இந்திய விமானப்படை முகாம் மீது தாக்குதல்

இந்தியாவின் வடக்கே Pathankot என்ற இடத்தில் உள்ள பெரியதோர் இந்திய விமானப்படை முகாமை அடையாளம் காணப்படாத குழு ஒன்று உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியவில் தாக்கியுள்ளது. தாம் நிலைமையை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்திய படை உடனடியாக அறிவித்திருந்தாலும், திங்கள் வரை நிலைமை முற்றாக படையின் கட்டுப்பாட்டுள் வரவில்லை. . இந்திய அதிகாரிகள் இந்த குழு பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammed என்ற குழுவாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். தாக்குதலின் போது இக்குழு […]

உக்கிரம் அடையும் ஈரான்-சவுதி முறுகல்

சியா இஸ்லாமியரான ஈரானுக்கும் சுனி இஸ்லாமியரான சவுதிக்கும் இடையேயான முறுகல் நிலை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. இந்த இரு தரப்புக்கும் இடையேயான முரண்பாட்டு போக்கே சிரியா மற்றும் யேமன் போன்ற நாடுகளில் கொடூர யுத்தங்கள் இடம்பெற காரணமாகும். . சனிக்கிழமை சவுதி அரசு சியா இஸ்லாமிய தலைவரான Nimr al-Nimr உட்பட 47 சியா இஸ்லாமியருக்கு மரணதண்டனை வழங்கி இருந்தது. 2011 ஆம் ஆண்டளவில் மத்தியகிழக்கு எங்கும் பரவிய Arab Spring என்ற மக்கள் புரட்சிகளின்போது இவர்கள் […]

டுபாய் ஹோடேலில் பெரும் தீ

2016 ஆம் ஆண்டை வரவேற்க டுபாய் 1.6 தொன் நிறை வெடிமருந்துகள் கொண்ட வானவேடிக்கையை அங்குள்ள உலகின் அதியுயர் கட்டமான Burj Khalifa செய்ய திட்டமிட்டிருந்தது. அதை பார்க்க பல்லாயிரக்கணக்கனோர் அப்பகுதில் நிறைந்திருந்தனர். அத்துடன் 400,000 LED விளக்குகளும் பயன்படுத்தப்பட இருந்தது. . ஆனால் உள்ளூர் நேரம் இரவு 12:00 ஆகுமுன், Burj Khalifa இல் வானவேடிக்கை தொடங்குமுன் அக்கட்டடத்துக்கு அருகில் உள்ள Address Downtown ஹோட்டல் என்ற ஆடம்பர ஹோட்டலை பெரும் தீ பிடித்துள்ளது. இத்தீக்கான […]

அமெரிக்காவில் 0.25% வட்டி அதிகரிப்பு

சுமார் 9 வருடங்களின் பின் அமெரிக்காவின் Federal Reserve தனது மத்திய அரச வட்டியை 0.25% ஆல் அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக இந்த வட்டி ஏறக்குறை பூச்சியமாகவே இருந்து வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்து உள்ளதால் அந்நாட்டின் மத்திய திறைசேரி தனது வட்டியை .25% ஆல் அதிகரித்துள்ளது. . இந்த வட்டி வீத அதிகரிப்பு அமெரிக்கர் வீடு, கார் போன்ற பெரும் செலவுகளுக்கு கடன் பெறுவதை சற்று கடினப்படுத்தும். ஆனால் அதேவேளை அமெரிக்க டொலாரின் மதிப்பு […]

அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கும் சீனர்

முன்னொரு காலத்தில் சீனர் வறியவர் ஆக இருந்திருந்தாலும் இப்போது அங்கு பெருமளவு செல்வந்தர் உள்ளனர். அவ்வகை செல்வந்தர் எவ்வாறு அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கிறார்கள் என்பதை விபரித்து New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு வீடுகளும் இவ்வகையில் செல்வந்த சீனர்களால் கொள்வனவு செய்யப்படுகிறது. . தற்போது சராசரியாக சீன நாட்டவர் கொள்வனவு செய்யும் அமெரிக்க வீடு ஒன்று $831,800 பெறுமானம் கொண்டதாகும் என இக்கட்டுரை […]

