சீனாவில் இருந்து ஈரான் பறந்த மர்ம விமானங்கள் 

சீனாவில் இருந்து ஈரான் பறந்த மர்ம விமானங்கள் 

கடந்த வெள்ளி 13ம் திகதி இஸ்ரேல் ஈரானை தாக்கிய பின் பல பொருட்களை காவும் மிகப்பெரிய Boeing 747 வகை cargolux விமானங்கள் 15ம், 16ம், 17ம் திகதிகளில் சீனாவில் இருந்து ஈரான் சென்றுள்ளன. இந்த மர்ம விமானங்கள் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குழம்ப வைத்துள்ளன. Flight CLX 9877 போன்ற cargolux நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து Luxembourg செல்வதாக அடையாளமிட்டு பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் பின் இவை Kazakhstan, Uzbekistan, […]

யுத்தத்தை வெல்ல ரம்பின் உதவியை நாடும் இஸ்ரேல் 

யுத்தத்தை வெல்ல ரம்பின் உதவியை நாடும் இஸ்ரேல் 

இஸ்ரேல் ஈரான் மீது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த தாக்குதல்கள் சுமார் ஒரு கிழமையாக இரு தரப்பிலும் பாரிய இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் யுத்தத்தை தனது வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் ரம்பின் உதவியை நாடுகிறது. குறிப்பாக மலைகளை குடைந்து நிலத்துக்கு கீழ் ஈரான் அமைத்துள்ள அணுமின் உலைகளை தாக்கி அழிக்க இஸ்ரேலால் முடியவில்லை. ஆனால் அமெரிக்காவிடம் உள்ள GBU-57 என்ற 30,000 இறாத்தல் எடை கொண்ட 20 அடி நீள குண்டு சுமார் 200 அடி […]

கனடா, இந்தியா மீண்டும் நல்லுறவில், சீக்கிய கொலை பின்னுக்கு

கனடா, இந்தியா மீண்டும் நல்லுறவில், சீக்கிய கொலை பின்னுக்கு

கனடாவும், இந்தியாவும் மீண்டும் தமது தூதரகங்களை இயக்க செவ்வாய்க்கிழமை இணங்கி உள்ளன. இந்தியா மீது கனடா முரண்பட காரணமாக இருந்த சீக்கிய படுகொலை விசாரணை பின்தள்ளப்பட்டு உள்ளமை தெரிகிறது. இரண்டு நாடுகளும் புதிய தூதர்களை நியமனம் செய்யவும் இணங்கி உள்ளன. கனடியரான Hardeep Singh Nijjar என்ற புஞ்சாப் மாநில பிரிவினை ஆதரவாளியை 2023ம் ஆண்டு கனடாவின் வான்கூவர் நகரில் வைத்து இந்தியா படுகொலை செய்திருந்தது என்ற பாரதூர குற்றச்சாட்டை கனடா கைவிட்டு உள்ளது. ஜூன் 15 முதல் […]

இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்கள் தொடரும் யுத்தம் 

இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்கள் தொடரும் யுத்தம் 

இஸ்ரேல் மிக நீண்ட காலமாக திட்டமிட்டு செய்த ஈரான் மீதான தாக்குதல் இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்களாக தொடர்கின்றது. அதனால் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீண்டும் இஸ்ரேலின் உதவிக்கு வரவேண்டிய நிலை ஏற்படலாம். ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலில் பலியானோர் தொகை 24 ஆக அதிகரித்துள்ளது மட்டுமன்றி ஈரான் தொடர்ந்தும் இஸ்ரேலை தாக்கி வருகிறது. ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பு முற்றாக தடுக்க முடியாது உள்ளது. ஈரான் தரப்பில் 224 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் இரு தரப்பிலும் சொத்துக்களின், […]

