அமெரிக்காவுக்கு இந்திய InfoSys $34 மில்லியன் தண்டம்

InfoSys இந்தியாவின் மிகப்பெரியதோர் software நிறுவனம். பெங்களூர், கர்நாடகாவில்தலைமையகத்தை கொண்ட இது உலகளவில் சுமார் 160,000 பணியாளர்களை கொண்டது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பணியாளர் உண்டு. இதன் வருட வருமானம் $7.3 பில்லியனுக்கும் அதிகம். நிகர இலாபம் $1.7 பில்லியனுக்கும் அதிகம். அண்மையில் இதன் அமெரிக்க பணியாளர் Jay Palmer சில உள்வீட்டு உண்மைகளை பகிரங்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து அமெரிக்க அரசு விசாரணைகளை தொடங்கியது. அமெரிக்காவில் 3 வருடம் வரை பணியாற்ற விரும்பும் இந்திய தொழிநுட்ப […]

அமெரிக்கா-சவூதி முறுகல்

சவுதி அரேபிய அமெரிக்காவின் நீண்டகால நண்பன். நண்பன் என்பதைவிட சந்தர்ப்பவாத கூட்டாளிகள் எனலாம். சவுதிக்கான இராணுவ தளபாடங்கள், யுத்த விமானங்கள், எண்ணெய் உற்பத்திக்கான அறிவுகள், இயந்திரங்கள் எல்லாமே பெருமளவில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டது. அதேவேளை சவுதி அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தியது. அத்துடன் அமெரிக்காவின் ‘war on terror, இல் சவுதி ஒரு முக்கிய பங்காளி. ஆனால் அவர்களிடையே இப்போது முறுகல் நிலை தேன்றியுள்ளது. சிரியாவில் நடைபெறும் யுத்தம் சுவுதி போன்ற நாடுகளாலேயே உருவாக்கப்பட்டது. சிரியாவின் தலைவர் அசாத், சுவுதியின் […]

இந்தியாவில் பாரிய வெங்காய தட்டுப்பாடு

சீனாவுக்கு அடுத்ததாக உலகில் அதிகம் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அத்துடன் வெங்காயம் இந்தியர்களின் சமையலில் ஓர் முக்கிய அங்கமாகும். இந்தியர்கள் வருடம் ஒன்றுக்கு சுமார் 16.5 மில்லியன் தொன் வெங்காயத்தை கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் வெங்காயத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பாரிய தட்டுப்பாடு காரணமாக ஒரு Kg வெங்காயத்தின் விலை Rs 100.00 வரைக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களின் முன் ஒரு Kg Rs 25.00 ஆக இருந்துள்ளது. இந்த அதீத […]

சீனாவிடம் துருக்கி ஏவுகணை கொள்வனவு, NATO கவலை

துருக்கி ஓர் NATO அணி நாடு. ஆனால் துருக்கி NATOவின் மறுதரப்பு நாடான சீனாவிடம் இருந்து பாரிய ஏவுகணை கட்டமைப்பை (missile-defense சிஸ்டம்) கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. வழமையாக அமெரிக்கா போன்ற NATO அணி நாடுகளிடம் இருந்து மட்டுமே பாரிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் துருக்கி இம்முறை சீனாவை நாடியிருப்பதையிட்டு அமெரிக்கா உட்பட பல NATO நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த ஏவுகணை உடன்படிக்கை சுமார் U$ 3.5 பில்லியன் பெறுமதி கொண்டதாக இருக்கும். சீனாவின் China […]

ஜேர்மனியின் தலைமையையும் ஒட்டுக்கேட்கும் அமெரிக்கா?

