Channel 4 மீது கோத்தபாய பாய்ச்சல்

Channel 4 மீது கோத்தபாய பாய்ச்சல்

முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயா ராஜபக்ச Channel 4 செய்தி சேவை மீது பாய்ந்து தனது நீண்டகால மௌனத்தை கலைத்துள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயாவை சனாதிபதி ஆக்கும் நோக்கிலேயே செய்யப்பட்டது என்ற தொனியில் Channel 4 வெளியிட்ட ஆக்கமே கோத்தபாயாவை மூர்க்கம் அடைய செய்துள்ளது.

Channel 4 ஒரு ராஜபக்ச எதிர்ப்பு சேவை என்று கோத்தபாய சாடியுள்ளார்.

தான் 2015ம் ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியை விட்டு விலகிய பின் 2019ம் ஆண்டு வரை மேஜர் ஜெனரல் Suresh Salley யை சந்திக்கவில்லை என்றுள்ளார் கோத்தபாயா.

அத்துடன் 2016ம் ஆண்டு Suresh Salley இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து விலக்கப்பட்டு இருந்தார் என்றும் கோத்தபாயா கூறியுள்ளார்.