Commonwealth போட்டிக்கு சென்ற 10 இலங்கையர் தலைமறைவு

Commonwealth போட்டிக்கு சென்ற 10 இலங்கையர் தலைமறைவு

இலங்கையில் இருந்து பிரித்தானியாவின் Birmingham நகரில் நடைபெறும் Commonwealth 2022 போட்டிக்கு சென்ற இலங்கையரில் இதுவரை 10 பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்த போட்டிகள் ஜூலை 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை நடைபெற்றன.

தலைமறைவு ஆகியோரில் 8 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள். இவருள் கரப்பந்தாட்ட வீரர், குத்துச்சண்டை வீரர், wrestlers, ஜூடோ வீரர் ஆகியோரும் அடங்குவர். அதில் 5 பேர் இலங்கை படைகளில் பணியாற்றியவர்.

தலைமுறை ஆகியவர் தமது பொதிகளை அவர்களின் தங்குமிடத்தில் கைவிட்டே சென்று உள்ளனர் என்று கூறுகிறார் இலங்கை அணியின் பேச்சாளர் கோபிநாத் சிவராஜா.

இலங்கை அணியில் 161 போட்டியாளரும், 51 அதிகாரிகளும் இருந்து உள்ளனர். இவர்களுக்கு 180 நாட்களுக்கு விசா வழங்கப்பட்டு உள்ளது. இவர்களின் கடவு சீட்டுக்கள் அதிகாரிகளின் கைவசம் உள்ளன. அதனால் இவர்கள் வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது.

தலைமறைவு ஆகியவருக்கு அப்பால் மொத்தம் 30 பேர் மட்டுமே தற்போது பிரித்தானியாவில் உள்ளனர் என்றும் ஏனையோர் ஏற்கனவே இலங்கை திரும்பி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இம்முறை இலங்கை 1 வெள்ளி பதக்கமும், 3 பித்தளை பதக்கங்களும் வென்று 31ம் இடத்தில் உள்ளது.

அஸ்ரேலியா மொத்தம் 178 பதக்கங்களை வென்று முதலாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 176 பதக்கங்களை வென்று 2ம் இடத்திலும், கனடா 92 பதக்கங்களை வென்று 3ம் இடத்திலும் உள்ளன.

இந்தியா 61 பதக்கங்களை வென்று 4ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 8 பதக்கங்களை வென்று 18ம் இடத்தில் உள்ளது.