Cruise கப்பலில் 800 பேருக்கு COVID தொற்று

Cruise கப்பலில் 800 பேருக்கு COVID தொற்று

சுமார் 4,600 பயணிகளுடன் செல்லும் The Majestic Princess என்ற உல்லாச பயணிகளை கடலில் காவும் (cruise) கப்பலில் 800 பேருக்கு Covid தொற்றி உள்ளமையால் அந்த கப்பல் சனிக்கிழமை அஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Circular Quay துறைக்கு சென்றுள்ளது.

ஏற்கனவே அஸ்ரேலியாவில் Covid மீண்டும் பரவும் வேளையில் இந்த கப்பல் நிலைமையை மேலும் உக்கிரமாக்கி உள்ளது. அஸ்ரேலியாவின் New South Wales பகுதியில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 19,800 புதிய Covid தொற்றாளர் அறியப்பட்டு உள்ளனர்.

இந்த cruise பயணம் மொத்தம் 12 தினங்களை கொண்டதாக இருந்தாலும், Covid தொற்று காரணமாக பயணம் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் அதிக அளவில் பயணிகள் தொற்றை அடைந்தாலும், இதுவரை எவரும் கடுமையான நிலைக்கு செல்லவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்ந்தும் விமானங்கள், cruise ஆகிய மூடிய இடங்களில் சுகாதார முறைகளை கையாளுதல், முக கவசங்கங்களை அணிதல் போன்ற செய்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

2020ம் ஆண்டு, Covid பரவலின் ஆரம்பத்தில், Ruby Princess என்ற cruise 600 Covid தொற்றாளருடன் சிட்னி நகர் வந்து அதில் 28 பேர் பலியாகி இருந்தனர்.