானில் 25 ஆண்டு காலத்தில் முதலிடும். . அவ்வாறு ஒரு திட்டம் நடைமுறைக்கு வருமானால், அமெரிக்காவின் ஈரான் எதிர்ப்பு திட்டம் செயலிழந்து விடும். அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவுக்கும் இது ஒரு பாரிய பின்னடைவு ஆகும். . 2015 […]
சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei யின் தயாரிப்புகளுக்கு பிரித்தானியா முற்றாக தடை விதிக்கிறது. குறிப்பாக Huawei நிறுவனத்தின் 5G தயாரிப்புகளே இந்த தடைக்கு காரணம். . முன்னர் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத இடங்களில் தனது தயாரிப்புகளை Huawei விற்பனை செய்யலாம் என்று பிரித்தானியா கூறி இருந்தது. ஆனாலும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் அழுத்தம் காரணமாக தற்போது Huawei பிரித்தானியாவில் முற்றாக தடை செய்யப்படுகிறது. . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானியா அமெரிக்காவுடன் புதிய […]