சீனா போன்ற நாடுகள் தம்மை உளவு பார்ப்பதாக குறைகூறும் அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளையே உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (ஐப்பசி 23, 2013) ஜேர்மனியின் தலைவி Angela Merkel அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து வெறுப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் பிரெஞ்சு அரசுடன் அமெரிக்கா உளவு விடயம் சம்பந்தமாக சமரசம் பேசவேண்டி இருந்தது. மார்கழி 10, 2013 முதல் தை 8, 2013 வரையில் சுமார் […]

ரஷ்யாவில் விழுந்த விண்கல் நிறை 570 kg

இந்த வருடம் மாசி மாதம் பெரியதோர் விண்கல் ரஷ்யாவின் Chelyabinsk என்ற நகரின் அண்மையில் வீழ்ந்திருந்தது.இன்று புதன்கிழமை அந்த கல்லை Chebarkul வாவிக்கு அடியில் இருந்து மீட்டுள்ளனர். இந்த கல் வீழ்ந்தபோது பனிப்பாறை படர்ந்த வாவியின் மேற்பரப்பில் 20 அடி துளையை ஏற்படுத்தி இருந்தாலும் சுமார் 40 அடி ஆழத்தில் 8 அடி சதுப்புக்குள் புதைத்திருந்த இந்த கல்லை கண்டுபிடித்து எடுக்க 7 மாதங்கள் வரை எடுத்துள்ளது. இதை வாவிக்கு வெளியே எடுக்கும்போது 3 துண்ட்டுகளாக உடைந்துள்ளது. […]

சிறுகதை: தோசை

சிறுகதை: தோசை

“எழுநூற்றி ஐம்பது, அல்லது சுருக்கமாக ஐம்பது. இது யாழ்ப்பாண குடாநாட்டின் முன்னிலை பஸ் இலக்கம். அந்த பஸ்ஸில் ஒரு மூலையில் வாத்தியார். அவரும் யாழ்ப்பாண குடா நாட்டின் முன்னிலை பிரசைகட்கு ஒரு உதாரணம். அவரின் மடியில் கூடை நிரம்ப மீன், காய்கறி. வாத்தியார் அருகில் ஒரு வாலிபன்.

எண் தமிழ்

எண் தமிழ்

க. நீலாம்பிகை“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு”“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” மேல் கூறிய மூத்தோர் வாக்குகள் மூலம் பண்டைய தமிழர் எழுத்தறிவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சம அளவில் எண் அறிவுக்கும் கொடுத்திருந்தமையை அறியக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமன்றி இன்று உலகெங்கும் பாவனையில் உள்ள நவீன எண்களை (modern decimal number system) பண்டைய தமிழரே உலகிற்கு வழங்கியிருக்கலாம் என கருத பல ஆதாரங்கள் உண்டு. முதலாவதாக நாம் இலக்கங்களை அழைக்கும் முறையை […]

ஜப்பானின் கடன் 1000 ட்ரில்லியன் yen

முதல் தடவையாக ஜப்பானின் கடன் தொகை ஆயிரம் ரில்லியன் யென்னை (1000 trillion Yen = U$ 10.4 trillion) தாண்டியுள்ளது என்று ஜப்பானிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஜப்பானிய பிரசையும் 7.92 மில்லியன் yen (U$ 82,000) கடனாளியாவார். இத்தொகையில் 830 trillion அரச bond களும் அடங்கும். ஜப்பானிய நிதி அமைச்சின் தரவுகளின்படி கடந்த சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையான காலத்தில் மட்டும் ஜப்பானின் கடன் தொகை U$ […]

நுரையீரல் புற்றுநோயை தடுக்குமாம் உள்ளி

வாரம் இருமுறை பச்சையாக உள்ளி (வெள்ளைப்பூடு, garlic) உட்கொண்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய்வாய்ப்படுவதை 44% ஆல் குறைக்கலாம் என்று சீன ஆய்வு ஒன்று கணித்துள்ளது. சீனாவின் Jiangsu மாநிலத்தில் உள்ள Cancer Prevention Research என்ற அமைப்பே இந்த ஆய்வை தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருந்த இந்த ஆய்வு சுமார் 4,500 சுகதேக நபர்களிடம் இருந்தும் 1,424 நுரையீரல் நோயாளிகளிடம் இருந்தும் தரவுகளை பெற்றிருந்தது. உள்ளியை கடிக்கும்போது அல்லது […]