காசா, லெபனான் போன்று இஸ்ரேலிலும் இடியும் கட்டிடங்கள் 

காசா, லெபனான் போன்று இஸ்ரேலிலும் இடியும் கட்டிடங்கள் 

இதுவரை காலமும் இஸ்ரேலின் மேலோங்கிய ஆயுத கையிருப்பு காரணமாக காசா, லெபனான், சிரியா போன்ற இடங்களிலேயே குடியிருப்பு மற்றும் பொது கட்டிடங்கள் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக இடிந்து தரைமட்டம் ஆகின. ஆனால் ஈரானின் பதிலடி தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக இஸ்ரேல் வீடுகளும், கடிதங்களும் முதல் முறையாக தரைமட்டம் ஆகி வருகின்றன. வெள்ளிக்கிழமை ஈரானை இஸ்ரேல் திடீரென தாக்கிய பின் ஈரான் செய்யும் பதிலடி தாக்குதல்கள் இஸ்ரேலோ, மேற்கோ எதிர்பாராத அளவில் இஸ்ரேலில் அழிவுகளை ஏற்படுத்துகின்றன. ஈரான் இஸ்ரேலின் தடுப்பு ஏவுகணைகளுக்கு அகப்படாத புதிய […]

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் 

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் 

இஸ்ரேல் ஈரான் மீது வெள்ளி செய்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் Tel Aviv, Jerusalem போன்ற இடங்களில் பல ஈரானிய ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் முழு சேத விபரம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் கூறியுள்ளார். இஸ்ரேலின் Gush Dan பகுதியில் 34 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னைய சண்டையில் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் தமது யுத்த விமானங்கள், ஏவுகணைகள் கொண்டு தடுத்து இருந்தன. […]

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா மௌனம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா மௌனம்

ஈரான் நேரப்படி வெள்ளி ஜூன் 13 அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை செய்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Katz தாம் preemptive தாக்குதல் செய்ததாக கூறியுள்ளார். ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) பல குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்தாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து எதையும் இதுவரை கூறவில்லை. இந்த தாக்குதலில் தாம் ஈடுபடவில்லை என்று அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் இடம்பெற இருந்தமை முன்கூட்டியே […]

242 பேருடன் Air India விமானம் விபத்தில், இது ஒரு Boeing 787

242 பேருடன் Air India விமானம் விபத்தில், இது ஒரு Boeing 787

Air India விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று (flight AI171) இந்தியாவின் குஜராத் மாநில அகமதாபாத் (Ahmedabad) நகரில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் (Gatwick) நகருக்கு பயணிக்க ஏறும்போது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:38 மணிக்கு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்துக்கு சுமார் 250 பேர் வரை பலியாகினர்.  விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. விபத்துக்கு உள்ளான Boeing 787-8 Dreamliner வகை விமானம் இதுவரை காலமும் பாரிய விபத்து எதிலும் அகப்பட்டு இருக்கவில்லை. இவ்வகை விமானம் […]

கேரளா அருகே இரண்டாம் கப்பல் தீ பற்றியது 

கேரளா அருகே இரண்டாம் கப்பல் தீ பற்றியது 

கொழும்பு துறைமுகத்தில் இருந்து மும்பாய் சென்ற 269 மீட்டர் நீளம் கொண்ட MV Wan Hai என்ற கொள்கலன் கப்பல் தென் இந்திய கேரளா மாநிலத்துக்கு அருகே பயணிக்கையில் தீ பற்றிக்கொண்டது. திங்கள் இந்த கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்று வெடித்ததாகவும் அதன் பின் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் பின் 18 பணியாளர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேரின் இருப்பிடம் இதுவரை அறியப்படவில்லை. இந்த நால்வரில் 2 பேர் தாய்வான் பணியாளர்கள், ஒருவர் பர்மா […]

உதவி கப்பலை தடுத்தது இஸ்ரேல், Greta Thunberg கைது

உதவி கப்பலை தடுத்தது இஸ்ரேல், Greta Thunberg கைது

காசா நோக்கி உணவு, மருந்து போன்ற உதவிகளுடன் சென்ற கப்பலை தடுத்த இஸ்ரேல் அதில் பயணித்த Greta Thunberg போன்ற Freedom Flotilla Coalition (FFC)  தொண்டர்களை கைது செய்துள்ளது. கப்பலையும் அதில் இருந்த பொருட்களையும் பறித்த இஸ்ரேல், அதில் பயணித்தோர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த கப்பலை சர்வதேச கடலில் வைத்து இஸ்ரேல் தாக்கியதாக FFC கூறியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள Madleen என்ற இந்த கப்பல் இத்தாலியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தது.

1 7 8 9 10 11 365