அமெரிக்கா போகிறார் வியட்நாம் கம்யுனிஸ்ட் தலைவர்

வியட்நாமின் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் Nguyen Phu Trong (General Secretary of Communist Party of Vietnam) அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக Saigon Times Daily இன்று தெரிவித்துள்ளது. Nguyen Phu Trong க்கான அழைப்பை அமெரிக்க வெளியுறவு செயலாளர் John Kerry கடந்த சனிக்கிழமை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. . வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சி போராளிகளை எதிர்த்து போராட முடியாத அமெரிக்கா 40 வருடங்களுக்கு முன்னர் வியட்நாமில் இருந்து பின்வாங்கி இருந்தது. இப்போரில் 58,303 […]

Indo-European மொழி பரம்பல்?

. இந்த மொழி பரம்பல் சரியானது என்றால், பெருமளவு இன்றைய இந்தியர்கள் வந்தேறு குடிகளாக இருக்குமோ? . அப்படியானால் Mohenjo Daro – Harappa வழி வந்தோர் யாரோ? .  

சீனாவில் 458 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது

சீனாவின் பழம்பெரு நகரான நான்ஜிங் (NanJing) இலிருந்து Yangtze ஆறுவழியே சீனாவின் உட்பகுதில் உள்ள மற்றுமோர் பழம்பெரும் நகரான சொங்சிங் (ChongQing) நோக்கி உல்லாசப்பயணிகளை ஏற்றிவந்த உல்லாச கப்பல் ஒன்று 458 நபர்களுடன் மூழ்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அரச தவுகளின்படி இதில் 405 உல்லாச பயணிகள், 5 உல்லாச பயண நடாத்துனர், மற்றும் 48 பணியார்ளர் இருந்துள்ளனர். கப்பல் ஹுபேய் (Hubei) மாகாண பகுதில் பயணிகையிலேயே இடம்பெற்றுள்ளது. […]

ஜேர்மன் பிறப்பு வீதம் உலகிலேயே மிககுறைந்தது

BDO என்ற ஜேர்மன் நாட்டு தரவு நிறுவனமும் Hamburg Institute of Economics நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி உலகத்திலேயே மிக குறைந்த பிறப்பு வீதம் கொண்ட நாடாக தற்போது ஜேர்மன் உள்ளது. இதுவரை ஐரோப்பாவில் மட்டும் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்டிருந்த ஜேர்மன் இப்போது உலக அளவில் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்டுள்ளது. . ஜேர்மனில் பிறப்பு வீதம் 1000 க்கு 8.2 ஆக உள்ளது. அதேவேளை உலகில் அதி கூடிய பிறப்பு […]

தியானம் மனிதனை அமைதிப்படுத்துகிறது, கூறுவது விஞ்ஞானம்

இன்று Washington Post பத்திரிக்கையில் Sara Lazar என்ற நரம்பியல் வைத்தியர் ஒருவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியானத்துக்கும் தற்போதைய விஞ்ஞான விளக்கங்களுக்கும் முடிச்சு போட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிபுகளின்படி தியானம் மனித மூளையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அந்நபரை அமைதி கொள்ள வைக்கிறதாம். . Sala Lazar தற்போது Massachusetts General Hospital மற்றும் Harvard Medical School களில் நரம்பியல் வைத்தியராக கடமை புரிபவர். இவர் Boston marathon ஓட்டப்போட்டிக்கு தன்னை தயார் […]

அமெரிக்க Broadcomமை சிங்கப்பூர் Avago கொள்வனவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்படாது Broadcom என்ற semiconductor நிறுவனம். அண்மை காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட smart phone களில் அதிகமானவை Broadcom chip ஐ கொண்டுள்ளன. இந்த நிறுவனத்தை $17 பில்லியன் பணத்தையும் $20 பில்லியன் பெறுமதியான பங்கையும் கொடுத்து கொள்வனவு செய்வதாக சிங்கப்பூர் chip தயாரிக்கும் நிறுவனமான Avago தெரிவித்துள்ளது. அதாவது இந்த கொள்வனவின் மொத்த பெறுமதி U$ 37 பில்லியன் ஆகும். . அவ்வாறு இணைந்த நிறுவனத்தின் பெறுமதி சுமார் […]

ஊழல் நிரம்பிய FIFA

உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான FIFAவின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலர் ஊழல்/இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். FIFAவின் முன்னாள் உபதலைவரான Jack Warner இன்று Trinidad and Tobago என்ற நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். . Warner கைது செய்யப்பட முன் வேறு 6 முன்னாள் FIFA அதிகாரிகள் சூரிச் (Zurich) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் தற்போதைய […]

2.5 மில்லியன் ஆஸ்திரேலியர் வறுமைகோட்டின் கீழே

சுமார் 2.5 மில்லியன் ஆஸ்திரேலியர் வறுமைகோட்டின் கீழே வாழ்வதாக பொதுநல சேவை இயக்கமான Salvation Army தெரிவித்துள்ளது. வறுமைப்பட்டோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உதவி வழங்குவது Salvation Armyயின் சேவைகளில் ஒன்றாகும். இந்த கணிப்பு 25 வயது முதல் 59 வயது வரையான 2400 ஆஸ்திரேலியர்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டதாகும். . ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை 23 மில்லியன் ஆகும். அதாவது 10% க்கும் அதிகமானோர் அங்கு வறுமைகோட்டின் கீழ் வாழ்கிறார்கள். . இவ்வாறு வறுமையில் வாழ்வோர் குடியிருப்பு தொகையை […]

இந்தியாவில் கடும்வெப்பம், 500 வரை மரணம்

இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடும்வெப்பநிலை காரணமாக சுமார் 500 நபர்கள் மரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவு மரணங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலேயே இடம்பெற்றுள்ளன. தலைநகர் டில்லியிலும் பெருமளவில் மரணமடைந்துள்ளனர். கட்டிட வேலை செய்வோர், முதியோர், வீதிகளில் உறங்குவோர் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். . இந்தியாவின் தலைநகர் டில்லியில் வெப்பநிலை 45.5 C ஐ அடைந்துள்ளது. மற்றைய சில இடங்களில் வெப்பநிலை சுமார் 47 C ஆகியிருக்கிறது. . அரசு மக்களை அதிகம் நீர் அருந்துமாறும், […]

ஜப்பான் Mitsubishi, இந்திய Mahindra கூட்டுறவு

விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜப்பானின் Mitsubishiயும் இந்தியாவின் விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான Mahindraவும் கூட்டாக செயல்பட முன்வந்துள்ளன, அதன் பிரகாரம், Mahindra, Mitsubishi Agricultural Machineryயின் 33% பங்கினை கொள்வனவு செய்யும். இந்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$ 25 மில்லியன் ஆகும். அதன்படி Mahindra, Mitsubishiயின் வடிவமைப்பில் உருவான நெல் நடும் இயந்திரங்கள் (rice planters) போன்றவற்றை தயாரித்து உலகவில் விற்பனை செய்யும். . ஜப்பானிய விவசாய முறை பல ஆசிய நாடுகளில் […]