அமெரிக்காவில் நகரும் நகர்கள்

சில சந்ததிகளுக்கு முன் செல்வம் நிறைந்த நகர்களாக இருந்த பல அமெரிக்க நகர்கள் இன்று சுருங்கி அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. உதாரணமாக 1950 ஆம் ஆண்டு அளவில் அமெரிக்காவின் செல்வம் நிறைந்த ஒரு நகராக இருந்த Detroit என்ற Michigan மாநில நகர் இன்று பொருளாதார, சனத்தொகை அழிவுகளால் bankruptcy அடைந்த நகர். இவ்வாறு பல நகர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, அதன் காரணமாக மக்கள் வெளியேற சனத்தொகையை இழந்து, அதன் காரணமாக பொருளாதாரத்தை இழந்து அழிகின்றன. […]

ரஷ்ய யுத்த விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியது

ரஷ்யாவின் Su-24 வகை யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் கூற்றின்படி இந்த யுத்த விமானம் துருக்கி எல்லையில் இருந்து 1 km தூரம் சிரியாவின் உள்ளே இடம்பெற்றுள்ளது. Cold-war கால எதிரிகளான ரஷ்யாவும், துருக்கியும் மீண்டு முறுகல் நிலையை அடைந்துள்ளன. . இந்த தாக்குதலை “முதுகில் குத்தல்” என்றுள்ளார் ரஷ்யாவின் பூட்டின். தாம் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேவேளை இருதரப்பையும் அமைதி காக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டுள்ளன. […]

மருத்துவ நிறுவனங்கள் Pfizer, Allergan $160 பில்லியன் இணைவு

அமெரிக்காவை தளமாக கொண்ட Pfizer என்ற மருந்துகள் தயாரிப்பு நிறுவனமும், அயர்லாந்தை (Ireland) தளமாக கொண்ட Allergan என்ற மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமும் இணைவதாக இன்று திங்கள் அறிவித்துள்ளன. இரண்டும் இணைந்த புதிய நிறுவனம் $160 பில்லியன் ($160,000,000,000) பெறுமதியானதாக இருக்கும். இணைவால் தோன்றும் புதிய நிறுவனத்தின் பெரும்பாலான வர்த்தகம் அமெரிக்காவில் நடைபெற்றாலும் அதன் தலைமையகம் அயர்லாந்திலேயே இருக்கும். இவ்வாறு இந்த நிறுவனங்கள் இணைவதன் உள்நோக்கமே அமெரிக்காவின் வரிகளில் இருந்து தப்புவதே. . அமெரிக்காவின் பல பெரிய […]

IS உருவாக வழிசெய்தவர்கள்

IS என்ற பயங்கரவாத இயக்கம் இந்த மாதம் 13ம் திகதி பாரிஸ் நகரில் 129 பொதுமக்களை படுகொலை செய்ததுடன் சுமார் 100 பேர்களை காயப்படுத்தியும் இருந்தது. அதற்கு முதல் நாள் இக்குழு லெபனானின் பெய்ரூத் நகரில் இரண்டு தற்கொலை தாக்குதல் மூலம் 43 பெயர்களை படுகொலை செய்திருந்தது. இந்த தாக்குதலுக்கு சில தினங்கள் முன்னர் ரஷ்யாவின் விமானம் ஒன்றை எகிப்தின் வான்வெளியில் குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் வீழ்த்தி இருந்தது. அவ்விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருந்தனர். […]

சிரியாவுக்கு யுத்த நிறுத்தம் வருகிறதாம்

மேற்கும், சவுதி போன்ற மேற்கு சார் அரபு நாடுகளும் தமக்கு உடன்படாத சிரியாவின் தலைவர் Assad தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு தமது கைப்பொம்மை அரசை அமைக்க ஒரு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கி இருந்தனர். யுத்தம் நீண்டு சென்றபோதும், பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட போதும், Assad பதவி விலகும்வரை யுத்த நிறுத்தம் இல்லை என்றும் பிடிவாதமாக இருந்தனர் இவர்கள். . ஆனால் பிள்ளையார் பிடிக்க பூதம் வந்ததுபோல் இந்த யுத்தத்தால் உருவான ஆட்சியில்லாத பாகங்களில் தோன்றியது IS என்ற பயங்கரவாத […]